ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸில் டுவிஸ்ட்.. பைனல் லிஸ்டில் தேர்வான 5 போட்டியாளர்கள் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்களில் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி பல சீசன்களை கடந்திருந்தாலும் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவினால் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுபோல டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு விருப்பமுள்ள அடிமட்டத்தில் இருக்கும் திறமைசாலிகள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி இருக்கிறார்கள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது

how finalist contestant list of dance jodi dance 2 here is the list

மொத்தம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியினை ஆர். ஜே விஜய் தொகுத்து வழங்க பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர், கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் செமி பினாலே ரவுண்ட் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 14-ம் தேதி கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் ஜோடியாக சுரேஷ், ஹேமா பைனலுக்கு முன்னேறிய நிலையில் இந்த நிகழ்ச்சியின் பைனலில் பங்கேற்க போகும் மற்ற 4 ஜோடிகள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

how finalist contestant list of dance jodi dance 2 here is the list

1. சுரேஷ் - ஹேமா

2. இப்ராஹிம் - அக்ஷிதா

3. நவீன் - அக்ஷதா

4. கௌரி - விவேக்

5. ஜான் எட்வின் - ரிஷா ஜேக்கப்

how finalist contestant list of dance jodi dance 2 here is the list

இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகளும் பாராட்டு தரும் நிகழ்வுகளும் நடந்தது. அதிலும் யாரும் எதிர்பார்க்காத சில போட்டியாளர்களின் வெளியேற்றம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் பிரபலமடைந்த சுரேஷ் என்ற போட்டியாளரிடம் நடிகை சினேகா, ஒரு நாள் என்னுடைய வீட்டுக்கு வாங்க என் கையாலே நான் சமைத்து சாப்பாடு தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் மேடையில் சொன்னதை அப்படியே மறந்துவிடாமல் சுரேஷ் ஒரு நாள் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சமைத்து உணவு பரிமாறி ஊட்டியும் விட்டு இருக்கிறார். சினேகா தன்னுடைய கையால் சாப்பாடு ஊட்டியதும் கண் கலங்கிய சுரேஷுக்கு சினேகா சிரித்தபடி ஆறுதல் கூறியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலருடைய பாராட்டை பெற்றது. அதே நேரத்தில் இந்த சீசனில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+