Toxic movie: டாக்சிக் எப்படி இருக்கு? ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்! என்ன இப்படி எல்லாம் சொல்லிட்டாரு?
சென்னை: நடிகர் யஷ் நடித்த டாக்சிக் படம் நேற்று தியேட்டரில் வெளியாகி கலையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஒரு சிலர் யஷ்க்காக இந்த படம் சூப்பர் என்று சொன்னாலும் படத்தின் கதையும் சில விஷயங்களும் குழப்பத்தை ஏற்படுகிறது என்று சில ரசிகர்கள் புலம்பி வருவதையும் பார்க்க முடிகிறது. இப்படியான நேரத்தில் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை பற்றி யூடியூப் சேனலில் ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.
சும்மாவே ஒவ்வொரு படத்திலும் ஆயிரம் குறை கண்டுபிடிக்கும் ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கும் போது, படம் ஆரம்பத்தில் இருந்து முடிகிற வரைக்கும் இந்த படத்தின் கதை என்னென்ன கண்டுபிடிக்க ரொம்ப உன்னிப்பா கவனித்தோம். கடைசி வரைக்கும் கண்டுபிடிக்கவே முடியலையே... அதனால எங்க கூட படம் பார்த்தவர்களிடம் என்ன கதை என்று கேட்டால் அவர்கள் ஆளாளுக்கு ஒரு கதை சொல்கிறார்கள். படத்தின் கதை இதுதான் என்பது படம் எடுத்தவர்களுக்கே தெரியுமா? இல்லையா? என்பது நமக்கு தெரியவில்லை.
ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ
இந்த படம் சுமார் மூன்றேகால் மணி நேரம் ஓடுது. அதுல ஹீரோவோட வேலை என்னன்னா சிகரெட் குடிப்பார், சரக்கு அடிப்பாரு, கையில் யாராவது கிடைத்தால் அவர்களை இழுத்து போட்டு அடிப்பாரு, வெட்டுவாரு, குத்துவாரு, சுடுவாரு, பிறகு பஞ்ச் டயலாக்கும் பேசிட்டு இருப்பாரு பெண் வந்தால் உடனே அவங்கள தனியா கூட்டிட்டு போயிருவாரு. இதுதான் படம் முழுக்க ரிப்பிட் ஆகி இருக்கிறது. இதை பத்தி சொல்லனும்னா ஹை பட்ஜெட்டில் லோ ஆர்டிஸ்ட்களை போட்டு பிட்டு படம் எடுத்து வச்சிருக்காங்கன்னு தான் சொல்லணும்.

டாக்சிக் பட ரிவ்யூ
படத்துல பேசினா டயலாக்கை விட அவங்க பேசின வசனங்களுக்கு தியேட்டரில் இருந்தவர்கள் அடித்த கமெண்ட் கூட ரசிக்கும் படியா இருந்தது. இந்த படத்தின் கதை எந்த பூலோகம் அமைப்புக்குள் நடக்கிறது என்று தெரியவில்லை. 1947-ல் கோவாவில் நடப்பதாக சொல்றாங்க. ஆனா அங்கே பெரிய பனிமலை எல்லாம் இருந்தது. ஆனால் இந்த படத்துல பனிமலையே காணல. ஒருவேளை அது இப்போ உருகி இருக்கும் போல.
படத்தில் லட்சக்கணக்கான பேரை கொன்னு இருப்பார்கள். அவர்களையெல்லாம் புதைக்க கோவாவில் இடம் இருக்காது... எங்கே சென்று புதைத்தாங்கனு தான் தெரியல. சமீபத்தில் தான் விஷால் நடித்த மகுடம் வந்தது. காட்டு மொக்கை படம் என்றால் அதுதான் என்று நம்ம சொல்லியிருந்தோம். இப்போ அடுத்த வாரத்திலேயே இவர்கள் அதை முறியடித்து விடுவார்கள் என்று நினைத்துக் கூட பார்க்கல.
மொத்தத்தில் படத்தின் கதை
படத்தை பார்த்துட்டு இருக்கும்போது ஒரு கட்டத்துக்கு மேல பயங்கர போர் அடித்து விட்டது. ஒவ்வொரு வசனத்தையும் இழுத்து இழுத்து பேசிட்டு இருக்காங்க. இப்பதான் கன்னட திறை உலகமும் கொஞ்சம் மேல வந்தது இப்போது டாக்ஸிக் மூலம் அந்த திரையுலகம் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்திருக்கிறது. மொத்தத்தில் சொல்லனும்னா முதல் பாதி கேவலமாக இருந்தது, இரண்டாவது பாதி அதைவிட கேவலமாக இருக்கிறது என்று ப்ளூ சட்டை மாறன் சொல்லி இருக்கிறார். அவர் இப்படி பேசியதும் யஷ் ரசிகர்கள் வழக்கம் போல அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
