உடைஞ்சு நின்ற வனிதா விஜயகுமார்.. இளையராஜா போட்ட கேஸ்.. ஹைகோர்ட் தந்த உத்தரவை பாருங்க! ஒரு வாரமே டைம்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள "மிஸஸ் அண்ட் மிஸ்டர்"படத்தில், 'சிவராத்திரி துாக்கம் ஏது' என, இடம் பெற்றுள்ள பாடலை நீக்க கோரி, சென்னை ஹைகோர்ட்டில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.. இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், இன்னும் ஒரு வாரத்தில் வனிதா பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள 'மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இதில் ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கிரண், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படம் கடந்த 11ம் தேதி தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிரண் வரும் காட்சியில் இளையராஜா இசையில் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்ற 'சிவராத்திரி தூக்கமேது' பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இளையராஜா பாடல்
இதையடுத்து, தான் இசையமைத்த பாடலை, தன்னுடைய அனுமதியின்றி, படத்தில் பயன்படுத்தியிருப்பதாகவும், பாடலை மாற்றியமைத்துள்ளதாகவும் இளையராஜா தரப்பில், சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், "இது, காப்புரிமை சட்டத்தை மீறிய செயல். உடனே பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.. மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் முறையீடு செய்தார்.
இன்று விசாரணை - பரபரப்பு
இதையடுத்து நீதிபதி, ஜூலை 14ம் தேதி மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெவித்திருந்தார்.. அந்தவகையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. இதில், ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இது தொடர்பாக வனிதா தரப்பில் விளக்கம் அளித்தாலும், மூன்றாம் தரப்பு உரிமத்தைப் பொருட்படுத்தாமல், அவரது நேரடி அங்கீகாரம் அவசியம் என்று இளையராஜாவின் தரப்பு வாதிடுகிறது.
அழுதுகொண்டே பேசிய வனிதா
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக வனிதா விஜயகுமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, "இளையராஜா அங்கிளிடம் நேரில் ஆசீர்வாதம் வாங்கினேன். அவரிடம் பாடல் பயன்படுத்துவது பற்றி சொன்னேன். அவரும் சரின்னு தான் சொன்னார். இதை ஏற்கனவே பேட்டிகளில் சொல்லியிருக்கேன்.
அவர் ஒரு லெஜெண்ட். இசையில் அவர் கடவுள் மாதிரி. கடவுளே நம்மிடம் கோச்சுக்கிட்டா எவ்ளோ கஷ்டமா இருக்கும். சின்ன வயதில் இருந்து அவர் வீட்டில் நான் வளர்ந்திருக்கேன்.. சில விஷயங்கள் பேச முடியாது. உண்மையை சொன்னா தப்பாகிவிடும். அதனால் வேண்டாம்..
அவர் வீட்டில் ஜீவா அம்மாவிடம் லாக்கர் சாவி வாங்கி நகையெல்லாம் எடுத்து அம்மனிடம் போட்டு பூஜை பண்ணியிருக்கேன். நிறைய உழைச்சிருக்கேன். அந்த குடும்பத்தில் மருமகளாக போக வேண்டியவள் நான். இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது" என்று என அழுதுக்கொண்டே பேசியிருந்தார்.
பணம் தரணும்தானே?
இளையராஜாவிடம் பேசும்போது அனுமதி வாங்கியதாக சொன்னாலும், அதற்கு ஏதாவது எழுத்துப்பூர்வமான ஆதாரம் இருக்கிறதா? என்றுதான் சட்டம் பார்க்கும்.. ஒருவேளை இளையராஜா பாடலை பயன்படுத்தி கொள்ள அனுமதி தந்திருந்தாலும், அதற்குரிய பணத்தை இளையராஜாவுக்கு வனிதா தந்திருக்க வேண்டும்தானே? என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
200, 300 கோடியில் படம் எடுப்பவர்களே இளையராஜா பாடலை பயன்படுத்துகிறார்கள்.. அதுபோன்றவர்களிடம் இளையராஜா உரிமம் கேட்கலாம்.. வனிதாவிடமும் உரிமம் கேட்க வேண்டுமா? இதையெல்லாம் இளையராஜா பெருந்தன்மையுடன் கடந்து சென்றிருக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து கூறுகிறார்கள்.
எனவே, இன்றைய தினம் நீதிமன்றத்தில் என்ன நடக்க போகிறது என்ற ஆர்வம் அபரிமிதமாகவே எழுந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் வனிதா பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது பரபரப்பை தந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications