மனைவியின் கள்ளக்காதலால் பிரிதிவிராஜ் படும் பாடு.. லக்கி பாஸ்கரை ஓரம் கட்டிய "ஐ நோபடி” எப்படி இருக்கு?
சென்னை: நிசாம் பஷீர் இயக்கத்தில் பிரித்திவிராஜ், பார்வதி நடிப்பில் உருவான "ஐ நோபடி" படம் கடந்த ஜூலை 9ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்தப் படம் தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தமிழிலேயே கிடைக்கிறது. இந்த படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
பிரித்திவிராஜை இதுவரைக்கும் கலகலப்பான காட்சிகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆடு ஜீவிதம் படத்தில் அனுதாபத்தை வாங்கி விட்டார். அதுபோல இந்த படத்தில் இவருடைய நடிப்பு சில இடங்களில் கடுப்பு ஏற்றினாலும், பல இடங்களில் நம்முடைய மனதிற்குள் இருக்கும் இன்னொரு நபரையும் கண்முன்னே காட்டி விடுகிறது. செய்யாத தப்புக்கு ஒரு மனிதனுக்கு தண்டனை கிடைத்தால் அவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? அவன் எவ்வாறான முடிவு எடுப்பான்? என்பதையும் இந்த படம் காட்டி இருக்கிறது.

சரி, படத்தின் கதைக்குள்ள போகலாம். படத்தின் கதை என்னவென்றால் பிருத்திவிராஜிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே எதற்கெடுத்தாலும் சண்டை வருகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் மூத்த பொண்ணு பிரித்திவிராஜை எப்போ பார்த்தாலும் முறைச்சிக்கிட்டே இருக்கும். எதுக்காக என்று நமக்கு பாதி படத்திற்கு பிறகு தான் தெரியவரும்.
ஐ நோபடி படத்தின் கதை
பிருத்திவிராஜ் மனைவியான பார்வதி ஒரு பேங்க் மேனேஜருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருக்கிறார். இதனால் அந்த நபரிடம் போய் பேச வேண்டும், அதற்கு அவன் சரியா பேசலனா போட்டு தள்ளிவிட வேண்டும் என்று பேங்குக்கு துப்பாக்கியுடன் பிரிதிவிராஜ் போய் உட்கார்ந்து இருக்கிறார். இதுதான் படத்தின் ஆரம்ப காட்சி அங்கு திடீரென மூன்று திருடர்கள் வருகிறார்கள். அவர்கள் அங்கிருந்த எல்லோரையும் அடிக்கிறார்கள்.

அப்போது பிரித்விராஜை அடித்துப் படுக்க சொல்லி விடுகிறார்கள். அந்த சமயத்தில் அந்த பேங்கில் இருந்த ஒரு லேடி போலீசுக்கு போன் பண்ணுகிறது. ஆனால் திருடர்கள் திரும்பி பார்க்கும் சமயத்தில் அந்த போனை பிரித்விராஜ் பக்கமாக தள்ளிவிட்டு விடுகிறது. திருடர்கள் இவர்தான் போலீசுக்கு போன் பண்ணினது என்று அவரை அடித்து பணையகைதியாக இழுத்துக் கொண்டு போகிறார்கள். பாங்கில் இருந்த 70 கோடி பணம், நகை எல்லாம் கடத்திக் கொண்டு போகிறார்கள்.
பிரித்திவிராஜ் படும் கஷ்டம்
அப்போது வழியிலேயே பணத்தை ஒரு இடத்தில் மறைத்து வைத்து விடுகிறார்கள். பிரிதிவிராஜ்க்கு கண்களை கட்டி விட்டிருக்கிறார்கள் பிறகு திடீரென ஒரு இடத்தில் பிரித்விராஜை ரோட்டில் இறக்கிவிட்டு அவர்கள் போய் விடுகிறார்கள். அந்த சமயத்தில் அந்த திருடர்களில் ஒருவர் அணிந்த பேட்ச் பிரித்திவிராஜ் கையில் இருக்கிறது. அதனால் அவரிடம் இருந்து அந்த பேட்சை பிடுங்க வேண்டும் என்று திருடர்கள் போன வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக லாரி மோதி திருடர்கள் மூன்று பேரும் ஆக்சிடெண்டில் இறந்து போய் விடுகிறார்கள். இதனால் இந்த விசாரணையில் போலீஸ் இவரை சந்தேகபடுகிறது. இந்த திருட்டுக்கு முக்கிய காரணமாக இருந்த போலீஸ் பற்றிய உண்மை பிரித்விராஜ்க்கு தெரிய வருகிறது. அதுக்குள்ள திருடர்கள் கொள்ளை அடித்த பணம் இவரிடம் தான் இருக்கிறது என்று ஒரு யூடியூபர் ஒருவர் கதை கட்டிவிட இது இவருக்கு பிரச்சனை மேல் பிரச்சனை கொடுக்கிறது.
கணவன் மனைவி பிரச்சனை
ஏற்கனவே பொண்டாட்டி இவரிடம் கருத்து வேறுபாட்டில் இருக்கிறார். இப்போது அந்த ஊரில் இருக்கும் சின்ன பசங்க முதல் ரவுடிங்க வரை எல்லாருமே அந்த கொள்ளையடித்த பணம் இவரிடம் தான் இருப்பதாக நினைத்து பிடுங்க வேண்டும் என்று இவர் பின்னாடி சுற்றுகிறார்கள். இவரை கண்ட இடத்தில் எல்லாம் அடிக்கிறார்கள். இவர் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் சென்று தேடுகிறார்கள். இப்படி அழுத்தமான சூழ்நிலையிலேயே கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில் நான் பணத்தையே எடுக்கவில்லை என்னை எல்லோரும் இப்படி தொந்தரவு பண்ணுகிறாங்களே அந்த பணத்தை நானே எடுத்துக்கிறேன் என்று திருடர்கள் மறைத்து வைத்த பணத்தை பிரித்திவிராஜ் தன்னுடைய வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறார். இதற்கு பிறகு கதை வேகம் எடுக்கிறது. கடைசியில் இவர் மாட்டினாரா? இல்லையா? அந்த பணம் என்ன ஆனது? என்பதுதான் கதை.
பணத்தால் வரும் கஷ்டம்
ஆனால் இந்த கதையில் பல விஷயங்கள் இருக்கிறது. கணவன் மனைவி பிரச்சனையில் மனைவி இன்னொரு நபருடன் பேசிக்கொண்டிருக்க அந்த நபரை பலி வாங்க வேண்டும் என்று பிரித்வி விராஜ் அங்க போய் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். ஆனால் அந்த கள்ளக்காதலனோ கடைசியில் நான் இவருடன் பேசவே இல்லை என்று பிரித்திவிராஜ் மனைவியை கழட்டி விட்டு விடுகிறார்.
அதுபோல இவர் மீது தான் தப்பு என்று தான் அவர்கள் வசித்து வந்த அப்பார்ட்மெண்டில் இருந்த எல்லோரும் இவர்கள் பார்க்கும் பார்வையில் நமக்கே அந்த குடும்பத்தின் மீது அனுதாபம் வரும். கடைசியில் முதலமைச்சரே இவர்களுடைய பிரச்சனையில் தலையிட்டு பேசியதும் பக்கத்து வீட்டுக்காரர்களில் மாற்றம் கூட ரசிக்க வைக்கிறது.
அடுத்த லக்கி பாஸ்கர்
துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தை பார்த்திருப்போம். அதில் ஆரம்பத்தில் துல்கர் சல்மான் அவ்வளவு கஷ்டப்படுவார் பிறகு அவர் வேலை செய்யும் பேங்கில் இருக்கும் பணத்தை கையாண்டல் செய்வார். ஆனால் அது தவறு என்றாலும் அவருடைய குடும்பம், இந்த சமுதாயத்தில் பட்ட அவமானங்களுக்கும் அது தவறு இல்லையோ என்று ஒரு சில இடங்களில் நினைக்க வைத்து விடுவார்கள். அதே போலத்தான் இந்த படத்திலும் செய்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் பணமே அவரிடம் இல்லாமல் அவர் படும் கஷ்டங்கள் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையே பிரதிபலிக்கிறது. பிறகு மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டப்படும் சூழ்நிலையில் சஞ்சலமும், சலனத்தையும் இந்த படத்தில் காட்டியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
