பிக்பாஸ் வீட்டிற்குள் கட்டிப்பிடித்து முத்தம்.. இத்தனை கேமரா முன்னாடியே இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் சீசன் தொடங்கி விட்டாலே சண்டை, அழுகை, காதல், நட்பு, பிரிவு என ஏதாவது ஒரு கண்டென்ட் கிடைத்துவிடும். ஆனால் இந்த முறை ஆரம்பித்த சில நாட்களிலேயே ரசிகர்களுக்கு ஒரு குழப்பம் வந்துவிட்டது. அதுதான் (SidNaaz) சீட் நாக் ஜோடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் அத்தனை கேமராவுக்கு முன்பு இரண்டு போட்டியாளர்கள் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறார்கள்.

சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் வாஷ்ரூம் பக்கத்தில் ஆண், பெண் இரண்டு போட்டியாளர்கள் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் இது பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த சம்பவம் என்பதை கண்டுபிடித்து விட்டனர். ஆனால் எந்த மொழி பிக் பாஸில் நடந்தது என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.

Bigg Boss

காரணம் தற்போது தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என நான்கு மொழியில் ஒரே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இருப்பதால் இது எந்த மொழி என்பது பலருக்கு தெரியவில்லை. அதனால் தான் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து இது எந்த மொழி என்று கேட்டு வருகிறார். அதே நேரத்தில் இந்த வீடியோவை பார்த்து குழப்பமாக காரணம் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாள் தான் ஆகிறது, அதற்குள் முத்தம் கொடுக்கிற வரைக்கும் போட்டியாளர்கள் போய்விட்டார்களா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பழைய பிக் பாஸ் வீடியோ

ஆனால் இந்த சம்பவம் இப்போது நடந்தது கிடையாது. இந்த மேட்டர் கொஞ்சம் பழையது. அந்த வீடியோவில் இருப்பது தற்போதைய போட்டியாளர்கள் கிடையாது. பழைய பிக் பாஸ் 13 காலத்தில்ல் சித்தார்த் சுக்லா மற்றும் ஷெஹ்னாஸ் கில் என்ற இருவரும் செய்த சேட்டைகள் தான். அதுவும் கடந்த 2019- 20இல் ஹிந்தியில் நடந்த பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் தான் இந்த சம்பவங்கள் நடந்திருக்கிறது. அந்த வீடியோவை இப்போது ரசிகர்கள் தூசி தட்டி எடுத்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

காரணம் தற்போதைய பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியிலும் பல இளம் போட்டியாளர்கள் இருப்பதால் அவர்களுக்குள் இதுபோல காதல் கண்டண்டு ஏற்படுமா? என்று இப்போது கேட்க தொடங்கி விட்டார்கள். சும்மாவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரைகுறை உடை போடுகிறார்கள் என்று பலரும் திட்டி தீர்த்து வரும் நிலையில் இது போல எல்லாம் நம்ம ஊரு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தால் அவ்வளவுதான் அடுத்த நாள் பிக் பாஸ் வீட்டு முன்பு பல போராட்டங்கள் வெடிக்கும் என்பதும் ஒரு சிலருடைய கமெண்டாக இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கம்

ஆனாலும் யாரும் பிரபலமாக வேண்டும் என்று இதுபோல கண்டன்ட் கொடுத்து விட வேண்டாம் என்றும் சிலர் கமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறார்கள். தற்போதைய பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி விட்டார்கள். இதற்கு முந்தைய சீசன் பெரிய அளவில் சுவாரசியத்தை ஏற்படுத்தாமல் இருந்த நிலையில் இந்த சீசனில் ஆரம்பத்திலேயே பல அதிரடி காட்டி இருக்கிறார்கள்.

யார் எவிக்சன்

அதிலும் 30 போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப போகிறோம் என்று மேடைவரை கூட்டிக்கொண்டு வந்து அதில் பல போட்டியாளர்களை மேடையிலேயே வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வாரம் மக்கள் ஓட்டு போட்டு போட்டியாளர்களை சேவ் செய்யாமல் போட்டியாளர்களுக்குள் டாஸ்க்வைத்து அவர்களே ஒரு போட்டியாளரை வெளியேற்ற போகிறார்கள். அது யார் என்ற கேள்விகளும் ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இப்போ பழைய வீடியோவும் ட்ரெண்டாகி வருகிறது. இப்பொழுது தும்மினா தான் சரியாக இருக்கும் என்று யாரோ ஒருவர் செய்த வேலைதான் இன்று சோசியல் மீடியாவை குழப்பி வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+