கார்த்தியின் சர்தார் 2 எப்படி இருக்கு? முதல் பாகத்தை மிஞ்சியதா? ரசிகர்கள் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022-ல் வெளியான சர்க்கார் படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 4 வருடத்திற்கு பிறகு கார்த்தி மீண்டும் சர்தாராக களம் இறங்கி இருக்கிறார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்தார் 2 இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் முதல் காட்சிகளை பார்த்த ரசிகர்களின் கருத்து கலவையாகவே இருக்கிறது.

Sardar 2

முதல் பாக கதை

சர்தார் படத்தில் தொடர்ச்சியாக மட்டுமல்லாமல் முதல் பாகத்துக்கு முன்பும் பின்பும் நடக்கும் சம்பவங்களை இணைத்து தான் சர்தார் 2 கதை என கார்த்தி ஏற்கனவே கூறியிருந்தார். மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி வருகிறார். இந்த முறை எஸ் ஜே சூர்யாவும் முக்கிய கேரக்டரில் இணைந்து இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருந்தது. கதையை பற்றி பெரிதாக ஸ்பாய்லர் கொடுக்காமல் சொன்னால் ஸ்பை ஆக்சன் உலகத்தை இன்னும் பெரிய அளவில் கொண்டு செல்லும் முயற்சி தான் இந்த படம். முதல் பாகத்தில் இருந்த ஸ்பை, அரசியல், சமூக பிரச்சனை என்கிற லைனை அப்படியே எடுத்து விட்டு ஆக்சனை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

சர்தார் ரிவ்யூ

ரசிகர்களிடம் முதலில் பாசிட்டிவாக பேசப்படுவது கார்த்தியின் நடிப்புதான். குறிப்பாக சீனியர் சர்தார் கேரக்டரில் கார்த்தி மீண்டும் மாஸ்காட்டி இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இடைவேளை காட்சி செம மாஸ் என்றும் படம் அங்கிருந்து வேற லெவலுக்கு போகும் என்று சிலர் ரசிகர்கள் பாராட்டி இருக்கிறார்கள். ஆக்சன் காட்சிகள் மற்றும் சாம் சிஎஸ் இசையும் பிளஸ் என ஒரு ரசிகர் சொல்லி இருக்கிறார். சாம் சிஎஸ் க்கு இது ஸ்பெஷல் படம். ஏனென்றால் இது அவருடைய 100வது படம் என்பதால் அவருடைய இசையை ரசிகர்கள் நுட்பமாகவே கவனிக்கிறார்கள்.

சர்தார் 2 ட்விட்டர் விமர்சனம்

முதல் பாதி வேகமாகவும் இன்ட்ரெஸ்ட் ஆகவும் செல்கிறது. இடைவேளையும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது என்று பலர் பாராட்டி இருந்தாலும் 2வது பாதியில் படம் கொஞ்சம் இழுக்கிறது என்று சில ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதுபோல சிலருக்கு கதை பிடித்து இருந்தாலும் அதை சொல்லி விதம் கொஞ்சம் ஓவராக இருப்பதாக தோன்றுகிறது. தேவையில்லாத நீளம், சில இடங்களில் லாஜிக் குறைபாடுகள், சில கேரக்டர்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை என்ற விமர்சனங்களும் வருகிறது.

படத்தின் குறை

அதாவது மோசமான படம் இல்ல ஆனால் முதல் சர்தார் அளவுக்கு வேற லெவல் என்று சொல்ல முடியாது என்பது தற்போதைய ரசிகர்களின் டாக். அதே நேரத்தில் இந்த படத்தை கார்த்திகு ஆக பார்க்கலாம், ஆக்சனுக்காக பார்க்கலாம். ஆனால் முதல் சர்தார் மாதிரி எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு போனால் கொஞ்சம் ஏமாற்றம் வரலாம். இப்போதைக்கு ரசிகர்களிடமிருந்து வரும் டாக் ஆவரேஜ் என்ற பக்கம் தான் அதிகமாக இருக்கிறது.

அதே நேரத்தில் இடைவேளை, கார்த்தி ஆக்சன், பிஜிஎம் இவற்றிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுருக்கமாக சொன்னால் சர்தார் இருக்கிறார் ஆனால் அந்த முதல் பாகத்தில் இருந்த அடேங்கப்பா முழுசாக இருக்கிறதா? என்பது தான் ரசிகர்களிடம் இப்போது பெரிய கேள்வியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+