Sathyavan Savithiri : கீர்த்தி சுரேஷின் "சத்யவான் சாவித்திரி” எப்படி இருக்கு? கடைசியில் டுவிஸ்ட் வேற லெவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வெளியாகி இருக்கும் கீர்த்தி சுரேஷின் "சத்யவான் சாவித்திரி" திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது? படத்தில் என்ன குறை, நிறை என்பதை எக்ஸ்( ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் நன்றாகவே சுவாரஸ்யம் கொடுப்பதாக ரசிகர்கள் சொல்லி வருவது படத்திற்கு கவனம் கிடைத்திருக்கிறது.

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் லீடு கேரக்டரில் நடிக்கும் படங்கள் பெரிதாக வெற்றி பெறாமல் இருந்ததால், இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கடைசியில் இப்போது படம் வெளியானதும் பாராட்டு மழை பொழிகிறது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ்சில் வரும் ட்விஸ்ட், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஸ்கின் நடிப்பு, கோர்ட்டு ரூமில் நடக்கும் விவாதங்கள் என ரசிகர்கள் ரசித்த விஷயங்களை தங்களுடைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

Sathyavan Savithiri Keerthy Suresh Mysskin Bala Saravanan Tamil Movie Review Audience Review Courtroom Drama Sam CS

சத்தியவான் சாவித்திரி ரிவ்யூ

லட்சுமி காந்த் என்பவர், "படத்துக்கு 5க்கு 3. 75 மதிப்பெண் கொடுத்து, இரண்டாவது பகுதி நன்றாக எழுதப்பட்ட காட்சிகளுடன் சூப்பராக இருப்பதாகவும் கடைசியில் வரும் எதிர்பாராத திருப்பம் நன்றாக வேலை செய்திருப்பதாகவும்" பாராட்டி இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் சாவித்திரி என்ற வழக்கறிஞர் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பதாகவும், ஹீரோவுடன் வரும் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் கீர்த்தியின் நடிப்பு இன்னும் சிறப்பாக இருப்பதாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

மிஸ்கின் நடிப்பு

மிஸ்கினை பற்றி சொல்லவே வேண்டாம், அவருடைய வழக்கமான தனித்துவமான தோரணையும் திரையில் காட்டும் கிரீன் பிரசென்ஸும் இந்த கதாபாத்திரத்துக்கு நல்ல பலமாக அமைந்திருக்கிறது. கீர்த்தி சுரேஷுக்கும் மிஷ்கினுக்கும் இடையே நடக்கும் விவாதங்கள் படத்தில் சுவாரசியமான பகுதியாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். ஒரு பக்கம் சட்டத்தை வைத்து வாதிடும் மிஸ்கின், இன்னொரு பக்கம் கீர்த்தி எடுக்கும் லீட்கள் என இந்த கதை அடுத்த கட்டத்திறகு கொண்டு செல்கிறதாம்.

காமெடி காட்சிகள்

பால சரவணன் வரும் இடங்களில் அவருடைய ஒன் லைனர்கள் சில நன்றாக சிரிக்க வைப்பதாகவும் ரசிகர்கள் சொல்கிறார்கள். படத்தில் பின்னணி இசையும், காட்சிக்கு நல்ல ஆதரவாக இருக்கிறதா. இசை ரொம்பவே பிரம்மாண்டமாக இல்லை என்றாலும் படத்துக்கு தேவையான அளவில் இருப்பதாக சுகுமார் சீனிவாசன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறார்.

அதுபோல, முதல் பாதி ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக நகர்வதாக சிலர் சொல்கிறார்கள். கதைக்குள் நுழைந்த பிறகு அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் உருவாகிறதாம். குறிப்பாக இன்டெர்வெல் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே யூகிக்க முடிந்தாலும் அதை திரையில் கொண்டு வந்த விதம் எதிர்பாராதாக இருக்கிறதாம். முதல் பாதியை நல்ல முறையில் முடித்துவிட்டு இரண்டாவது பாதியில் இன்னும் சுவாரசியமான விஷயங்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

Sathyavan Savithiri Keerthy Suresh Mysskin Bala Saravanan Tamil Movie Review Audience Review Courtroom Drama Sam CS

ட்விட்டர் விமர்சனம்

ட்விட்டர் பக்கத்தில் ஓம் படம் ரிவ்யூ ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது என்றால், சத்யவான் சாவித்திரி படத்துக்கும் அதிகமான பாசிட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக வரும் படங்களில் அதிகமாக ரத்தம் தெறிக்கும் கதைகளை விட ரசிகர்கள் வாழ்க்கையில் இயல்பாக ஒன்றுவிடும் கதைக்கு அதிக கனெக்ட் இருக்கிறது. அதுபோல தான் இந்த படமும் இப்போ ரசிகர்களுக்கு பிடித்து விட்டது.

மொத்தத்தில் சத்யவான் சாவித்திரி படம் முதல் பாதி சற்று மெதுவாக ஆரம்பித்தாலும், இரண்டாம் பாதியில் நல்ல திருப்பங்களுடன் சுவாரசியமாக செல்வதாக ரசிகர்களின் ஆரம்ப விமர்சனம் தெரிவிக்கின்றன. கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் நடிப்பு, பால சரவணன் காமெடி கடைசி ட்விஸ்ட் என படத்தில் ரசிக்க சில விஷயங்கள் இருக்கிறது. குறிப்பாக மிஷ்கினின் கடைசி "புன்னகை" படம் பார்த்த பிறகு ஒரு திருப்பத்தை கொடுக்கிறதாம். கத்தி ஆர்ப்பாட்டம் செய்வது, துப்பாக்கி தோட்டாக்கள் தெறிப்பது, ரத்தம் பீறிட்டு வருவதை பிடிக்காத ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+