இளம் தலைமுறை இசையமைப்பாளர்களை அலற விடும் இளையராஜா.. கலக்குதே கல்யாண விருந்து, முத்துமணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இது "இளையராஜா மியூசிக்" என்று ஒரு காலத்தில் முதல் சில வினாடிகளிலேயே பாடலை கண்டுபிடித்த தலைமுறை இருந்தது. ஆனால் இப்போதும் அதே இளையராஜாவின் புதிய இசையை இளம் தலைமுறையினர் ரீல்ஸ் போட்டுக் கொண்டாடும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. குறிப்பாக கார்த்திக் சுப்புராஜின் டோரதி படத்திற்காக இளையராஜா போட்ட பாடல்கள் தற்போது சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது.

அதிலும் இந்த பாடலைக் கேட்ட பிறகு பலருடைய கமெண்டுகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது, இப்ப இருக்குற அனிருத், சாய் அவ எங்க இருக்கு போட்டியாக ஒரு இளைஞர் இளையராஜா என்று வந்திருக்கிறார் என்கிற ரீதியில் இளம் தலைமுறையினர் மீம்ஸ்களையும் பதிவுகளையும் போட்டு வருகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இளையராஜா இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி இசையை மாற்றிக்கொண்டு ஓடவில்லை. அவருடைய இசையின் தனித்துவம் மாறாமலேயே இப்போதும் புதிய தலைமுறை ஈர்த்திருக்கிறது. அதுதான் இந்த பாடல்களின் பெரிய பலமாக இருக்கிறது.

Ilaiyaraaja Songs

இளையராஜாவின் புதிய பாடல்கள்

டோரதி படத்தில் வெளியாகி இருக்கும் "கல்யாண விருந்து, முத்துமணி" ஆகிய பாடல்கள் தான் இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கல்யாண விருந்து பாடலில் கிராமிய மனமும், பாரம்பரிய இசையின் சுவையும் இருக்க.. முத்துமணி பாடலில் ஸ்வேதா மோகனின் குரலுடன் இளையராஜாவின் குரலும் சேர்ந்து வேற ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறது. குறிப்பாக வாடி மீனாட்சி என்று இளையராஜா குரல் மேலே ஏறும் அந்த இடம் பாடலை கேட்டுக் கொண்டிருப்பவர்களை அப்படியே நிறுத்தி கவனிக்க வைக்கிறது.

எப்போதும் ராஜா ராஜா தான்

20, 30 வயது இருக்கும் இளைஞர்களும் இந்த பாடலை ரசித்து ரீல்ஸ்களில் பயன்படுத்த ஆரம்பித்து இருப்பது தான் இப்போது ஹைலைட். இளையராஜாவின் இசையில் எப்போதுமே ஒரு விஷயம் இருக்கும், பாடல் வரிகளை மட்டும் ரசிக்க முடியாது பின்னால் ஒலிக்கும் ஒவ்வொரு இசை கருவியையும் தனித்தனியாக கவனிக்க முடியும். ஒரு கருவி இன்னொரு கருவியுடன் பேசுவது போல இருக்கும். அதே அந்த பழைய மேஜிக் இன்னும் குறையவில்லை என்பதைத்தான் இந்த பாடல்கள் மீண்டும் காட்டுவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இளையராஜாவின் இசை பயணம்

சோசியல் மீடியாவில் இன்னொரு விவாதமும் நடக்கிறது. இளையராஜா இசைக்கு மட்டும் என்றும் 16 தான், அவருக்கு கம்பேக் என்ற வார்த்தையை தேவையில்லை என்பதுதான் பலருடைய கருத்து. 1970களில் தொடங்கிய அவரது இசைப்புயல் ஐந்து தசாப்தங்களை கடந்து இன்னும் தொடர்கிறது. 2026லும் ஒரு புதிய தலைமுறை அவரது இசையை கேட்டு ரிலீஸ் போட்டு பாடல்களை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறது என்றால் அது கம்பேக் இல்லை இன்னும் அந்த இசை எவ்வளவு உயிரோடு இருக்கிறது என்பதற்காக இன்னொரு உதாரணம்.

Ilaiyaraaja Songs

இன்றைய தலைமுறை கருத்து

ஒரு காலத்தில் இளையராஜா பாடல்கள் டீக்கடையில் இருந்து ரேடியோ வரை ஒலித்தன. இப்போது அதே பாடல்களும் புதிய படங்களுக்காக அவர் உருவாக்கும் புதிய இசையும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், youtube ஷார்ட்ஸ், சோசியல் மீடியா பதிவுகள் என வேறு ஒரு தலைமுறையின் கைகளில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதுதான் இளையராஜாவின் ஸ்பெஷல். இன்றைய தலைமுறையினர் ஏஆர் ரகுமான், அனிருத், சாய் அபயங்கர் என தங்களுக்கு பிடித்து இசையமைப்பாளர்களை கொண்டாடிக் கொண்டிருக்கலாம் ஆனால் அவர்களுக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு இசையை ஒரு தனி உலகமாக மாற்றி வைத்தவர் இளையராஜா. அதனால் இப்போது இளைஞர்கள் இளையராஜா என்ற இளைஞர் எப்போதும் அதே எனர்ஜியோடு இருக்கிறார் என்று பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+