சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து விலகுவதை உறுதி செய்த நடிகர்.. இனி புது சேனலில் கதாநாயகனாக என்ட்ரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலில் கதாநாயகனின் நண்பனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சந்தோஷ் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்திருக்கிறார். அதில் தான் புதிய சீரியலில் கதாநாயகனாக நடிக்கப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். அதோடு இதயம் சீரியலில் இருந்து விலகுவது குறித்தும் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்று வருவது எல்லாம் புதியது ஒன்றும் கிடையாது. தொடர்ச்சியாக சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாக கொண்டிருக்கும் நிலையில் அதில் நடிக்கும் நடிகர்கள் தங்களுக்கு திடீரென்று வரும் கமிட்மெண்ட் மற்றும் வாய்ப்புகள் காரணமாகவே சீரியலில் இருந்து விலகி விடுகிறார்கள்.

idhayam serial Actor santhosh withdrawal to lead role in the new serial

அந்த வகையில் இப்போது சின்ன திரையில் பல மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழில் பல சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் சந்தோஷ் தான் சமீபத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இதயம் சீரியலில் இருந்து வெளியேறுவது குறித்து பேசி இருக்கிறார். அதாவது சந்தோஷ் ஜீ தமிழில் பல சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார்.

அவருக்கு கன்னத்தில் முத்தமிட்டாள் என்ற சீரியல் மூலமாகத்தான் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சீரியல் பெரிய அளவில் ஓடாமல் சீக்கிரமாக முடிக்கப்பட்டு விட்டது. சமீபத்தில் அவர் ஜீ தமிழில் அண்ணா சீரியல் மற்றும் இதயம் சீரியல் என்று இரண்டிலும் நடித்து வந்தார். ஆனால் திடீரென்று அண்ணா சீரியல் இருந்து சந்தோஷ் திடீரென்று வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில் சந்தோஷ்க்கு புதிய சீரியலில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விரைவில் அந்த சீரியல் வெளியாக இருக்கும் நிலையில் அந்த சீரியல் சன் டிவி அல்லது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சந்தோஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

அப்போது ஒரு ரசிகர் நீங்க புதிய சீரியலில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் இதயம் சீரியலில் தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்க அதற்கு சந்தோஷ், அது பாசிபிள் கிடையாது ஏதாவது ஒன்றில் தானே கவனத்தை செலுத்த முடியும். அதனால் இந்த சீரியலில் இருந்து விலகி விடுவேன் என்று கூறியிருக்கிறார். அதுபோல நீங்கள் புதியதாக கதாநாயகனாக நடிக்கும் சீரியல் எப்போது வெளியாகும் என்று கேட்க, அதற்கு விரைவில் இருக்கும் என்று சொல்கிற மாதிரி எமோஜிகளை அனுப்பி இருக்கிறார்.

இதயம் சீரியலில் கதாநாயகன் மற்றும் அவருடைய நண்பன் இருவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இருவருக்கும் இடையே அழகான ஒரு பாண்டிங் இருக்கிறது இதனால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதால் அது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தும் என்றும் பலர் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+