வாழ்க்கையின் லட்சியமே இதுதான்.. பல வருடங்களுக்கு பிறகு உருக்கமாக பேசிய ஸ்வர்ணமால்யா!
சென்னை: தொகுப்பாளர் மற்றும் நடிகையான ஸ்வர்ணமால்யா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தன் முன்பு கடவுள் வந்து உன்னுடைய பெரிய ஆசை என்னவென்று கேட்டால் நான் நிறைய ஹேண்ட் பேக் வேண்டும் என்று கூறுவேன் என கூறி இருக்கிறார்.
தனக்கு அதிகமான ஹேண்ட் பேக் வைத்திருக்க பிடிக்கும் என்றும் அது குறித்த பல தகவல்களையும் ஸ்வர்ணமால்யா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

பொதுவாக பெண்கள் என்றாலே அவர்களுக்கு அழகுப் பொருள்களும், அழகு சாதனப் பொருட்களும், தன்னை அழகாக காட்டிக் கொள்ளும் பொருள்களும் அதிகமாக பிடித்தது தான். அது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருத்தமானது தான். ஆனாலும் தற்போது ஒரு தொகுப்பாளராகவும் நடிகையாகவும் இருந்து 90's கிட்ஸ்களின் ஃபேவரைட் என்று சொல்லும் ஸ்வர்ணமால்யா தனக்கு விருப்பமானது பற்றி சொன்னது தான் பலருக்கும் வியப்பாக இருக்கிறது.
சன் டிவியில் இளமை புதுமை என்ற நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் பலருடைய மனதையும்க கவர்ந்து அதைத்தொடர்ந்து கலக்கப்போவது யாரு, குடும்ப திரை, அன்புள்ள சினேகிதி, நிம்மதி உங்கள் சாய்ஸ் என அடுத்தடுத்து பல சீரியல்களில் நிகழ்ச்சிகளில் முக்கிய பிரபலமாக இருந்து பின்பு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் துணை கதாநாயகியாகவும் ஸ்வர்ணமால்யா நடித்து வந்தார்.
தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்த ஸ்வர்ணமால்யா கடைசியாக புலிவால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு எந்த திரைப்படங்களிலும் தற்போது நடிக்காமல் இருந்து வரும் நிலையில் ஒரு youtube சேனல் ஒன்று தொடங்கி அதில் தன்னுடைய அன்றாட நிகழ்வுகள் தனக்கு பிடித்தது, பிடிக்காதது என பல விஷயங்களை அதில் பகிர்ந்து வருகிறார்.
ஸ்வர்ணமால்யா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். பரதநாட்டியத்தில் பல பட்டங்கள் பெற்றவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய youtube சேனல் பக்கத்தில் இப்போது என் முன்பு கடவுள் தோன்றி உங்களுக்கு என்ன வேண்டும், எது ரொம்ப ஆசை என்று கேட்டால் நான் எனக்கு ஒரு நூறு அல்லது ஆயிரம் ஹேண்ட் பேக் வேண்டும் என்று கூறுவேன் என சுவாரசியமாக பேசி இருக்கிறார்.

ஒரு சிலருக்கு ஒரு சில பொருள்களின் மீது அளவுக்கதிகமான ஆசையும், காதலும் இருக்கும் அந்த மாதிரி ஒரு பிரபலமாக இருக்கும் ஸ்வர்ணமால்யாவின் ஆசையை கேட்டு ரசிகர்கள் வியந்து போயிருக்கின்றனர். அடடா என்ன இப்படி ஒரு ஆசையா என்று பலர் கேட்க, தன்னிடம் இருக்கும் விதவிதமான ஹேண்ட் பேக்குகளை எடுத்துக்காட்டி அதனுடைய சுவாரசியமான பின்னணி குறித்து பல தகவல்களையும் அந்த வீடியோவில் ஸ்வர்ணமால்யா பகிர்ந்து இருக்கிறார்.
பல வருடங்களாக இவரை காணவில்லையே என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இவருடைய லேட்டஸ்ட் வீடியோ இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் அந்த வீடியோவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் நான் எங்களுக்கும் ஹேண்ட் பேக் பிடிக்கும் என்று கருத்து கூறி இவரிடம் மேலும் பல வீடியோக்களை வெளியிடுமாறு கேட்டு கொண்டிருக்கின்றனர்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications