Idli Kadai 7th day box office: அடப்பாவமே! 'இட்லி கடை' 7 நாள் வசூல் இத்தனை கோடிதானாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் நீண்ட நாள் கழிச்சு டைரக்ட் பண்ணி, நடிச்ச 'இட்லி கடை' படம் ரிலீஸாகி ஒரு வாரம் முடிஞ்சிருக்கு. இந்தப் படத்தைப் பத்தித்தான் இப்போ கோலிவுட் முழுக்கப் பேச்சாக இருக்கு! படம் எப்படி இருக்கு? வசூல் எவ்வளவு? வாங்க, விவரமாக பார்ப்போம்!

Dhanush box office

தனுஷின் ஃபீல் குட் பயணம்

தனுஷ் டைரக்ட் பண்ண 'பவர் பாண்டி', 'ராயன்' படங்களுக்கு அப்புறம் வந்த 'இட்லி கடை'யை அவர் ரொம்பவே ஃபீல் குட் படமா கொடுத்திருக்கார். படம் ரிலீஸுக்கு முன்னாடி பயங்கர எதிர்பார்ப்பு. ஏன்னா, தனுஷ் தரமான ஒரு ஹிட் கொடுத்து ரொம்ப நாள் ஆச்சுன்னு ரசிகர்கள் காத்துக்கிட்டு இருந்தாங்க!

படத்தோட கதையே ஒரு செம சென்டிமென்ட். சிறு வயசுல தேனியில் இருந்தப்போ, இட்லி சாப்பிடக் காசு இல்லாம, தங்கச்சிகளோட வயல்ல பூ பறிச்சுக் காசு சேர்த்து இட்லி சாப்பிட்ட கதையை தனுஷ் இசை வெளியீட்டு விழாவில் சொன்னார். அந்தக் கடைக் கதையை மையமா வச்சுத்தான் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கார்.

படத்துல சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே, நித்யா மேனன்னு ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கு. ரத்தமும், துப்பாக்கிச் சத்தமும் நிறைந்த சினிமாவுக்கு நடுவுல, 'இட்லி கடை' ஒரு இதமான அனுபவத்தை கொடுத்ததுன்னு ரசிகர்கள் ரொம்பவே கொண்டாடினாங்க.

விமர்சன சண்டைகள்

படம் முழுக்க கிராமத்து வாழ்க்கை, அமைதியான சூழல், அகிம்சையை வலியுறுத்துறது, அப்பா செஞ்ச தொழிலை மகன் செய்றதுன்னு பல பாசிட்டிவ் விஷயங்களைப் பேசியிருக்கு. 'இப்போ இருக்குற இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம்'னு நிறையப் பேர் பாராட்டினாங்க.

ஆனா, ஒரு பக்கம், "அப்பா தொழிலைத்தான் பார்க்கணுமா? குலத்தொழிலுக்கு தனுஷ் ஆதரவா போறாரோ?"ன்னு ஒரு குரூப் கேள்வி எழுப்ப, இன்னொரு குரூப், "சகிப்புத்தன்மை குறைஞ்ச இந்த காலத்துல அகிம்சையைப் பேசினதாலயே இந்தப் படத்தை பாராட்டியே ஆகணும்!"னு அடிச்சுப் பேசினாங்க.

விமர்சன ரீதியா இப்படிப் பாசிட்டிவ், நெகட்டிவ்னு இருந்தாலும், படம் தன்னோட 'சொந்த ஊர் நினைவுகளை'க் கிளப்பிவிட்டதுன்னு நிறையப் பேர் நெகிழ்ந்தாங்க.

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

விமர்சனங்கள் ஒருபக்கம் இருக்க, வசூல்லதான் தனுஷுக்கு கொஞ்சம் அடி விழுந்திருக்கு! படம் வெளியான முதல் நாள்ல ரூ. 11 கோடி வசூலிச்சது. ஆனா, இதுக்கு அடுத்த நாள்லயே வந்த 'காந்தாரா சாப்டர் 1' தான், 'இட்லி கடை'யைச் சுத்தமா ஆஃப் பண்ணிடுச்சு!

Sacnilk இணையதளத்தின் படி, 'இட்லி கடை'யோட 7 நாள் வசூல் நிலவரம் இதுதான். 7வது நாள் நேற்று) 1.50. மொத்தம் (7 நாட்கள்) 41.65 கோடி. அதாவது, ஒரு வாரம் ஆகியும் 'இட்லி கடை' வெறும் 41.65 கோடியைத்தான் இந்தியால வசூல் செஞ்சிருக்கு. ஆனா, இதே ரேஸ்ல, அடுத்த நாளே வந்த 'காந்தாரா 2' படம் இதுவரைக்கும் 400 கோடி வசூலைத் தாண்டிருச்சு!

'காந்தாரா'வோட பெரிய அலைல, 'இட்லி கடை'யே காலியா போச்சுன்னு சொல்லலாம்! "காந்தாராவின் வருகை, இட்லி கடையில் கூட்டத்தைக் குறைச்சிடுமோ?"ன்னு படக்குழுவுக்கு இருந்த பயம், இப்போ உண்மையிலேயே நடந்திருக்கு!

தனுஷ் படத்துக்கு வந்த பாசிட்டிவ் ரிவியூஸும், அவர் புரமோஷன்ல பேசிய சென்டிமென்ட் விஷயங்களும், வசூல்ல ஏன் எடுபடலைன்னு நினைக்கிறீங்க? 'காந்தாரா'வோட போட்டிதான் காரணமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+