"மைக்கேல் ஜாக்சன் தவறாக சொன்னார்!"... 83 வயதில் இளையராஜா சொன்ன வித்தியாசமான விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 83 வயதிலும் புதிய இசையை தேடி ஓடிக்கொண்டிருக்கும் மனிதர் இளையராஜா. உலக இசை மேதைகள் பற்றிப் பேசும்போது கூட, அவர்களை வெறும் புகழ்ந்து பேசாமல் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் தனித்துவம் அவருக்கு உண்டு.

அப்படித்தான் தனது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனைப் பற்றி பேசியிருக்கிறார் இசைஞானி. ஆனால் இது சாதாரண ஒப்பீடு அல்ல. "மைக்கேல் ஜாக்சன் சொன்ன ஒரு விஷயம் தவறு" என்று இளையராஜா சிரித்தபடியே சொன்னதுதான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Ilaiyaraaja Isaignani Michael Jackson

மைக்கேல் ஜாக்சன் சொன்னது என்ன?

ஒரு நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் ஜாக்சன், "என்னுடைய வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம், விழாக்கள் போன்றவை நடந்ததில்லை. அதனால் நான் என்னுடைய குழந்தைப் பருவத்தை இழந்துவிட்டேன்" என்று கூறியிருந்தார்.

அந்த பேச்சை குறிப்பிட்ட இளையராஜா, தன்னுடைய வாழ்க்கையும் கிட்டத்தட்ட அதே மாதிரியே இருந்ததாக சொல்கிறார். "எங்கள் வீட்டிலும் பிறந்தநாள் கொண்டாட்டம் கிடையாது. எந்த விசேஷமும் கொண்டாடியது கிடையாது. கிறிஸ்துமஸ், பொங்கல், தீபாவளி வந்துவிட்டு போகும். ஆனால் நான் என்னுடைய குழந்தைப் பருவத்தை ஒருபோதும் இழக்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.

இளையராஜா விளக்கம்

இதற்கு பிறகு அவர் சொன்ன ஒரு வரிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. "குழந்தைப் பருவம் என்பது வயசோடு போயிடுற விஷயம் கிடையாது. மனசுல குழந்தை தனத்தை வைத்திருப்பவர்களுக்கு அது எப்போதும் இருக்கும். அதனால மைக்கேல் ஜாக்சன், நீங்க இதுல தவறா சொன்னீங்க" என்று நகைச்சுவையாக பேசியுள்ளார். 83 வயதிலும் ஒரு சிறுவன் போல சிரித்து இந்த விஷயத்தை பகிர்ந்த விதம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

சந்தோஷம் குறையவில்லை

இளையராஜாவின் வாழ்க்கையை நெருக்கமாக அறிந்தவர்கள் சொல்வது ஒன்று. அவருடைய சிறுவயது வசதியானது இல்லை. தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். படிப்பை தொடர முடியாமல் வைகை அணை கட்டுமானப் பணியில் தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்தவர். பிறகு மாதம் ஏழு ரூபாய் சம்பளத்தில் அலுவலக உதவியாளராக பணியை தொடங்கியவர். ஆனால் அந்த வறுமை, அவரிடம் இருந்த இசை ஆர்வத்தையோ, வாழ்க்கை மீதான சந்தோஷத்தையோ பறிக்கவில்லை.

AI-க்கும் சவால் விடும் 83 வயது இளைஞன்

இன்று பலர் செயற்கை நுண்ணறிவு (AI) இசையை பயன்படுத்தி பாடல்கள் உருவாக்கி வரும் காலம் இது. ஆனால் இளையராஜா மட்டும் இன்னும் அதற்கு எதிராகவே நிற்கிறார்.

"AI இசை வந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதைவிட சிறப்பாக நானே உருவாக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்" என்று பல முறை கூறியிருக்கிறார். 83 வயதிலும் புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும், இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பசி அவரிடம் குறையவில்லை. அதனால்தான் ரசிகர்கள் அவரை ஒரு இசையமைப்பாளராக மட்டும் பார்க்கவில்லை.

ஏன் இளையராஜா இன்னும் ஸ்பெஷல்?

பலருக்கு குழந்தைப் பருவம் என்பது கடந்துபோன நினைவு. ஆனால் இளையராஜாவுக்கு அது இன்னும் முடிவடையாத ஒரு பயணம். அதனால்தான் 83 வயதிலும் அவர் இசையை ரசிக்கிறார். புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறார். உலக இசை மேதைகளோடு ஒப்பிட்டு பேசுகிறார். அதே நேரத்தில் ஒரு குழந்தை போல சிரிக்கவும் மறக்கவில்லை. அதனால் தான் ரசிகர்கள் இன்று சமூக வலைதளங்களில் ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் பதிவிட்டு வருகிறார்கள்.

"வயது 83... மனசு இன்னும் 13!"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+