நம்ம இளையராஜாவா இது? கமலுக்கே டப் கொடுக்கிறாரே! புத்தாண்டில் ஆச்சரியப்பட வைத்த இசைஞானி
சென்னை: இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் வழக்கம்போல சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த எல்லா வாழ்த்துகளுக்கும் நடுவில் ரசிகர்களை உண்மையிலேயே நின்று பார்க்க வைத்த ஒரு வீடியோ என்றால், அது இசைஞானி இளையராஜா வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்து வீடியோ தான் என்று சொல்லலாம்.
இதுவரை ரசிகர்கள் பார்த்த இளையராஜா என்ற முகத்தை விட, இன்று அவர் வெளியிட்ட வீடியோவில் ஒரு முற்றிலும் வேறுபட்ட, எதிர்பாராத முகம் வெளிப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில், தன்னுடைய புகழ்பெற்ற பாடலான "இளமை இதோ இதோ" என்பதை சின்னதாக பாடுகிறார் இளையராஜா. அதோடு மட்டும் இல்லாமல், அந்த பாடலுக்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் தான் ரசிகர்களை இன்னும் அதிகமாக கவர்ந்திருக்கிறது. வழக்கமாக கடுமையான முகம், நேரடியான பேச்சு, சரவெடியான பதில்கள் என்று பார்த்து பழகிய ரசிகர்களுக்கு, இந்த வீடியோ ஒரு இனிய அதிர்ச்சி.

பாடலை பாடி முடித்த பிறகு, "Happy New Year" என்று சொல்லிவிட்டு, ரஜினிகாந்த் ஸ்டைலில் "இது எப்படி இருக்கு?" என்று கேட்ட அந்த தருணம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், "நம்ம இளையராஜாவா இது?", "இவருக்குள்ள இப்படி ஒரு குழந்தைத்தனமான ஜாலி இருக்கா?" என்று ஆச்சரியப்பட்டு கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வருடமாக இளையராஜா குறித்த செய்திகள் பெரும்பாலும் சர்ச்சை கலந்தவையாகவே இருந்தன. தன்னுடைய பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்தும் போது அனுமதி பெறவில்லை, காப்பிரைட் கேட்கவில்லை என்று சட்ட நடவடிக்கைகள், வழக்குகள் என தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
எந்த விஷயமாக இருந்தாலும் முகத்தில் அறைந்து சொல்வது போல நேரடியாக பேசும் குணம் காரணமாக, "திமிரான கேரக்டர்", "எவரையும் மதிக்காதவர்" என்ற விமர்சனங்களையும் அவர் சந்தித்தார். ஆனால், அந்த எல்லா கருத்துக்களுக்கும் நேர் எதிராக, இந்த புத்தாண்டு வீடியோ ரசிகர்களுக்கு ஒரு புதிய இளையராஜாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
Year Ender: 2025-ஆம் ஆண்டு இல்லறத்தில் இணைந்த தமிழ் சின்னதிரை பிரபலங்கள்.. இத்தனை பேரா?
இசையில் மட்டும் அல்ல, மனதிலும் இளமை நிறைந்தவர் என்பதைக் காட்டியது போல இந்த வீடியோ அமைந்திருக்கிறது. "இளமை இதோ இதோ" என்று பாடும் போது, அந்த வரிகள் அவருக்கே பொருந்தும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவா நியூ இயர் என்றாலே கமலின்" ஹாப்பி நியூ இயர்... இளமை இதோ இதோ" என்ற பாடல் தான் பலருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் இடம் பிடிக்கும். அந்த பாடலுக்கும் சொந்தக்காரர் நான் தான் என்று இளையராஜா இப்போது சிரித்தபடியே வீடியோவை தட்டி விட்டிருக்கிறார்.
ஒரு பக்கம் கடுமையான சட்ட போராட்டங்கள், இன்னொரு பக்கம் இசையில் எந்த சமரசமும் இல்லாத கம்பீரம் - இவை எல்லாவற்றையும் தாண்டி, உள்ளுக்குள் ஒரு சின்ன குழந்தை போல ஜாலியாக இருக்கிற இசைஞானியின் இந்த முகம் தான் இப்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்திருக்கிறது.
இந்த புத்தாண்டு வாழ்த்து வீடியோ, இளையராஜாவை பற்றி பலர் வைத்திருந்த எண்ணங்களை கொஞ்சம் மாற்றி போட்டிருக்கிறது என்பதே உண்மை. இசைஞானி என்ற அடையாளத்தை தாண்டி, ஒரு மனிதராக அவருக்குள் இருக்கும் அந்த ஜாலியான மனசை இந்த வீடியோ வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications