நான் சிவாஜியின் தங்கச்சி.. அவங்க வீட்டில் நடந்த சம்பவம்! கடைசியாக டிவி நிகழ்ச்சியில் ஆஷா போன்ஸ்லே உருக்கம்
சென்னை: பின்னணி பாடகி ஆஷா போன்ஸ்லே 92 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் பற்றிய நினைவுகளை அவருடன் பழகிய பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் பாடகர் ஸ்ரீநிவாஸ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஆஷா போன்ஸ்லே வந்தபோது அவர் பேசிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
ஆஷா போன்ஸ்லே பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி தலைமுறைகளை கடந்தும் மனதில் நிற்கும் குரலாக இருந்தவர். குறிப்பாக ஹிந்தி, மராத்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். இந்திய இசை வரலாற்றில் தனி அத்தியாயமாக பேசப்படும் அளவுக்கு பெரிய சாதனைகளை படைத்தவர்.

இந்த நிலையில் பாடகர் ஸ்ரீநிவாஸ் பகிர்ந்துள்ள வீடியோவில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆஷா போன்ஸ்லே கலந்து கொண்டபோது எடுத்த வீடியோ. அந்த நிகழ்ச்சியில் ஆஷா சிவாஜி கணேசன் பற்றிய நினைவுகளை அவர் சொல்லிய விதம் அங்கே இருந்த அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியது.
அவர் பேசும்போது, "இப்போ நீங்கள் சென்னை என்று சொல்லுறீங்க... ஆனா எனக்கு அது இன்னும் மதராஸ் தான். இந்த ஊருக்கும் எனக்கும் ஒரு தனி சம்பந்தம் இருக்கு. எல்லாத்தையும் விட, சிவாஜி கணேசன் அண்ணா தான் அந்த இணைப்புக்கு காரணம்" என்று ஆரம்பித்தார்.
மேலும்,"நான் சிவாஜி அண்ணன் வீட்டில் தங்குவேன். அவர் என்னுடன் ஆங்கிலத்தில் பேசுவார்... நான் ஹிந்தியில் பதில் சொல்லுவேன். அவர் இங்கிலீஷில் என்னை சின்ன சின்ன விஷயத்துக்கு திட்டுவார். அவருடைய மனைவி கமலாவிற்கு ஹிந்தி தெரியாது... எனக்கு தமிழ் தெரியாது... ஆனா நாங்க இருவரும் பேசிக்கிட்டே இருப்போம். அவர் என்னிடம் 'ஆஷா... கல்யாணம் ஆயிடுச்சா... குழந்தை இருக்கா?' என்று பேசுவார். எனக்கு அவர் சொல்லுவது புரியும்... ஆனா பதில் சொல்ல தெரியாமல் நான் சிரித்துக்கொண்டே இருப்பேன்." என்று சிரித்தபடியே பேசி இருக்கிறார்.
அவர் தொடர்ந்து சொன்னது இன்னும் நெகிழ்ச்சி தரும் வகையில் இருந்தது."இரவு முழுக்க அவருடைய வீட்டில் இப்படித்தான் நாங்க பேசுவோம். சிவாஜி அண்ணன் 'ஆஷா வா... உட்காரு' என்று சொல்லுவார். 'உனக்கு தமிழ் வராதா?' என்று கேட்பார். நான் 'வராது' என்று சொன்னா 'நீ ரொம்ப மோசம்' என்று சிரித்துக்கொண்டே சொல்வார்."
அந்த உறவு எவ்வளவு அன்பானது என்பதை காட்டும் ஒரு சிறிய சம்பவத்தையும் அவர் பகிர்ந்தார், "நான் 'செண்பகமே' பாட்டு பாடுவேன்... 'அண்ணா இதை கேளுங்க... இது என்னோட பாட்டு' என்று சொல்லுவேன். அவர் அமைதியாக தலையை ஆட்டி கேட்பார்... ஆனா கடைசியில் 'உனக்கு சரியா பாட்டு வரலையே' என்று சொல்லுவார். நான் 'தமிழ்ல கேளுங்க' என்று சொல்லுவேன்... அவர் மீண்டும் சிரிப்பார்." இப்படி மொழி தெரியாமலேயே உருவான அந்த அன்பு உறவை அவர் மிக உருக்கமாக விவரித்தார்.
"இந்த அன்பும் உறவும் இன்னும் தொடருது. சிவாஜி அண்ணா குடும்பம்... பிரபு, ராமு... வீட்டில் யாருடைய கல்யாணம், நிச்சயதார்த்தம், எந்த நிகழ்ச்சியாயினும் நான் முதல் ஆள். அதேபோல எங்க வீட்டில் ஏதாவது நடந்தாலும் அவர் கண்டிப்பாக வருவார். அதனால தான் மதராசை நான் என் இரண்டாவது வீடு என்று நினைக்கிறேன்" என்று அவர் உணர்ச்சியுடன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் இறுதியில், நடிகர் பிரபு திடீரென மேடைக்கு வந்து ஆஷாவுக்கு இன்ப அதிர்ச்சி அளித்ததும் அந்த தருணத்தை இன்னும் சிறப்பாக்கியது. இந்த வீடியோவை பகிர்ந்த பாடகர் ஸ்ரீநிவாஸ், "We get to spend one full day at Super Singer and listen to her wisdom" என்று பதிவிட்டு, ஆஷா போன்ஸ்லேவை நினைத்து தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று அவர் இல்லாவிட்டாலும், அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள், அவர் பகிர்ந்த நினைவுகள், அவர் உருவாக்கிய உறவுகள் என இவை அனைத்தும் என்றும் ரசிகர்களின் மனதில் உயிருடன் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
ஆஷா போஸ்லே… லதா மங்கேஷ்கர் குரலும், ஆர்.டி.பர்மன் இசையும் சேர்ந்து உருவாக்கிய அந்த மாயம்! நெகிழ்ச்சி பின்னணி -
பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவிற்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை -
செண்பகமே செண்பகமே! பட்டிதொட்டியெல்லாம் பரவிய பாடல்.. மெல்லிய குரலில் மயக்கிய ஆஷா போஸ்லே -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
90 வயதிலும் 3 மணி நேரம் இசை கச்சேரி நடத்திய ஆஷா போஸ்லேவுக்கு மும்பை மருத்துவமனையில் நடந்தது என்ன? -
மறக்க முடியாத பாடகி ஆஷா போஸ்லே.. பிரபல பாடல்களை ஷேர் செய்து போற்றும் தமிழ் ரசிகர்கள் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை













Click it and Unblock the Notifications