இளமை புதுமை ஸ்வர்ணமால்யாவா இது..? இவரிடம் இத்தனை நகைகளா..!இத்தனை பாரம்பரியம் இருக்கிறதாம்
சென்னை: தொகுப்பாளர் ஸ்வர்ணமால்யா கணேஷ் பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய நகைகள் பற்றி விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தொகுப்பாளராகவும், நடிகையாகவும் இருந்து தற்போது முழு நேரமாக ஒரு நடன ஆசிரியராக மாறி இருக்கிறார்.
தன்னுடைய நடனத்திற்காக தேவைப்படும் நகைகளை வைத்து தற்போது வீடியோ வெளியிட்ட ஸ்வர்ணமாலியாவை பார்த்த ரசிகர்கள் வியந்து போயிருக்கின்றனர்.

பொதுவாக பெண்கள் என்றாலே அவர்களுக்கு அழகுப் பொருள்களும், அழகு சாதனப் பொருட்களும், தன்னை அழகாக காட்டிக் கொள்ளும் பொருள்களும் அதிகமாக பிடித்தது தான். அது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருத்தமானது தான். ஆனாலும் தற்போது ஒரு தொகுப்பாளராகவும் நடிகையாகவும் இருந்து 90's கிட்ஸ்களின் ஃபேவரைட் என்று சொல்லும் ஸ்வர்ணமால்யா தனக்கு விருப்பமானது பற்றி சொன்னது தான் பலருக்கும் வியப்பாக இருக்கிறது.
சன் டிவியில் இளமை புதுமை என்ற நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் பலருடைய மனதையும் கவர்ந்து அதைத்தொடர்ந்து கலக்கப்போவது யாரு, குடும்ப திரை, அன்புள்ள சினேகிதி, நிம்மதி உங்கள் சாய்ஸ் என அடுத்தடுத்து பல சீரியல்களில் நிகழ்ச்சிகளில் முக்கிய பிரபலமாக இருந்து பின்பு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் துணை கதாநாயகியாகவும் ஸ்வர்ணமால்யா நடித்து வந்தார்.
தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்த ஸ்வர்ணமால்யா கடைசியாக புலிவால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு எந்த திரைப்படங்களிலும் தற்போது நடிக்காமல் இருந்து வரும் நிலையில் ஒரு youtube சேனல் ஒன்று தொடங்கி அதில் தன்னுடைய அன்றாட நிகழ்வுகள் தனக்கு பிடித்தது, பிடிக்காதது என பல விஷயங்களை அதில் பகிர்ந்து வருகிறார்.
ஸ்வர்ணமால்யா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், நடன கலைஞராகவும் இருந்து வருகிறார். பரதநாட்டியத்தில் பல பட்டங்கள் பெற்றவராகவும் இருந்து வருகிறார். தன்னுடைய 12 வயதில் அவ்வை நடராஜன் மற்றும் பத்மா சுப்பிரமணியம் ஆகிய வருடம் அரங்கேற்றம் செய்த போது மேடையில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

நாரத கானா சபா, கிருஷ்ண கான சபா மற்றும் விசாக மியூசிக் அகாடமி போன்ற இந்தியாவில் பல சபாக்களில் நடனம் ஆடுவதை தவிர, இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடெல்லி மோதர சன் டெம்பிள் திருவிழா, ஹென்றி மாட்டின் அமைதி திருவிழா போர்ட் பல விழாக்களிலும் இவர் டான்ஸ் ஆடி இருக்கிறார். தற்போது பல நடன கலைஞர்களுக்கு நடனம் கற்பிக்கும் ஆசிரியராகவும் இவர் மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னிடம் இருக்கும் நகைகள் மற்றும் தான் நடனம் ஆடும் போது பயன்படுத்தும் பொருட்கள் பற்றியும் அதனுடைய பாரம்பரியங்கள் பற்றியும் விளக்கமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அந்த வீடியோவில் தான் பயன்படுத்தும் பொருட்களை எந்த மாதிரி பயன்படுத்தி வருகிறேன் என்றும் பல டிப்ஸ்கள் கொடுத்திருக்கிறார். இது பெண்கள் பலருக்கும் உபயோகமாக இருப்பதாக பலரும் கருத்து கூறி வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications