Idli Kadai OTT: "முகத்தில் அத்தனை சோர்வு", 'இட்லி கடை' ஓடிடி ப்ரோமோவில் வாடிபோன தனுஷ்: விஷயம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் எனப் பன்முகத் தன்மையுடன் இயங்கி வரும் தனுஷ் இயக்கி, நடித்த 'இட்லி கடை' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஓடிடிக்கு வருவதை அறிவித்து தனுஷ் வெளியிட்ட ப்ரோமோ வீடியோவில், அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டதால், ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Dhanush Idli Kadai OTT

இட்லி கடையின் கதைக்களம்

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டுத் திரைக்கு வந்த 'இட்லி கடை' திரைப்படம், ஒரு சிறந்த ஃபீல் குட் எமோஷனல் படமாகப் பார்க்கப்பட்டது. சமீப காலமாகத் தமிழ் சினிமாவில் இதுபோன்றப் படங்கள் வெளியாவது குறைந்துவிட்ட நிலையில், 'இட்லி கடை' ஒரு சிறப்பான, எமோஷனலானப் படமாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

விமர்சனம்

படம் பார்த்த அனைவருக்கும் இப்படம் பிடித்துப் போனது. தனுஷுக்கு ஒரு இயக்குநராகவும் இந்தப் படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. வசூலுக்கு அப்பாற்பட்டு, 'இட்லி கடை' ஒரு சிறந்த படம் என்ற பெயரைப் பெற்றது.

வசூலில் சறுக்கல்

'இட்லி கடை' திரைப்படத்திற்குப் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும், எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியானது. அதேசமயம், 'காந்தாரா 1 போன்ற பான் இந்தியப் படம் வெளியாகியிருந்ததால், 'இட்லி கடை' திரைப்படத்திற்குக் கடும் போட்டி நிலவியது. நூறு கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் சுமார் 75 கோடி வரைதான் வசூல் செய்ததாகத் தெரிகின்றது. இருந்தாலும், தயாரிப்பாளருக்கு லாபகரமானப் படமாகவே இது அமைந்தது.

ரசிகர்களின் ஆதங்கம்

தனுஷுக்கு இந்தப் படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தாலும், பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெறவேண்டிய இப்படம் சூப்பர்ஹிட் வகையான வெற்றியைத்தான் பெற்றுள்ளது என்பது தனுஷ் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது. 'குபேரா' படத்திற்கும் இதே நிலைதான் ஏற்பட்டதாகவும், சிறந்த ஃபீல் குட் படமான 'இட்லி கடை'யை ரசிகர்கள் பெரியளவில் கொண்டாடத் தவறியது ஏன் என்று ஒரு சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தனுஷின் சோர்வு

'இட்லி கடை' ஓடிடியில் ரிலீஸாவதை அறிவித்து தனுஷ் வெளியிட்ட வீடியோ ப்ரோமோவில், அவர் மிகவும் சோர்வாகவும், வாடிப்போனவராகவும் காணப்பட்டார். இதுவே, தற்போது ரசிகர்கள் கவலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. தனுஷ் இடைவிடாமல் படங்களில் நடித்து வருவதால்தான் இந்தச் சோர்வு என ஒரு சிலர் சொல்கின்றனர். மேலும், சில ரசிகர்கள், இட்லி கடை போன்ற ஒரு தரமானத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும்; ரசிகர்கள் இப்படத்தை பெரியளவில் கொண்டாடத் தவறியதால் தனுஷ் சற்று கவலையில் இருக்கின்றார். அந்தக் கவலைதான் அவர் முகத்தில் தெரிகின்றது என்றும் வருத்தத்துடன் சொல்லி வருகின்றனர்.

பெரும்பாலானோரின் கருத்தின்படி, தனுஷ் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த ப்ரோமோ ஷூட்டில் கலந்திருப்பார். அதன் காரணமாக அவர் முகம் சற்றுச் சோர்வாகக் காணப்பட்டிருக்கலாம். எது எப்படியிருந்தாலும், வசூலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, 'இட்லி கடை' ஒரு சிறந்த திரைப்படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+