என்றும் நீங்கள் என் கண்ணின் மணி.. டிடி போட்ட போஸ்ட்! கூட இருக்கிறது யாரு தெரியுமா? குவியுது வாழ்த்து
சென்னை: தொகுப்பாளர்களை டிடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு ஆணோடு இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டிருக்கும் நிலையில் அது யார் என்று கேள்விகள் அதிகமாக பரவி வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தொகுப்பாளர் என்று சொன்னதுமே ஒரு சிலருடைய முகம் டக்கென்று நினைவிற்கு வரும் அதில் டிடியுடைய முகமும் ஒன்று. திவ்யதர்ஷினி என்ற தன்னுடைய பெயரில் டிடி என்று சுருக்கி வைத்திருக்கும் டிடி அதிகமான ரசிகர்களுக்கு பிடிக்கும் இவர் விஜய் டிவியில் பல வருடங்களாக தொகுப்பாளராக இருந்திருக்கிறார் அதோடு ஒரு சில சீரியலிலும் நடித்திருக்கிறார்.

தொகுப்பாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு இலக்கணத்தையே டிடி உருவாக்கி இருந்தார் என்று சொல்லலாம். தான் எவ்வளவு சோகமான சூழ்நிலையில் இருந்தாலும் எதிரே இருப்பவர்களை சிரிக்க வைத்து, அவர்களை சுறுசுறுப்பாக மாற்றும் பேச்சு திறமை டிடியிடமே உண்டு.
ஆனால் இவர் அதிக நாட்கள் நின்று கொண்டே வேலை பார்த்ததால் இவருடைய முட்டியில் வலி ஏற்பட அதற்கு ஒரு ஆபரேஷன் செய்திருந்த நிலையில் அந்த ஆபரேஷனில் ஏற்பட்ட பிரச்சனையால் தொடர்ந்து டிடிக்கு ஆறு முறை ஆபரேஷன் செய்யப்பட்டது. அதனால் அதிக நேரம் நின்று கொண்டிருக்க முடியாது என்பதால் இவருக்கு இப்போது அதிகமாக நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்க கிடைப்பதில்லை.

இது பற்றி பல இடங்களில் தன்னுடைய வருத்தத்தையும் டிடி பதிவு செய்திருக்கிறார். ஆனாலும் இது இல்லை என்றால் அடுத்து என்ன செய்யலாம் என்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து இப்போது திரைப்படங்களிலும் டிடி நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தொடர்ச்சியாக படித்துக் கொண்டும் இருக்கிறார்.
அவருடைய ப்ரொபஷன் ஒரு பக்கம் என்றாலும் அவருடைய குடும்ப வாழ்க்கை பல பிரச்சனைகள் நிறைந்ததாக தான் இருந்தது. அவருடைய நண்பரையே பல வருடங்களாக காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால் அவருடைய திருமண வாழ்க்கை சில வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது.
அதற்குப் பிறகு டிடிக்கு இரண்டாவது திருமணம் என்று மாதத்திற்கு ஒருமுறை வதந்தி பரவி வருகிறது. டிடி யாரோடு போட்டோ போட்டாலும் கூட இது அவருடைய காதலர் தான் என்ற கேள்விகளும் வந்து விழுந்து விடுகிறது. அதுபோல்தான் இப்போது டிடி தன்னுடைய அக்கா பிரியதர்ஷினியின் மகனுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து இருக்கிறார். அந்த போட்டோவை பார்த்ததும் டிடி இவரையா கல்யாணம் செய்யப் போகிறார் என்று சிலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள்

ஆனால் டிடி அவருடைய அக்கா பிரியதர்ஷினியின் மகனின் பிறந்தநாளுக்கு புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். அவருக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். அதில் கூட, "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பப்பு. நீங்கள் என்றும் எங்கள் கண்ணின் மணியாக இருப்பீர்கள். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்" என்று கூறி இருக்கிறார்.
அம்மாவின் அன்பை விடவும் சித்தியின் அன்பு ஒருபடி மேல் என்று தான் சொல்ல வேண்டும். பல வீட்டில் அம்மாக்கள் கூட பிள்ளைகள் மீது கண்டிப்பாக இருப்பார்கள். ஆனால் சித்திமார்கள் தான் குழந்தைகளை அளவுக்கு அதிகமாக பாசமாக கொஞ்சுவதையும் செல்லம் கொடுப்பதையும் பார்த்து இருப்போம். டிடி தன்னுடைய அக்கா மகனோடு அதிகமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அவரோடு தனக்கு இருக்கும் பாசத்தையும் வெளி காட்டி இருக்கிறார். டிடியின் தற்போதைய பதிவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications