ஒரு நாளைக்கு எத்தனை தடவை சாப்பிடுவீங்க பிரியங்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் தி வால் ரியாலிட்டி ஷோவை பிரியங்கா தேஷ்பாண்டே, மகாபா இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். நிகழ்ச்சிக்கு பிரியங்கா, மகாபா இருவருமே நல்ல வெயிட் என்று சொல்லலாம். இருவரும் போரடிக்காமல் நிகழ்ச்சியைத்ட் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

பிரியங்கா ஆரம்பத்தில் சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார்.வணக்கம் தமிழகம் நிகழ்ச்சி சூரிய வணக்கமாக உருமாறிய நேரத்தில் சரியான நிகழ்ச்சித் தொகுப்பாளராக பிரியங்கா சன் டிவியில் களம் இறங்கினார்.இவருடன் திலீப் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் சுவாரஸ்யமாக இருக்கும்.

இப்படிப்பட்ட நிலையில் பிரியங்கா விஜய் டிவிக்கு சென்றார். அங்கும் இவருக்கு விஜய் டிவி நல்ல வரவேற்பையும் நல்ல இடத்தையும் வழங்கி கவுரவித்தது. அந்த கம்ஃபர்ட்டான ஸோனில் விஜய் டிவியின் ஒரு நல்ல இடத்தில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் பிரியங்கா.

 பொம்பளை சிரிச்சா போச்சு

பொம்பளை சிரிச்சா போச்சு

பிரியங்கா இயல்பிலேயே காமெடி மிக்கவராக இருப்பது இவர் எந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வாழங்கினாலும் அந்த நிகழ்ச்சிக்கு இவர் ஒரு பிளஸ்ஸாக மட்டுமே இன்றுவரை இருந்து வருகிறார். கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் இவரை விருந்தினராக அல்லது நடுவராக உட்கார வைத்தால், கெக்கே பிக்கே என்று வாய்விட்டு சிரித்து, அந்த சிரிப்பில் பலரையும் சிரிக்க வைப்பார். பொம்பளை சிரிச்சா போச்சு என்கிற பழமொழியை காற்றில் பறக்கவிட்டவர் இந்த பிரியங்கா.

 பிரியங்கா மகாபா

பிரியங்கா மகாபா

பிரியங்கா கல்லூரி படித்துக்கொண்டு இருந்தபோது, எஃப் எம்மில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த மகாபாவிடம் இன்டெர்ன்ஷிப் பண்ணியதாகவும், அப்போதில் இருந்தே மகாபாவை நல்ல நண்பனாகத் தெரியும் என்று கூறி இருக்கார் பிரியங்கா. அதோடு, நீ நல்ல இடத்துக்கு வருவாய் என்று அப்போது கூறிய மகாபா, அப்படி இன்று நான் இருக்கும் நிலையைப் பார்த்து சந்தோசம் கொள்ளும் அருமையான உள்ளம் மகாபாவுக்கு என்றும் கூறி இருக்கார்.

 ஃ பீல்டு கிளியர்

ஃ பீல்டு கிளியர்

பிரியங்கா நல்ல திறமைசாலி பெண்.. ஒரு கூட்டம் நிறைந்த இடத்துக்கு ஷோ பண்ண போகிறோம் என்றால், அந்த இடத்தில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, ஃபீல்ட் கிளியர் பண்றதுக்கு பிரியங்கா ஒருத்தி மட்டும் போதும். இறங்கி வேலை பார்ப்பா.. நாம ஷோ தொகுத்து வழங்க மட்டும் அந்த இடத்துக்கு போனால் போதும். அப்படி ஒரு அர்ப்பணிப்புடன் களத்துல வேலை பார்ப்பதில் பிரியங்கா தில்லானாவ என்று பிரியங்காவுக்கு புகழாரம் சூட்டினார் மகாபா.

 எத்தனை தடவை சாப்பாடு

எத்தனை தடவை சாப்பாடு

இந்த வாரம் தி வால் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சகோதரிகளில் ஒருவர் அறைக்குள் சென்றுவிட, இன்னொருவர் பால் போட வேண்டும். அப்படிப்பட்ட சகோதரிகளுக்கு மாமிச உணவு குறித்த ஒரு கேள்வி வந்தது. அந்த கேள்விக்கு உள்ளிருக்கும் சகோதரி சரியான பதிலைத்தான் சொல்லி இருப்பார். காரணம் இது சாப்பாடு குறித்த கேள்வி என்றும், நாங்க நல்லா சாப்பிடுவோம் என்றும் அந்த சகோதரி கூறினார்.

 நாங்களும் சாப்பிடுவோம்

நாங்களும் சாப்பிடுவோம்

நாங்களும்தாங்க நல்லா சாப்பிடுவோம்.. என்று மகாபாவும், பிரியங்காவும் கூற.. நீங்க ஒரு நாளைக்கு எத்தனை தடவை சாப்பிடுவீங்க என்று அந்த சகோதரி கேட்டார். சாப்பிட்டுவதற்கு முன்பா சாப்பிடுவதற்கு பின்பா என்று பிரியங்கா அதிரடியாக கேட்க, மகாபா மலைத்துப் போனார். பிரியங்கா சிரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+