Retro: ரெட்ரோ படத்தில் சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? கம்மிதான் போங்க!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தில் அவர் வாங்கிய ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அதிகாரப்பூர்வமானதாக இல்லை.
நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அந்த படம் ஓடவில்லை. இதனால் ரெட்ரோ மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் கார்த்திக் சுப்புராஜ் யாருடன் கூட்டணி அமைத்தாலும் அந்த படம் வெல்லும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

எனினும் இந்த படம் மே 1ஆம் தேதி வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. எனினும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்துள்ளது. படம் வெளியான முதல் நாளே உலகம் எங்கும் 11 கோடி ரூபாய் வசூலை குவித்தது. அதாவது முதல் நாள் உலகமெங்கும் 35 கோடி வசூலானது. எனவே ரெட்ரோ நேற்று வரை கடந்த இரு தினங்களில் 46 கோடி ரூபாய் வசூலை குவித்தது.
அது போல் தமிழகத்தில் 14.9 கோடியும் வெளிநாடுகளில் 11.4 கோடியும் வசூலானதாக சொல்லப்படுகிறது. அது போல் ஆந்திரா அல்லது தெலுங்கானாவில் 2.85 கோடியும், கர்நாடகாவில் 2.85 கோடியும், கேரளாவில் 2.5 கோடியும், இந்தியாவின் பிற பகுதிகளில் 0.5 கோடியும் வசூலானது.
இந்த படத்தில் இடம் பெற்ற கனிமா பாடலை கேட்பதற்காகவே பல ரசிகர்கள் படத்திற்கு வருகிறார்கள் என சொல்லப்படுகிறது. இந்த பாடல் வரும் போது யாரும் சீட்டில் உட்காராமல் டான்ஸ் ஆடியபடியே இருக்கிறார்கள். விசில், கை தட்டல், ஆரவாரம் இவைதான் கேட்கின்றன.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ரூ 40 கோடி ஊதியமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. படத்தின் பட்ஜெட் ரூ 160 கோடியாகும். இதே போன்று ரெட்ரோவுக்கு வரவேற்பு கிடைத்தால் போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்கிறார்கள்.
சூர்யா, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு படப்பிடிப்புகள் தொடங்கும் நிலையில் ஓடிடி உரிமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ85 கோடிக்கு வாங்கியுள்ளதாம். இது மிகப் பெரிய தொகை என்கிறார்கள்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications