பணத்தை யாராவது கேட்டால் விபரீத முடிவு எடுப்பேன்.. மிரட்டல் விடுத்த தாமரை செல்வி.. அடுத்த பஞ்சாயத்து
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலங்களுக்கு இது போதாத காலம் என்று சொல்லற மாதிரி அடுத்தடுத்து சர்ச்சையில் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் கொடுத்த புகார் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து முத்துக்குமரன் குறித்து அவர் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இப்போது தாமரை செல்விக்கும் அடுத்தடுத்த பஞ்சாயத்து வருகிறது. அதாவது அவர் எக்ஸ்போ நடத்துவதற்காக பலரிடம் பணத்தை வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்கவில்லை என்று அவர் மீது புகார் எழுந்து கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் தாமரை செல்வி திருவாரூரில் எக்ஸ்போ நடத்துவதற்காக பலரிடம் பணம் வாங்கி இருக்கிறார். அவருடைய எக்ஸ்போவில் ஸ்டால் போடுவதற்காக பலர் அவருக்கு 5000 ரூபாய் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் திட்டமிட்டபடி அந்த எக்ஸ்போவை தாமரை செல்வியால் நடக்கவில்லை. அதற்கு காரணம் உள்ளூர் வணிகர்கள் எங்களை எக்ஸ்போ நடத்தக்கூடாது என்று கேஸ் போட்டு விட்டார்கள், அதனால் தான் என்னால் எக்ஸ்போ நடத்த முடியவில்லை, இது பற்றி அமைச்சர் அருண் காமராஜிடம் பேச முயற்சி செய்தோம். ஆனால் அவர் எங்களை சந்திக்க கூட விரும்பவில்லை என்று தாமரை ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அது கூட அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது.

தவெகவிற்கு சப்போர்ட்
அதற்கு காரணம் தாமரை செல்வி அருண் காமராஜிக்காக எலக்சன் நேரத்தில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு வீடியோக்கள் வெளியிட்டிருந்தார். அப்படி இருந்தும் அருண் காமராஜ் அவருக்கு உதவ வில்லையா? என்ற கேள்விகளும் இருந்தது. ஒரு சிலர் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் அப்போ வாக்கு கேட்டு போயிருந்தாரா? என்றும் இவர் மீதும் விமர்சனத்தை வைத்தனர். இது நடந்து சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த எக்ஸ்போவில் கலந்து கொள்வதற்காக நாங்க பணத்தை அனுப்பிவிட்டோம், ஆனால் எக்ஸ்போ நடத்தவில்லை.. அப்படி என்றால் எங்க பணத்தை திருப்பி தரணுமே ஆனால் தாமரை செல்வி பணத்தையும் தரவில்லை, நாங்கள் போன் செய்தாலோ மெசேஜ் செய்தாலோ ரிப்ளை செய்யவில்லை என்று பலர் வீடியோக்கள் போட தொடங்கி விட்டனர்.
பணம் தர முடியாது
இதனால் கடுப்பான தாமரை செல்வி சில நாட்களுக்கு முன்பு காலையில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் நான் ரொம்பவே கஷ்டத்தில் இருக்கிறேன். இன்னொரு எக்ஸ்போ பிரச்சனைக்காக இந்த எக்ஸ்போ பணத்தை ரொட்டேஷன் கொடுத்திருந்தேன். நான் அந்த பணத்தை வைத்து எதையும் வாங்கி திங்கவில்லை, செலவு பண்ண வில்லை. ஆனால் இப்பொழுது என்னிடம் பணம் இல்லாத போது நீங்க இவ்வளவு பிரச்சனை கொடுக்குறீங்க. நகையை வித்தாவது பணத்தை தரலாம் என்று நினைத்தேன் ஆனால் இப்போ நகை விலை குறைஞ்சிட்டு இருக்கிறதுனால தான் என்னால நகையை விற்க்க முடியல.
தாமரை செல்வியின் வீடியோ
கண்டிப்பாக நகையை விற்று பணத்தை தருவேன். ஆனா எனக்கு எதிராக வீடியோ போட்டவங்க யாருக்குமே நான் பணம் தரவே மாட்டேன். நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க, யார்கிட்ட வேணாலும் சொல்லுங்க என்று மிரட்டுற மாதிரி அந்த வீடியோவில் பேசியிருந்தார். இவர் இப்படி வீடியோ விட்டதும் பணத்தை கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள் பங்குக்கு மீண்டும் வீடியோக்கள் போட தொடங்கி விட்டார்கள். நாங்கள் பணத்தை கொடுத்த ஸ்கிரீன்ஷாட் பாருங்க, 5000 பணம் கொடுத்திருக்கிறோம். அப்படி இருந்த பிறகும் அவர் பணம் தர முடியாது என்று சொல்கிறாரே என்று பலர் கேள்வி எழுப்ப தொடங்கியது, அதே நாளில் மாலையில் மீண்டும் ஒரு வீடியோவை தாமரை செல்வி வெளியிட்டு இருக்கிறார்.
அதில், நான் காலையில் ஏதோ கோபத்தில் திட்டிவிட்டேன், கோபப்பட்டாலே இப்படித்தான் மனசுல பட்டதை எல்லாம் பேசிடுவேன் என்று பிக்பாஸ்குள்ள பேசுற மாதிரியே பேசிவிட்டு கடைசியாக நான் எல்லாருக்குமே பணத்தை திருப்பி தரேன் என்று சொல்லி இருக்கிறார். அதோட நீங்க என்ன ரொம்ப மிரட்டுனீங்கன்னா நான் தற்கொலை பண்ணிக்கொள்வேன் என்பது போல பணத்தைக் கேட்டவர்களுக்கு மிரட்டல் கொடுத்திருக்கிறார். இதை வைத்துதான் இப்ப இணையத்தில் நெட்டிசன்கள் இவரை விமர்சித்து வருகின்றனர்.
பிக் பாஸ் பிரபலங்களுக்கு பிராப்ளம்
ஏற்கனவே பிக் பாஸ் பிரபலங்கள் பற்றிய செய்திகள் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் முத்துக்குமரன் மீது வாஹதா என்ற பெண் கொடுத்த புகார் பஞ்சாயத்தாக போய்க்கொண்டிருக்க, சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவினர்கள் விசாரணை நடத்தி விட்டார்கள் என பாலாஜி முருகதாஸ் வீடியோக்கள் வெளியிட்டு இருந்தார். அடுத்ததாக இப்போது தாமரை செல்வியும் பண பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இவருடைய கணவரை இவர் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.
திருமண வாழ்க்கையிலும் பிரச்சனை
அந்த சமயத்தில் தாமரையின் இரண்டாவது கணவர் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் தாமரை செல்வி திருமண வாழ்க்கையில் சேர்ந்து வாழ வேண்டும் என்று போராடுகிறார் ஆனால் அவருடைய கணவர் என்று திருமண வாழ்க்கை வேண்டாம் என்று விரும்புகிறார் என்பது போல ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்களா? என்று கேள்விகளும் இருந்தது. அதை தொடர்ந்து இப்போ பணம் சர்ச்சையிலும் தாமரை செல்வி சிக்கி இருக்கிறார்.
ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 10ல் நேற்று சனிக்கிழமை எபிசோடில், ஜேசன் விஜய் சேதுபதியை அசிங்கப்படுத்துவது போலவும், அந்த நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்களை அசிங்கப்படுத்துவது போலவும் செய்கை செய்தது ஒரு பக்கம் பேசப்பட்டு வரும் நிலையில் இப்போ தாமரை செல்வி பஞ்சாயத்து பஞ்சமில்லாமல் பறந்து கொண்டிருக்கிறது. இது பற்றி தாமரை செல்வி தரப்பு கருத்தை விசாரிக்க நாம் முயற்சி செய்தோம். ஆனால் அதற்கு அவர் இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.




Click it and Unblock the Notifications
