ஆடுஜீவிதம் படத்தில் ஆடையில்லாமல் குளிக்கும் காட்சி! துரோகம் வேண்டாம்னு மறுத்த நடிகர் பிருத்விராஜ்
சென்னை: மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படத்தில் சுமார் 32 கிலோ எடையை குறைத்து நடித்தார். இதனால் கேரள ரசிகர்கள் பிருத்விராஜின் அர்ப்பணிப்பை கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த படம் அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தது.
இது குறித்து செல்வன் அன்பு கூறியிருப்பதாவது: "ஆடு ஜீவிதம்" பார்த்த போது நான் அதிசயித்துப் போனது அந்த படத்தின் கதையோ, நஜீப் என்கிற மனிதனின் போராட்டமோ அல்ல. ப்ருத்விராஜை முதலில் சினிமாவில் நடிக்க வைக்க ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்தது ஃபாஸில் தான். ஒரு புதியக் கதைக்காக ஒரு பெண்ணையும், சுகுமாரன் என்கிற நடிகரின் மகனான ப்ருத்விராஜையும் தான் ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து செலக்ட் செய்து வைத்திருந்தார்.

ஏதோ காரணங்களால் அந்த ப்ராஜெக்ட் நிறுத்தப்பட வேறு ஒரு கதையை தயாரித்து தனது மகன் "ஃபகத் ஃபாஸிலை" அறிமுகம் செய்தார் ஃபாஸில். பின் திரைக் கதாசிரியர் ரஞ்சித் தனது 'நந்தனம்' படத்தின் அழகான கதைக்கு ப்ருத்விராஜை சரியான ஆள் என அறிமுகம் செய்தார். அன்று ப்ருத்வியோடு ஸ்க்ரீன் டெஸ்ட்டில் பாஸாகி ப்ருத்வியோடு நடிக்கவிருந்த பெண் வேறு யாருமல்ல...அஸின் தான் அவர்.
ப்ருத்வியை சுகுமாரன் மகன் என்பதை விட மலையாளிகளுக்கு மிகவும் பிடித்துவிட முதல் காரணம் அவரது டெடிகேஷன். அதோடு பேசும் போது இயல்பாக அனைவரையும் மதிப்பதும் கூட. ப்ருத்வி வரும் போது அவரோடு போட்டிக்கு திலீப், ஜெயசூர்யா, குஞ்சாக்கோ போபன் என இருந்தனர். அதற்கு அடுத்த செட்டில் ஃபகத், நிவின், துல்கர் என இளைஞர் பட்டாளமும். இவர்களோடு போட்டி போட்டு ப்ருத்வி நிற்கக் காரணம் அவர் முனைப்பாக முடிவெடுத்தது தான்.
தான் கேரளக் கரையோடு ஒதுங்கும் நடிகர் அல்ல என தீர்மானித்தது. எனக்குத்தெரிந்து மறைந்த ஜெயனுக்குப் பிறகு உடலை பேணிப் பாதுகாத்து சரியாக ஷேப்போடு வைத்திருக்கும் நடிகர்களில் ப்ருத்வி தான் முதலில். லாலிபாப் என்கிற படத்தில் மினி சல்மான் கானாக அவரின் ட்ரான்ஸ்ஃபர்மேஷனை முதன் முதலாக பார்த்த போது... அட என வியக்க வைத்தார் இந்த அல்டிமேட் ரக நடிகர்.
ஆடு ஜீவிதம் படத்தில் தான் நஜீப்பாக நடிக்க வேண்டும் என தீர்மானித்த போதே ப்ருத்விராஜுக்கு உடல் எடையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது. "இந்தக் கதையில் தான் உடல் எடையை குறைத்து தன்னை, தன் நடிப்பை வித்தியாசப்படுத்தி காட்டவில்லையென்றால் மக்கள் பின்பு ப்ருத்வி அல்லாது வேறொரு புதிய நடிகரை நடிக்க வைத்திருந்தால் இதை விட சிறப்பாக செய்திருப்பார் எனச் சொல்லி விடுவார்கள்" என்கிற பயம் இருந்து கொண்டே இருந்தது.
காரணம் சப்ஜெக்ட் அப்படிப்பட்டது. ரத்தமும், சதையுமாக அதை அனுபவித்த மனிதன் கண் முன்னே இருக்கிறான். ஏனோ தானோவென பத்தோடு பதினொன்றாக முடித்து விட முடியாது. 32 கிலோ வரை எடை குறைக்க, உடற்பயிற்சிகளோடு ப்ருத்வி செய்தது சாப்பிடாமல் இருந்தது தான். 16 மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடுவது, அப்படியே சாப்பிட்டாலும் திரவ உணவுகளை சாப்பிடுவது, அடுத்த வேளை சாப்பிடும் நேரத்தை தள்ளி வைத்துக் கொண்டே செல்வது என விரதம் இருந்து கொண்டே தன் எடையை குறைத்திருக்கிறார்.
படத்தில் நஜீப் தப்பிக்கப் போகும் முன் தன் உடையை கழட்டி விட்டு பல மாதங்களுக்குப்பின் குளிக்கப் போவதாக ஒரு காட்சி வரும். இந்த ஒரு காட்சிக்காக மட்டும் 72 மணி நேரம் வரை சாப்பிடாமல் இருந்திருக்கிறார் ப்ருத்வி. அந்தக் காட்சி வந்த போது உறைந்து போனது உண்மை. படமெல்லாம் எடுத்தாயிற்று. இப்போது இந்த உடல் எடையை குறைத்த ட்ரான்ஸ்மிஷனை அப்படியே தனியாக ஒரு வீடியோவாக எடுத்து வெளியிடலாம், அது படத்தின் ப்ரமோஷனுக்கு உதவும் என சிலர் ஐடியா கொடுக்கின்றனர்.
'தங்கல்' படத்தில் அமீர் அப்படி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த செயலை அடியோடு மறுத்து விடுகிறார் ப்ருத்வி. அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? "நஜீப் என்கிற மனிதனின் வலியையும், வேதனையையும் தான் படமாக எடுக்கிறோம். இப்படி ஒரு வீடியோ வெளியிட்டால் அவர் பட்ட வேதனைகளை மதிப்பில்லாததாக அது மாற்றி விடும். அது அவரின் வலிகளுக்கு செய்யும் துரோகம்.... வேண்டாம்..." என்பது தான் அது. அது தான் ப்ருத்விராஜ்.
கலையை கலையோடு மட்டுமல்லாமல் அதை வாழ்க்கையின் சென்டிமெண்டுகளோடு அணுகுவது என்பதுவும் கூட அவரின் வெற்றிகளுக்கு காரணமாக இருக்கலாம்.... ஆடுஜீவிதம் பார்த்தபோது இந்த மனிதரைப் பார்த்து தான் அதிசயித்துப் போனேன்.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications