Chithi 2 Serial: ஓஹோ...இதனால்தான் இவங்க சித்தியா ?... சித்தி 2 இன்ட்ரஸ்டிங்...!
சென்னை: சன் டிவியின் சித்தி 2 சீரியலில் வெண்பாவுக்கு சாரதா சித்தியானதுதாங்க சுவாரஸ்யமான கதை. வெண்பா ஒரு அனாதை அனாதைன்னு லட்சுமி சொல்லிக்கொண்டே இருக்க... புதிருக்கான விடை கிடைச்சுருச்சு.
Recommended Video
22 வருஷத்துக்கு முன்னாடி சாரதாவுக்கு பிறந்த குழந்தையை கவின் தாய்மாமா தூக்கிகிட்டு ஓடிடறார். அவருக்கு பிறந்த குழந்தை இறந்து போச்சுன்னு நினைச்சு குழந்தையை மாத்திடறார்.
கடைசியில் மழைத் துளி பட்டு குழந்தைக்கு உயிர் வந்துருது. அந்த குழந்தையை நீதான் வளர்க்கணும்னு சித்தர் சொல்றார் பெற்றாலும் நீ சித்திதான்.. இந்த ஜென்மத்தில் நீ சித்திதான்னு சொல்லிட்டு போயிடறார்.

சித்தர்கள் சீசன்
ராதிகா சரத்குமாரின் அண்ணாமலை சீரியலில் சித்தர் ஒருவர் அடிக்கடி வருவார். அதே போல சித்தி 2 விலும் ஒரு சித்தர் வந்து இருக்கார். ஆனால் பல சானல்களின் சீரியல்களில் சித்தர்கள் அடிக்கடி வந்து அருள்வாக்கு சொல்வது என்பது நடந்து வருகிறது. சிலர் வாழக்கையில் இப்படி சித்தர்கள் தோன்றி மறைவது நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. சீரியல்களில் இப்படி பார்த்து பார்த்து சித்தர் நம்பிக்கையாவது மக்கள் மனதில் விதையாக விழட்டும்.

இது மிஸ்டேக்தானே
சித்தி 2 நேற்றைய எபிசோடில் இது மிஸ்டேக்தானே என்று கேட்கும்படி, பொன்வண்ணன் ஃபிளாஷ்பேக் சொல்கிறார். அதாவது வெண்பா நான் யாரு சித்தின்னு கேட்கும்போது இதை சொல்ல ஆரம்பிக்கிறார் பொன்வண்ணன். அப்போது கார் விபத்துக்கு உள்ளாகி எல்லாரும் மயக்கத்தில் இருக்கும்போது கவின் தாய் மாமா பார்க்கிறார். அதை அப்படியே நமக்கு காண்பிப்பது ஏன்? எல்லாரும் மயக்கத்தில் இருந்தோம் என்று ஃபிளாஷ்பேக் சொல்லும்போது, அவர் முகமும் இவர்களுக்குத் தெரியாத நிலையில், அதை எப்படி நமக்கு பொன்வண்ணன் சொல்ல முடியும்.

கவினின் தாய் மாமா
கவினின் தாய் மாமா வருவதும், இறந்து போன தனது குழந்தையை ராதிகாவின் மடியில் வைத்துவிட்டு, ராதிகா குழந்தையை தான் எடுத்துக்கொள்வதும் என்று வியூவர்ஸுக்கு தெரியும்படி வைப்பது என்பதும், இவர்களுக்கு யார் என்று தெரியவில்லை என்பதும் ஃபிளாஷ்பேக்கில் இவர்கள் சொல்லும்போது தெரிய வைக்கக் கூடாது. இது மிஸ்டேக் இல்லையா?

சித்தி 2 பயணம்
ராதிகா குழந்தை பெற்றாலும் சித்திதான் என்று சாரதா சித்தி ஆன கதையை நன்றாக சொல்லி இருக்கிறார்கள். இது போன்ற அரிதான நேரங்களில் சித்தர் வந்து வாக்கு சொல்வது என்பது நம்பும்படி இருக்கிறது. என்ன.. சித்தரும் வந்து ஹாஹா என்று அடுக்கடுக்காய் எப்போதும் போல சிரிப்பதை இப்போதும் காண்பித்து இருப்பது நன்றாக இல்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications