தாலி கட்டுறேன்னு சொன்னேன்.. ஆனால், முத்துக்குமாரன் பேசிய ஆடியோவை லீக் செய்த இன்ஸ்டா பிரபலம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான முத்துக்குமரனுக்கு இப்போ பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே அவர் தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்து தன்னிடம் உடலுறவு வைத்து விட்டு ஏமாற்றிவிட்டார் என்று இன்ஸ்டா பிரபலமான வாஹதா தற்கொலை முயற்சி செய்திருந்தார். ஆனால் இப்போது இதற்கு முன்பு முத்துக்குமாரன் பேசிய ஆடியோக்களையும் அடுத்தடுத்து லீக் செய்து கொண்டிருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் முத்துக்குமரன் சர்ச்சை
வாஹதாவை ஏற்கனவே சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் தெரியும். சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய ஊர்காரர்கள் தன்னை பற்றி அவதூறாக பேசி விட்டார்கள் என்று சொந்த ஊரான சங்கரன்கோவிலில் நடப்பதாக பல விஷயங்களையும் பேசி இருந்தார். அது பெரிதாக பேசப்பட்டது. அந்த பஞ்சாயத்து முடிந்த சில மாதங்களிலேயே திடீரென்று ஒரு நாள் தான் தற்கொலை செய்ய போகிறேன் என்று மாத்திரைகளை சாப்பிட்டபடி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

தற்கொலை முயற்சி
அதோடு அந்த வீடியோவில் நான் தற்கொலை செய்வதற்கு காரணம் முத்துக்குமரன் தான் என்று சொல்லியிருந்தார். பிறகு இல்லை நான்தான் காரணம், முத்துக்குமரன் மீது வைத்த அன்பு காரணமாக நான் இப்போ தற்கொலை பண்ணிக்கிறேன் என்று சொல்லி இருந்தார். அதை பார்த்த பலருக்கும் ஐயோ இவருக்கு என்ன ஆச்சு? என்று பதட்டம் ஏற்பட்டது. ஆனால் நல்ல வேளையாக அவருடைய நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டனர். அதற்குப் பிறகு தொடர்ந்து முத்துக்குமரன் பற்றிய வீடியோக்கள், ஆடியோக்கள், முத்துக்குமரன் தனக்கு அனுப்பியதாக சில ஸ்கிரீன்ஷாட்கள் என போஸ்ட் போட்டுக் கொண்டே இருக்கிறார்.
காவல்துறை அனுப்பிய கடிதம்
தன் மீது வாஹதா சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு முத்துக்குமரனும் சோசியல் மீடியாவில் எந்த வீடியோ வெளியிடவில்லை. இதனால் ரசிகர்களுக்கு கேள்விகளும் எழுந்து வருகிறது. தன்னுடைய நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வாஹதா வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார், அதை டெலிட் செய்ய வேண்டும் என்று அவர் அதில் சொல்லியிருந்தார். ஆனால் காவல்துறையினர் இந்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை அதனால் நீங்கள் நீதிமன்றத்தை நாடிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இப்போது வாங்க தான் ஒரு ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் முத்துக்குமரன் தான் ஹாஸ்பிடலில் இருக்கும் போது தன்னிடம் பேசிய ஆடியோ என்று சொல்லி இருக்கிறார். அந்த ஆடியோவில் முத்துக்குமரன் ஏன் வாஹதா இப்படி பண்ணுற? நீ இப்படி ஒரு வீடியோ வெளியிட்டதால செய்தி சேனல்களில் இருந்து எனக்கு போன் பண்ணிட்டு இருக்காங்க, என்னால நிம்மதியாக இருக்க முடியல என்று சொல்கிறார். அதற்கு வாஹதா நானும் தான் ஹாஸ்பிடலில் உயிர் பிழைத்து உட்கார்ந்து இருக்கிறேன் எனக்குமா எல்லாரும் கால் பண்றாங்க. ஆனா நான் யாரிடமும் உன்னை பற்றி எதுவுமே சொல்லவில்லையே?
வாஹதா வெளியிட்ட ஆடியோ
நீ தானே எனக்கு தாலி கட்டுறேன்னு நம்பிக்கை கொடுத்த, நான் இப்போதைக்கு பிசிகல் உறவு வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அப்போ நீ என்ன சொன்ன? என்று வாஹதா கேட்க, அது சரிதான் ஆனால் நீயும் ஜாலியாக சிரித்தபடியே தானே தாலி கட்ட வேண்டும் என்று சொன்ன, நானும் அப்படித்தானே சிரிச்சிட்டு தாலி கட்டுறேன்னு சொன்னேன். அதுக்காக இப்போ இப்படி பண்ணனுமா? என்று கேட்டிருக்கிறார். இந்த ஆடியோவை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்த வாஹதா, "பார்த்தீங்களா முத்துக்குமரனே அவருடைய வாயால் நான் தாலி கட்டுறேன்னு சொன்னேன் என்பதை ஒத்துக் கொண்டார்" என்று கூறி இருக்கிறார். இதனால் இந்த பஞ்சாயத்து இப்போ மீண்டும் வெடிக்க தொடங்கி இருக்கிறது.




Click it and Unblock the Notifications
