ப்ளீஸ்.. தவறான தகவலை பரப்பாதீங்க.. இளையராஜாவின் மருமகள் ஹாசினி திடீர் பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஹாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
ஒரு சிலர் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவர்களுடைய குடும்பத்தை சார்ந்தவர்களால் அவ்வளவு பிரபலம் அடைய முடியாமல் இருக்கிறது. அந்த வகையில் ஒருவர்தான் சீரியல் நடிகை ஹாசினி என்ற விசாலினி.
இவர் இசை அமைப்பாளர் இளையராஜாவின் மருமகள் முறை உறவாகும். இளையராஜாவின் நெருங்கிய உறவினரான ஹாசினி இளையராஜா போலவே பாடல்களை பாடி கொண்டிருந்தாலும் அவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் அதற்காக முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்.

ஆனாலும் கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ஹாசினி சில ஈவெண்டுகளில் பாட்டு பாடியும் அசத்தி வருகிறார். அதோடு தொகுப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் ஒரு பாடகராக இருப்பதால் கான்சென்டர்களில் இவரை அதிகமாக பார்க்கலாம். இந்த நிலையில் ஹாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் என்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு பதில் கொடுக்க விரும்புகிறேன்.
அதாவது இப்போது நான் நம்முடைய நாட்டிலேயே இல்லை, வேறு எங்கேயோ செட்டில் ஆகிவிட்டேன் என்று சிலர் என்னை பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் தவறாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இந்த விஷயத்திற்கு தான் நான் இப்போது முடிவெடுக்க வந்திருக்கிறேன். நான் என்னுடைய சொந்த ஊரான சென்னையில்தான் இருக்கிறேன். அதேபோல தொடர்ந்து என்னுடைய நடிப்பு கான்சன்ட் விஜே எல்லாம் பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன். அதே மாதிரி கார்ப்பரேட் ஈவண்டுகளையும் தொகுத்து வழங்கிட்டும் இருக்கிறேன்.

அதனால் என்னைப் பற்றி ஏதாவது தவறாக கேள்விப்பட்டால் தயங்காமல் எனக்கு போன் செய்து என்னுடைய இருப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ப்ளீஸ் என்னை பற்றி தவறாக வதந்திகளை பரப்பாதீர்கள். என்று அந்த பதிவில் ஹாசினி குறிப்பிட்டிருக்கிறார். அதுபோல ஹாசினி தவமாய் தவமிருந்து என்ற சீரியலில் மூலமாகத்தான் பிரபலமடைந்தார். ஜீ தமிழில் தான் இந்த சீரியல் ஒளிபரப்பானது.
அப்பா மற்றும் மகன், மகள்கள் பற்றிய கதையை மையமாக கொண்டு இந்த சீரியல் இருந்து வந்த நிலையில் கதாநாயகனின் மகளாக ஹாசினி அதில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் மகளாகவும் குழலி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த சீரியலில் இவர் வில்லியா அல்லது நல்லவரா என்று யோசிக்க முடியாத வகையில் தான் இவர்களின் கேரக்டர் இருக்கிறது. சமீபத்தில் கூட நீ நான் காதல் என்று சீரியலில் டெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
