என்னப்பா.. துருவ் எப்படி இருக்க? முதல்வர் விஜய் கேட்ட கேள்வி.. விக்ரம் மகன் ஓபனாக சொன்ன விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுபமா பரமேஸ்வரன் விவகாரம் தொடர்பான சர்ச்சைகள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் நடிகர் துருவ் விக்ரம் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்திருப்பது புதிய கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் விஜய்யின் ஆட்சிக்கு துருவ் விக்ரம் தெரிவித்த பாராட்டு தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் அவரை சந்திக்கும் பிரபலங்களின் புகைப்படங்களும் கருத்துக்களும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் துருவ் விக்ரம் முதல்வர் விஜய் நேரில் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhruv Vikram Vijay Anupama

விஜய் பற்றி துருவ் விக்ரம் பேச்சு

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா டுடே ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியில் துருவ் விக்ரமும் கலந்து கொண்டிருந்த நிலையில் இருவரும் நேரில் சந்தித்து பேசி இருந்தனர். அந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்கள் துருவ் விக்ரமிடம் விஜயின் 100 நாள் ஆட்சி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு துருவ் விக்ரம், நான் அவருடைய மிகப்பெரிய ஃபேன் என்னைப் போன்ற ஏராளமான இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார்.

Dhruv Vikram Vijay Anupama

அவருடைய புதிய அரசியல் பயணத்திற்கும் அதற்காக அவர் செலுத்தி வரும் ஈடுபாட்டுக்கும் எனது மரியாதை எப்போதும் உண்டு. அவருடைய 100 நாள் ஆட்சிக்கு நான் சல்யூட் செய்கிறேன்" என்று கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகள் தான் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் மற்றும் விக்ரம் இருவரும் நீண்ட காலமாக திரைத்துறையில் நட்புடன் இருக்கிறார்கள்.

Dhruv Vikram Vijay Anupama

பைசன் கொடுத்த பிரபலம்

அந்த பின்னணியில் விஜய் விக்ரம் மகன் துருவை நேரில் சந்தித்தபோது என்னப்பா துருவ் எப்படி இருக்க? என்று விஜய் கேட்டதும், அவரை கட்டிப்பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை துருவ் வெளிப்படுத்தி இருந்தார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் துருவ் விக்ரம் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.

துருவ் விக்ரம் போஸ்ட் போட்டதும், அனுபமா போட்ட புது குண்டு.. முகமூடி கிழிந்தது அப்போது தானாம்!
சமீபத்தில் அனுபமா தன்னுடைய தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து பேசிய நிலையில் அது துருவ் விக்ரமையும் சுற்றி சில சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் விஜய் பற்றி துருவா விக்ரம் பேசிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+