கனகா தலைவிரி கோலத்தில் வந்து நின்று? நடிகை தேவிகாவுக்கு அவசர அவசர கல்யாணம்! அசிங்கமா திட்டிய தேவதாஸ்
சென்னை: "ஒருநாள் தேவதாஸிடம் சென்று, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று தேவிகா கேட்டிருக்கிறார்.. ஒரு உச்சநடிகை தன்னிடம் இப்படி கேட்பதை தேவதாஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. "என்ன சொல்றீங்க? நீங்க எவ்வளவு பெரிய ஹீரோயின்.. உங்களை திருமணம் செய்ய பலரும் முன்வருவார்களே?" என்று கூறி, தேவிகாவின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்லி உள்ளார்.. அதையும் மீறிதான் தேவிகா திருமணம் நடந்துள்ளது" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளர்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "1957-ல் முதலாளி என்று சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்தார் முக்தா சீனிவாசன்.. இதில்தான் நடிகை தேவிகா அறிமுகமானார்.. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது..

தேவிகா ஒரு கிறிஸ்டியன்.. பிரமிளா என்ற இயற்பெயரை தேவிகா என்று சினிமாவுக்காக மாற்றினார்கள்.. இதற்கு பிறகு நிறைய படங்களில் நடித்தார். சிவாஜியுடன் அதிகமான படங்கள் இணைந்து நடித்தார்.. ஆண்டவன் கட்டளை, பாவமன்னிப்பு போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை அன்றைய காலங்களில் பெற்றன.
கண்ணதாசன் தேவிகா நட்பு
தேவிகாவின் பாடல்களும் அப்போது ரசிகர்களிடம் பிரபலம்.. தேவிகாவுக்காகவே, சிறப்பாக பாடல்களை கண்ணதாசன் எழுதுவார்.. ஆண்டவன், வானம்பாடி, போன்ற பாடல்கள் எல்லாம் ஹிட்டானவை.. கண்ணதாசன் கவிதைகள் என்றால் தேவிகாவுக்கு பிடிக்கும்.. எனவே, தேவிகா தயாரிக்கும் படங்களுக்கு கண்ணதாசன்தான் பாடல்களை எழுதினார்.. கண்ணதாசன் தயாரிக்கும் படங்களில் தேவிகா நடித்தார்..
ஆனால், தேவிகாவின் அம்மா, "எப்ப பாரு ஆண் நடிகர்களுடனேயே சுத்திட்டு இருக்கியே? நடிக்க போனால், நடித்துவிட்டு மட்டும் வீட்டுக்கு வரவேண்டும். அதைவிட்டுவிட்டு, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களுடன் ஏன் சுத்திட்டு இருக்கே? நீ அவங்களை கல்யாணம் செய்ய போறியா?" என்று அடிக்கடி திட்டிக் கொண்டும், கேள்வி கேட்டுக் கொண்டும் இருந்துள்ளார்.
சக நடிகை தந்த ஐடியா
இதனால் கோபமடைந்த நடிகை தேவிகா, இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்தார்.. அப்போது சக நடிகை ஒருவர், யாரையாவது உடனே கல்யாணம் செய்துகொண்டால், அம்மாவின் திட்டுக்களிலிருந்து தப்பித்துவிடலாம் என்று ஐடியா தந்துள்ளார்.
உடனே சினிமா துறையில் யாரை திருமணம் செய்யலாம் என்று தேவிகா யோசித்தார்.. அப்போதுதான் பிரபல டைரக்டர் பீம்சிங்கிடம் கடைசி உதவியாளராக இருந்த தேவதாஸ் என்பவரை கவனித்திருக்கிறார்..
கடைசி உதவியாளர் என்றால், அவர்தான் பெரும்பாலான பணிகளையும் செய்ய வேண்டிவரும்.. அந்தவகையில் தன்னுடைய வேலைகளை செய்துவிட்டு, அமைதியாக ஒதுங்கியிருக்கும் தேவதாஸை தேவிகா கவனித்தார்.. மற்ற நபர்களுடன் ஒப்பிடும்போது, தேவதாஸ் மிகவும் அமைதியாகவே காணப்பட்டார்.
உச்ச நடிகை திருமணம்
ஒருநாள் தேவதாஸிடம் சென்று, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று தேவிகா கேட்டிருக்கிறார்.. ஒரு உச்சநடிகை தன்னிடம் இப்படி கேட்பதை தேவதாஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. "என்ன சொல்றீங்க? நீங்க எவ்வளவு பெரிய ஹீரோயின்.. உங்களை திருமணம் செய்ய பலரும் முன்வருவார்களே?" என்று கூறி, தேவிகாவின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்லி உள்ளார்..
ஆனால், தேவிகாவோ, "உங்களது அமைதி, எனக்கு பிடித்திருக்கிறது" என்று கூறி அவரை திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார்.. அப்போதுகூட தேவதாஸ்," நீங்க நன்றாக யோசித்து சொல்லுங்கள், அவசரப்பட வேண்டாம்" என்றார்., ஆனால் தேவிகாவோ, "நான் முடிவு செய்துவிட்டேன்" என்று உறுதியாகவும், பிடிவாதமாகவும் சொல்லி உள்ளார்..
தேவிகா தேவதாஸ்
இப்படி திடுதிப்பென்று எடுத்த முடிவால் தேவிகா - தேவதாஸ் திருமணம் நடந்தது.. பிறகு இருவரும் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்தனர்.. கனகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. வெகுளி பெண் என்ற படத்தை தேவிகா தயாரிக்க, தேவதாஸ் அத்தனை டைரக்ட் செய்தார்..
அந்த படம் படம் தேசிய விருது பெற்றது.. ஆனால், தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. ஒருவருக்கொருவர் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் திட்டிக் கொண்டார்கள்.. அதற்கு பிறகு இருவருமே பிரிந்துவிட்டார்கள்.. அதற்கு பிறகு தனி நபராகவே கனகாவை வளர்த்து ஆளாக்கினார் தேவிகா" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கனகா குறித்து பேசிய சபிதா ஜோசப், "வீட்டை விட்டு எங்குமே வெளியே வருவதில்லை.. தினமும் வீடியோவில் ஏதாவது படங்களை பார்த்துக் கொண்டும், தூங்கிக் கொண்டும் பொழுதை கழித்து வருகிறார். முன்பெல்லாம் அண்ணா மேம்பலம் அருகே உள்ள கேசட் கடைக்கு அடிக்கடி வருவார் கனகா.. தலைவிரி கோலத்துடன், சாதாரண டிரஸ் அணிந்து, அடையாளமே தெரியாமல் வருவார்..
அப்படியே கேசட் கடைக்கு வந்தாலும் அங்கும் யாரிடமும் பேசமாட்டார். என்னென்ன படங்களின் கேசட் தேவை என்பதை ஒரு பேப்பரில் எழுதி வைத்து வருவார்.. அந்த பேப்பரை நீட்டி, கேசட்டுகளை வாங்கி சென்றுவிடுவார். யாரிடமும் பேசமாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications