என்ன ஆனாலும் நான் ஸ்கூலுக்கு போவேன்..அடம் பிடித்த ஆல்யா மானசா
சென்னை:
என்ன ஆனாலும் நான் ஸ்கூலுக்கு போவேன்.. காய்ச்சல் ஆனாலும் நான் ஸ்கூலுக்கு போவேன் என்று ஒரு குழந்தை பேசியது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில் அந்த குழந்தையாகவே மாறிவிட்டார் ஆல்யா மானசா.
இனியா சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் ஆல்யா மானசா. அதே போல கயல் சீரியலில் எழிலாக நடித்து வருகிறார் சஞ்சீவ். இருவருமே சீரியலில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்கி பிள்ளைகளை கவனித்து வருகின்றனர்.
தங்களின் குடும்பத்தில் நிகழும் முக்கிய சம்பவங்களை தங்களின் சமூக வலைத்தள பக்கங்களிலும் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றனர். இவர்களின் இன்ஸ்டா கிராம் பக்கங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

இன்ப சுற்றுலா
ஆல்யா மானசா இப்போது குடும்பத்தோடு மாலத்தீவிற்கு விடுமுறையை கொண்டாட போயிருக்கிறார். மகனின் முதலாவது பிறந்தநாளை கடற்கரையில் உற்சாகமாக கொண்டாடி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மைனர் வேட்டி கட்டி
அவ்வப்போது சின்னச் சின்ன ரீல்ஸ்களும் பதிவிட்டு வரும் ஆல்யா, இப்போது ஹிட் அடித்து வரும் தசரா பட பாடலான மைனர் வேட்டி கட்டி என்ற பாடலுக்கு அவருக்கே உரிய க்யூட் முகபாவங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்கூலுக்கு போவேன்
இப்போது பலராலும் அதிகம் பகிரப்படும் பள்ளி மாணவியின் குரலுக்கு வாயசைத்துள்ளார் ஆல்யா மானசா. என்ன ஆனாலும் நான் ஸ்கூலுக்கு போவேன். சளி பிடிச்சாலும், காய்ச்சல் வந்தாலும் நான் ஸ்கூலுக்கு போவேன் என்று அடம் பிடிக்கும் சின்னப்பிள்ளையாக மாறி க்யூட் ஆக செல்லம் கொஞ்சுகிறார் ஆல்யா மானசா.

இனியா வாழ்க்கையில் பூகம்பம்
இனியா டிவி சீரியலில் கணவனின் மோசடி வேலைகளை அறிந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சிக்கு ஆளாகி வருகிறார். இனியாவின் வாழ்க்கையில் பூகம்பமும் சுனாமியும் சூறாவளியும் மாறி மாறி தாக்கி வருகிறது. இதை எல்லாம் எப்படி சமாளிக்கப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் அதிலிருந்து மாறுபட்டு சமூக வலைத்தள பக்கங்களில் ரீல்ஸ்களை பதிவிட்டு உற்சாகப்படுத்தி வருகிறார் ஆல்யா மானசா.












Click it and Unblock the Notifications