ஆட்டோ ஓட்டி ஒரு உயிரை காப்பாற்றிய போஸ் வெங்கட்.. இவருடைய ஆரம்ப காலம் இத்தனை சோகங்கள் நிறைந்ததாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெட்டி ஒலி சீரியல் மூலமாக பிரபலமான போஸ் வெங்கட் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து பேசி இருக்கிறார்.

நடிகர் போஸ் வெங்கட் தன்னுடைய ஆரம்ப காலத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுனராக பணி புரிந்திருக்கிறார்.

தான் ஆட்டோ ஓட்டும்போது விபத்தில் சிக்கிய ஒருவரை காப்பாற்றி ஒருடைய உயிரை காப்பாற்றியது தன்னால் மறக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.

மனம் கவர்ந்த சீரியல்

மனம் கவர்ந்த சீரியல்

எத்தனையோ சீரியல்கள் புதியது புதியதாக நாளுக்கு நாள் அறிமுகம் ஆகி கொண்டு இருந்தாலும் ஒரு சில சீரியல்கள் பல வருடங்களை கடந்தாலும் ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியை கொண்டு வந்து விடும். அந்த மாதிரி ஒரு சீரியல்தான் மெட்டிஒலி இந்த சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் அதே கேரக்டராக பிரபலம் அடைந்தனர். அந்த மாதிரி தான் போஸ் வெங்கட் ஒருவர். இவருடைய நிஜப்பெயர் வெங்கடேசன் தான் தான் எப்படியாவது சினிமாவில் நடிகராக ஆகிவிட வேண்டும் என்று 17 வயதில் சென்னைக்கு வந்திருக்கிறார்.

ஆரம்ப காலம்

ஆரம்ப காலம்

ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் அந்த நேரத்தில் ஆட்டோ ஓட்டி கொண்டிருந்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுனராக இவர் பல வருடங்கள் வேலை செய்து கொண்டிருந்தாலும், அந்த வாழ்க்கையை இப்ப நினைத்தாலும் மறக்க முடியாது அவ்வளவு வலி நிறைந்த வாழ்க்கை என்று கூறியிருக்கிறார். பல நேரங்களில் சவாரி கிடைக்காமல் அன்றைய சாப்பாட்டுக்காக காத்துக் கொண்டு இருந்தது இப்போதும் கனவில் வந்து கொண்டிருக்கிறது என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

திடீர் உதவி

திடீர் உதவி

இவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஒருநாள் எதார்த்தமாக ரோட்டில் இவர் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது, இவருக்கு முன்னே ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்ததாம். அந்த ஆட்டோவில் இருந்து ஒரு கால் மட்டும் வெளியே தெரிந்ததாம். இவருக்கு ஒரு சந்தேகம் வரவே அந்த ஆட்டோவை ஓவர் டேக் செய்து முன்னாடி கொண்டு போய் இவர் நின்று இருக்கிறார். அப்போது அந்த ஆட்டோவில் ஒருவர் ஆக்சிடென்ட் ஆகி இரத்த வெள்ளத்தில் இருந்திருக்கிறார். ஆட்டோக்காரர் மெதுவாக வண்டியை ஓட்டியிருக்கிறார். அந்த ஆட்டோ அவ்வளவுதான் வேகமாக போகுமாம். உடனே வெங்கட் தன்னுடைய ஆட்டோவில் அந்த நபரை மாற்றி இருக்கிறார்.

காப்பாற்றப்பட்ட உயிர்

காப்பாற்றப்பட்ட உயிர்

பழைய ஆட்டோக்காரர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து இருந்தால் ஒரு மணி நேரத்தில் அங்கே போய் இருப்பாராம். ஆனால் இவர் 20 நிமிஷத்தில் அந்த மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். கடைசியில் அந்த நபருடைய உயிர் காப்பாற்றப்பட்டது என்று தெரிந்தது இவருக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்ததாம். அன்று முழுக்கவே இவர் எதையோ பெரியதாக சாதித்த மாதிரி மனசுக்குள் இருந்ததாம். அந்த உணர்வு இப்ப வரைக்கும் எனக்கு வேறு எந்த வேலையிலும் கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார். அதற்கு பிறகு வண்டியில் இருந்த ரத்தக்கறைகளை எல்லாம் வீட்டில் சென்று கழுவி விட்டாலும் மனதில் இருந்த அந்த மன நிறைவு பெரியது என்று பேசி இருக்கிறார்.

மெட்டிஒலி போஸ்

மெட்டிஒலி போஸ்

அது மட்டுமல்லாமல் போஸ் வெங்கட் நடிகை சோனியாவை 2003இல் திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதியினருக்கு தேஜஸ்வின் என்ற மகனும் பவதாரணி என்ற மகளும் உள்ளனர். போஸ் வெங்கட் முதல் முதலாக மெட்டி ஒலி சீரியலில் அறிமுகமாகி அந்த சீரியலில் போஸ் என்ற கேரக்டரில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு அந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே இவர் தன்னுடைய பெயருக்கு முன்பு போஸ் என்று பயன்படுத்திக் கொள்கிறார். ரசிகர்களுக்குமே போஸ் என்கிற பெயரைத்தான் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+