Metti Oli Serial: மெட்டி போடும்போதுதான் கணவன் மனைவியை...!
சென்னை: சன் டிவியின் மெட்டி ஒலி சீரியல் சும்மா கிடந்த சன் டிவியின் இரவு 7:30 மணி நேர ஸ்லாட்டை உயரத்தில் தூக்கி வைத்த தொடர். அன்றைய காலக்கட்டத்தில் ரேட்டிங்கில் நல்ல இடம் பிடித்து ஒளிபரப்பாகி வந்தது மெட்டி ஒலி சீரியல்.
கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்தில் மெட்டி ஒலி சீரியல், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 1 மணி முதல் 1:30 மணி வரை மறு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த மறு ஒளிபரப்பிலும் மெட்டி ஒலி சீரியலை பலரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
மெட்டிஒலி தலைப்புக்கு ஏற்ப, மனைவி சரோவுக்கு முத்துக்கள் வைத்த வெள்ளி மெட்டி வாங்கித் தருகிறான். அப்போதுதான் சரோ சொல்கிறாள், ஒரு கணவன் மெட்டி போட்டு விடுவது மூலமாத்தான் தனது பெண்டாட்டியை முதன் முதலில் தொடுகிறான் என்று.

மெட்டி திரைப்படம்
இயக்குநர் மகேந்திரன் சார் இயக்கத்தில் மெட்டி என்று ஒரு படம். திருமணம் ஆன பெண்கள் அணியும் அணிகலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். அதில் மெட்டிஒலி பற்றி இளையராஜா ஒரு பாடல் பாடி இருப்பார். அப்போதில் இருந்தே இந்த மெட்டி என்பது கலைநயமிக்க ஒரு அணிகலன் என்றும் மாறிப்போனது.

மெட்டிஒலி சீரியல்
இயக்குநர் திருமுருகன் அதே போல் மெட்டிஒலி என்று சீரியலுக்குப் பெயர் வைத்து, அது சன் டிவியில் ஒளிபரப்பாகத் துவங்கியபோது, மக்கள் மிக எதிர்பார்ப்புடன் சீரியலை பார்க்க ஆரம்பித்து இருந்தனர். நாளடைவில் 7:30 மணி ஆனால் எல்லார் வீட்டிலும் மெட்டிஒலி பாடல்தான் ஒளிபரப்பானது.அப்படி ஆர்வமுடன் மக்கள் சீரியலை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.

மெட்டி அர்த்தம்
திருமணம் முடிந்த கையோடு மணமகள் காலில் மணமகன் மெட்டி போட்டு விடும் வைபவம் நடக்கும். இதற்கான அர்த்தத்தை வேறு வேறு விதமாக பலரும் சொல்வார்கள். இதில் கணவன் தனக்கு முதன்முதலாக மெட்டி வாங்கித் தர. எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு என்று சொல்கிறாள் சரோ. அதோடு, மெட்டியை கணவன் அணிந்து விடுவதற்கான காரணத்தையும் சொல்கிறாள்.

முதன் முதலில் தொடுவது
கணவன் கல்யாணம் ஆன கையோடு மெட்டி போட்டுவிடறப்போதான், மனைவியை முதன் முதலில் தொடுகிறான் என்று ஒரு காரணம் சொல்லி, இதனால் இந்த மெட்டி எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குங்க என்று கணவன் மாணிக்கத்திடம் சொல்கிறாள். இது கூட நல்லாத்தான் இருக்கு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications