வெளிநாட்டில் டிடியை தூக்கி சுற்றிய பிரபலம்.. இவர் யார் தெரியுமா? மகிழ்ச்சியாக டிடி வெளியிட்ட பதிவு!
சென்னை: தொகுப்பாளராக பிரபலமான டி டி வெளிநாட்டில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரோடு ரிலீஸ் வீடியோ எடுத்திருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தொகுப்பாளர் என்று சொன்னதுமே ஒரு சிலர் முகம் டக்கென்று நினைவிற்கு வரும். அதில் டிடியும் ஒருவர். டிடி பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கிறார். அதிலும் சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியின் அடையாளமாகவே டிடி இருந்தார். அந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் அதிகமான நிகழ்ச்சிகளில் டிடி கலந்து கொண்டு இருக்கிறார்.

அதிலும் தொகுப்பாளினியாக பல பிரபலங்களை பேட்டி எடுத்திருக்கிறார். தெளிவான இவருடைய தமிழ் உச்சரிப்பு பலருடைய ஃபேவரிட். கல்லூரி பருவத்திலிருந்து தொகுப்பாளினியாக இருந்து வரும் டி டிக்கு சில வருடங்களுக்கு முன்பு அவருடைய மூட்டு பகுதியில் நடந்த தவறான அறுவை சிகிச்சையால் அவருக்கு கால் பகுதியில் அதிக வலி ஏற்பட்டது.
அதனால் மீண்டும் மீண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இப்போது அவரால் அதிகமான நேரம் நின்று கொண்டிருக்க முடியாது என்பதால் அவர் விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சிகளையும் செய்யவில்லை. அதே நேரத்தில் ஒரு சில பட இசை வெளியீட்டு விழா மற்றும் தனியார் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராகவும் தொகுப்பாளினியாகவும் டிடி பேசிக் கொண்டிருக்கிறார்.
அதுபோல சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடைய திருமண வாழ்க்கை ஒரு ஆண்டு கூட ஒரு நிலைக்கவில்லை. அதற்குள் அவருக்கு விவாகரத்து ஏற்பட்டுவிட்டது. விவாகரத்திற்கு பிறகு டிடி இன்னும் யாரையும் திருமணம் செய்யவில்லை.
சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான மதகஜராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் செய்யப்பட இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் போது டிடி தான் தொகுப்பாளராக இருந்தார். அப்போது அவர் பல வருடங்களுக்கு பிறகு தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு இளைஞரோடு டிடி டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த இளைஞர் யார் என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நபர் யார் என்பது பற்றி டிடி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிந்து இருக்கிறார்.
அதில் சந்தோஷ் சுப்ரமணியன் திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் பாடிய “இப்படி இருந்தால்” என்ற பாடலில் “அரிது அரிது இளமை அரிது” என்ற வரிகளுக்கு ரீல்ஸ் எடுத்திருக்கிறார். அதில் டிடியோடு இருந்த நபரின் பெயர் “லூகி”. வெளிநாட்டில் நான் இவரை பார்த்தேன். இவர் தனிமையில் இருக்கிறார். இவரோடு நான் இந்த ரீல்ஸ் செய்து இருக்கிறேன்.
பெண்களே இந்த டான்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று டிடி சொல்லி இருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கமெண்ட் போட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications