புதுமைப்பெண் Vs முந்தானை முடிச்சு! குரு Vs சிஷ்யன்! வசூலில் ஃபிளாப்! எம்ஜிஆர் உதவியை நாடிய பாரதிராஜா
சென்னை: பாரதிராஜா இயக்கிய புதுமைப்பெண் படம் வசூல் ரீதியில் பின்னடைவை சந்தித்த போது எம்ஜிஆர் எந்த மாதிரியான உதவியை செய்தார், அந்த படம் வசூலை அள்ளியதா இல்லையா என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: பாரதிராஜா நல்ல பிசியாக இருந்த நேரம். அப்போது பாரதிராஜாவை ஏவிஎம் படம் இயக்க அழைத்தது. பாரதிராஜாவும் ஏவிஎம்முக்குள் போனார். சரவணன் அட்வான்ஸ் தந்த போது அதை மறுத்து விட்டு வெளிவரக் காரணம் ஏவிஎம்மின் கதை இலாகாவின் கதையை இயக்கச்சொன்னதால்.

பல வருடம் கழித்து பாக்யராஜ் ஏவிஎம்முக்கு 'முந்தானை முடிச்சு' படம் எடுத்த போது அந்த படம் மெகா ஹிட்டாகி பாக்யராஜை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போனதோடு அல்லாமல் அவரின் கதை எல்லா மொழிகளிலும் பயணித்தது.
இப்போது பாரதிராஜாவுக்கு ஏவிஎம்முக்கு படம் செய்யும் ஆசையும் துளிர்விட்டது. சரியாக ஏவிஎம்மும் அழைக்க பாரதிராஜா புதுமைப் பெண்ணை துவக்கினார். அவரும் சிஷ்யனின் 'முந்தானை முடிச்சு' படத்தை விட தன் படம் ஒரு படி மேலே இருக்க வேண்டும் என உழைத்தார். ஆனால் புதுமைப்பெண் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை.
அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரை படம் பார்க்க அழைத்தார் சரவணன். எம்.ஜி.ஆரும் படத்தைப் பார்த்து பாராட்டினார். ஆனால் படம் துவக்க வசூல் சரியில்லை. பாரதிராஜா சுணக்கமாக இருந்ததைப் பார்த்த சரவணன் "சின்னவரை பார்க்கலாம் வாங்க" என அழைக்கிறார். எம்.ஜி.ஆர் விஷயம் என்ன எனக் கேட்க "பாரதிராஜா மனது சரியில்லை என உங்களைப் பார்க்க விரும்பியதாக" சரவணன் சொல்ல உடனே போனை எடுத்து ஆர்.எம்.வியை அழைத்து அப்போதே புதுமைப்பெண் படத்துக்கு வரிவிலக்கு அளித்தார்.
ஆர்.எம்.வியோ மறுத்து "அவருக்கு தெரியாமல் சொல்கிறார். சில இடங்களுக்கு மட்டும் தான் வரிவிலக்கு தர முடியும்" எனச் சொல்ல எம்.ஜி.ஆர் "எல்லா இடத்துக்கும் கொடுங்க" என மீண்டும் கட்டளையாகச் சொல்ல வரி விலக்குக்குப் பிறகு புதுமைப்பெண் வெற்றிகரமாக ஓடத் துவங்கியது. பாரதிராஜா எம்.ஜி.ஆருக்கு நன்றிக் கடன் பட்ட தருணம்.
புதுமைப்பெண்ணுக்கு அடுத்து பெரிய ஹிட் கொடுக்க நினைத்தார் பாரதிராஜா. அதனால் கமல், ராதாவை புக் செய்த பாரதிராஜா ஒரு த்ரில்லர் கதையை ரெடியாக்கி முதலில் பாடல் ஷூட்டிங்குக்காக ஊட்டிக்குப் பயணமானார். படத்தின் பெயர் 'டாப் டக்கர்'. டாப்டக்கர் படப்பிடிப்பு நடக்கும் போது அதன் கதை சிகப்பு ரோஜாக்கள் படத்தை ஒத்திருப்பதாக கமல் சொல்ல வேறு கதை எழுத முடிவானது.
அதே இடைவேளையில் பாரதிராஜா ஹிந்தி கிழக்கே போகும் ரயில் 'சவேரே வாலி காடி' படத்தில் நடிக்கும் சன்னி தியோலின் அப்பா தர்மேந்திரா தன் மகன் சன்னி மொட்டை அடித்து கழுதை மேல் ஏற்றும் காட்சியில் நடிக்க மாட்டான் எனப் பிரச்சினை செய்ய ஷுட்டிங் நின்று போனது.
இரண்டு பக்கமும் ஏற்பட்ட இடிகளால் தவித்திருந்த பாரதிராஜாவுக்கு ஆபத்பாந்தவனாக பாக்யராஜ் பாரதிராஜாவின் ரூம் கதவை மும்பை ஹோட்டலில் கதவைத் தட்டுவார் என பாரதிராஜாவே எதிர்பார்க்கவில்லை. தன் மனைவி பிரவீணா இறந்த துக்கத்தை மறக்க பாக்யராஜ் கோவா, பூனா என போய்விட்டு மும்பை ஹோட்டலுக்கு வந்த போது அங்கு குருநாதர் இருப்பதை அறிந்த பாக்யராஜ் அவரைக் காண வந்தார்.
பாக்யராஜிடம் பாரதிராஜா 'டாப் டக்கர்' கதையை சொல்ல அவருக்கும் அது சிகப்பு ரோஜாக்களை ஒத்திருந்ததாகத்தான் தோன்றியது. சென்னை வந்து கதையை சரி செய்வதாக பாக்யராஜ் சொன்னது பால் வார்த்ததாக இருந்தது. பின் சென்னை வந்து பாக்யராஜ் புதிய ஒன்லைனை சொல்ல கமலும் மகிழ்வாகி சம்மதிக்க பிறந்தது 'ஒரு கைதியின் டைரி'.
ஊட்டியில் கைதியின் டைரி படத்துக்காக 'பொன்மானே கோபம் ஏனோ?"'பாடல் படமாகிக் கொண்டிருக்கும் போது தமிழ்நாடு இல்லத்துக்கு முதல்வர் எம்.ஜி.ஆர் தங்குவதற்கு வந்தார். பாரதிராஜா-கமல் பட ஷுட்டிங் விஷயமறிந்த எம்.ஜி.ஆர் ஷுட்டிங் பார்க்க வந்து அமர்ந்ததோடு விருந்துக்கும் அழைத்தார்.
மொத்த யூனிட்டுக்கும் எம்.ஜி.ஆரின் விருந்து நடந்தது. எல்லோருக்கும் எம்.ஜி.ஆரே நேரிட்டு அவருக்கு சிக்கன் வைத்தீர்களா? இவருக்கு வந்ததா? என கேட்டு கேட்டு சாப்பிட வைத்ததோடு விருந்து முடிந்து வெளியேறும் யூனிட்டின் எல்லோருக்கும் கை கூப்பி வணக்கம் தெரிவித்து அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.
அப்போது எம்.ஜி.ஆர், பாரதிராஜாவிடம் தன்னிடம் பொன்னியின் செல்வன் கதையின் உரிமை இருப்பதாகவும், திரைக்கதையும் ரெடியாக இருப்பதாகவும் கமல், ஸ்ரீதேவி நடிக்க பாரதிராஜா இயக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட சம்பவமும் நிகழ்ந்தது. கைதியின் டைரி படத்தில் ஒரு அமைச்சர் இருப்பார்.
"நம் நாடு நம் நாடு தான். வெளி நாடு வெளி நாடு தான்.இங்கே தமிழ். அங்கே ஆங்கிலம். இங்கே வேட்டி, அங்கே பேண்ட். இங்கே அரிசி. அங்கே கோதுமை. இங்கே சிலை. அங்கே அது இல்லை..." வீர சிவாஜியைப் பற்றி தெரியாத, சிவாஜி திருவண்ணாமலை ஜோதி தரிசனத்துக்கு வந்ததாக சொல்லும் அந்த தத்தி அமைச்சர் தான் மெயின் வில்லன்.
அந்த தத்தி அமைச்சர் பாத்திரத்துக்கு அன்று எம்.ஜி.ஆரின் சிஷ்யரும், இயக்குனர் இமயமும் வைத்தப் பெயர்.... "சூர்யப் பிரகாசம்...."
சத்தியமா பாரதிராஜா நடுநிலையாளர் தாங்க.... இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications