"மருமகள்" வனிதா.. ஆமா, இளையராஜா ஏன் கேஸ் போடணும்? வனிதா விஜயகுமாரின் தூக்கத்தை கெடுத்த சிவராத்திரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த படத்தில் இருந்து 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடலை நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை தந்துள்ள நிலையில், இயக்குனர் நந்தவனம் நந்தகுமார், இதுகுறித்து தன்னுடைய கருத்தை சேனல் ஒன்றிற்கு தந்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். சிவராத்திரி பாடலை தன்னுடைய படத்தில் வனிதா பயன்படுத்தியதால், இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றுள்ளது..

Television Vanitha vijayakumar actress vanitha

இளையராஜா - மருமகள்

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, "இளையராஜா எனக்கு கடவுள் மாதிரி, அந்த கடவுளே கோவிச்சுகிட்டா எவ்ளோ கஷ்டமா இருக்கும். சம்பந்தப்பட்ட இசை நிறுவனத்திடம் இந்த பாடலுக்கான உரிமையை வாங்கியுள்ளோம். அவர் வழக்கு தொடர்வதாக இருந்தால் அந்த நிறுவனத்தின் மீது தான் தொடர வேண்டும்.

சில விஷயம் இங்கே பேச முடியாது.. உண்மைய சொன்னா தப்பா ஆகிடும்.. நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளா போக வேண்டியது" என்று அழுதபடி சொல்லியிருந்தார்.

விஜய் சேதுபதி மகன்

இந்நிலையில், Kingwoods TV என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள ,இயக்குனர் நந்தவனம் நந்தகுமார், தனக்கு 60 வயது நெருங்க போகிற நேரத்தில்தான், விஜய் அரசியலுக்குள் குதிக்கிறார்.. அந்த தளபதிக்கே மற்றொரு அரசியல் கேரக்டராகவே, விஜய் சேதுபதி மகன் சூர்யாவுக்கு சப்போர்ட் செய்துள்ளார்.. சூர்யா தேர்தலில் நின்றால், நாங்கள் ஓட்டுப்போடுவோம் என்ற ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார்..

வனிதா தன்னுடைய படத்துக்கு மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்று பெயர் வைத்துள்ளார். இது mr and mrs smith என்ற ஆங்கிலப்பட டைட்டிலை உல்டா பண்ணி இவர் வைத்திருக்கிறார்.. ஏற்கனவே மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் என்று இங்கு படம் எடுத்துவிட்டார்கள்.. மிஸ்டர் மிஸஸ் என்றெல்லாம் வைத்துவிட்டால், அது ஹிட்டாகும் என்பது நம்புகிறார்கள்..

கிளுகிளுப்பு பாட்டு

தன்னுடைய படத்துக்கு கிளுகிளுப்பான பாட்டு தேவைப்படுகிறது.. அன்று மைக்கேல் மதன காம ராஜர் படத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பாடலை வனிதா , தன்னுடைய படத்துக்கு பயன்படுத்தியிருக்கிறார். இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கெல்லாம் உரிமை கோருவது தவறே கிடையாது.. அது மிகவும் சரியானதும்கூட..

ஆனால், தன்னுடைய பாடல்களை எடுத்து பயன்படுத்துபவர்களுக்கும், அல்லது தன்னுடைய பாடலை எடுத்துவிட்டார்கள் என்று இளையராஜா சொல்லக்கூடிய நபர்களுக்கும், அந்த தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இளையராஜா ஒரு சிங்கம்.. அந்த சிங்கம், சிறு விலங்குகளுடன் சண்டை போடக்கூடாது..

பப்ளிசிட்டி - வனிதா

எனவே, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.. தன்னை வைத்து, ஒருவர் பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறார்களா? அல்லது தன்னை வைத்து ஒருவர் வளர்ந்து கொள்ள முற்படுகிறார் என்றால், அதை விட்டுக்கொடுத்துவிட்டு, அந்த விஷயத்தை விட்டே நகர்ந்துவிட வேண்டும்.. எனவே தன்னுடைய தகுதியிலிருந்து கீழே இறங்கி போய், பிறரிடம் கேள்வி எழுப்பக்கூடாது.

வனிதா இந்த பாடலை எடுத்ததே திட்டமிட்டு செய்ததுதான்.. அப்போதுதான் இதை பொதுவெளியில் விவாதிப்பார்கள் என்று வனிதாவுக்கு தெரியும்..

கடந்து செல்வோம்

இதுவே ஏஆர் ரஹ்மான் பாடலை ஏன் பயன்படுத்தவில்லை? ஏஆர் ரஹ்மான் பாடலை தன்னுடைய படத்துக்காக பயன்படுத்தினால், ஏஆர் ரஹ்மான் இதுகுறித்து எந்த கேள்வியும் அவர் எழுப்ப மாட்டார் என்று வனிதாவுக்கு தெரியும்..

இதுவே இளையராஜா பாடலை பயன்படுத்தினால், நிச்சயம் இளையராஜா கோபப்படுவார் என்றும் தெரியும். எனவே, இளையராஜா ஐயா, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், இக்னோர் செய்துவிட வேண்டும்.

பெரிய பெரிய கம்பெனிகள், அல்லது ரஜினி போன்ற டாப் ஸ்டார்கள் சம்பந்தப்பட்டிருந்தாலோ அல்லது நாம் காப்பிரைட் கோரும்போது, அதற்கான நஷ்ட ஈட்டை தருபவர்களாக இருப்பவர்களிடம் மட்டும், தாராளமாக கேள்வி எழுப்பலாம், நீதி கேட்டும் மனு கோரலாம்.

இளையராஜா போன்றோர்கள் லெஜெண்ட்கள்.. நாமெல்லாம் ஐயாவை பற்றி பேசக்கூட தகுதியில்லை.. எனினும் சில விஷயத்தை லெஜெண்ட்கள் கடந்து போய்விட வேண்டும்.. ஐயா கடந்து போகிறாரோ இல்லையோ, நாம் முதலில் இதைப்பற்றி பேசாமல் கடந்து விடுவதே சரி.. " என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+