Idhayathai Thirutathe Serial: பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று.. இதயத்தை திருடாதே!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இதயத்தை திருடாதே என்று புது சீரியலை ஒளிபரப்ப இருக்கிறார்கள். தொலைக்காட்சி சீரியல்களுக்கு எப்போதுமே திங்கள் அன்றுதான் லான்ச் தினமாக இருக்கும்.
ஆனால், புதிதாக கலர்ஸ் தமிழ் டிவி காதலர் தினத்துக்கு என்று வெள்ளி கிழமை வாரத்தின் இறுதி நாள் என்று கூட பார்க்காமல் காதல் சீரியல் இதயத்தை திருடாதே என்கிற புது சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது. அதற்கான ப்ரோமோவும் தற்போது வெளியாகி வருகிறது.
காதலர் தினத்துக்கு எதாவது ஒன்றிரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அன்றைய நாளை நினைவு படுத்துவார்கள். இப்போது புதிதாக சீரியல்களை லான்ச் செய்யத் துவங்கி இருப்பது வரவேற்கத் தக்கதோ இல்லையோ... சீரியல்கள் வரிசை எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் அதிகமாகி வருகிறது.

இதயத்தை திருடாதே
நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வெளிவந்த படம் இதயத்தை திருடாதே. இந்தப் படத்தை காதலர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்தனர். அனைத்து வயதினரும் கூட இந்த திரைப்படத்துக்கு தங்களது ஆதரவை கொடுத்து, படத்தை விரும்பிப் பார்த்து வந்தனர். தமிழ், தெலுங்கு என்று சில மொழிகளில் இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம்.

சினிமா டைட்டில்
இது போல் வெற்றி பெற்ற படங்களின் டைட்டில்களை தொலைக்காட்சி சீரியல்களின் டைட்டிலாக வைத்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது, அந்த சீரியல் மக்களிடம் வெகுவாக ரீச் ஆகிவிடுவதாக தற்போது சானல்கள் நம்புகின்றன. அதே போலத்தான் நிஜத்திலும் நடந்து வருகிறது. இதை ஜீ தமிழ் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி, விஜய் டிவி வழக்கமாக்கி கொண்டுள்ளன. கலைஞர் டிவி, ஜெயா டிவி, பாலிமர் டிவி, ராஜ் டிவி, ஏன் சன் டிவி கூட ஒன்றிரண்டு சீரியல்களுக்கு இப்படி டைட்டில் வைப்பதை ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளன.

நீதானே என் பொன்வசந்தம்
ஜீ தமிழ் டிவியில் நீதானே என் பொன்வசந்தம் என்கிற டைட்டிலில் ஒரு சீரியலை விரைவில் என்று ப்ரோமோ போடுகிறார்கள். இதில் தூய நரையிலும் காதல் மலருமே..சின்னத்திரை இதுவரை கண்டிராத காதல் களம். வெகு விரைவில். என்று போடுகிறார்கள். அதாவது காதலிக்கும் வயதை கடந்த ஒருவரின் காதல் கதையாம் இது,

போட்டியில் சானல்கள்
முன்பு எல்லாம் தொலைக்காட்சி சானல்கள் நிகழ்ச்சி, அதாவது ரியாலிட்டி ஷோக்களுக்குத்தான் போட்டா போட்டி போட்டுக்கொண்டு இருந்தன. இப்போது யார் என்ன ரியாலிட்டி ஷோக்கள் நடத்தினாலும், அதற்கு போட்டி கொடுப்பது என்பது டஃப் என்றும், வீணான வேலை என்றும் நினைக்கிறார்கள், போலும். போட்டியாக சீரியல்கள் ஆரம்பித்தால் மட்டுமே ரேட்டிங்கில் வர முடியும் என்று சானல்கள் கணித்து அதற்கேற்ப இயங்கி வருகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications