மீண்டும் தந்தையான இசையமைப்பாளர் இமான்.. நெகிழ வைத்த செயல்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: இசையமைப்பாளர் இமான் அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் இமான் கண் தெரியாத மாற்று திறனாளி ஒருவரின் குழந்தையை தத்தெடுத்திருக்கிறார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகர் விஜய் நடித்த தமிழன் படத்தில் தொடங்கி இமானின் திரைப்பயணம் 20 வருடங்களாக வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் கிராமத்து கதை அம்சம் கொண்ட படங்கள் என்றால் அதில் அதிகமாக இமான் தான் இசை அமைத்திருப்பார். பல ஹிட் பாடல்களை கொடுத்த இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு பிளெசிகா, வெரோனிகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 13 வருடங்களாக இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகத் தான் போய்க்கொண்டிருந்தது. பல நிகழ்ச்சிகளிலும் இமான் தன்னுடைய மனைவியோடு கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான் என்று அந்த நேரத்தில் கூறப்பட்டது. சிவகார்த்திகேயனின் பல படங்களில் இமான் இசை அமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் பாடல்கள் ஹிட் ஆகிய இருப்பதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை ஏற்படுத்தி விட்டார் என்று பேட்டி ஒன்றில் பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிறகு மோனிகாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஆறு மாதங்களில் இரண்டாவது திருமணம் கொண்டார். திருமணத்திற்கு பிறகு தன்னுடைய இரண்டாவது மனைவியோடு பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராமிலும் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு நெய்வேலியில் வீடு இன்றி கஷ்டப்பட்ட நரிக்குறவர்களுக்கு வீடு கட்டி கொடுத்து உதவி செய்திருக்கிறார். அதுபோல இப்பொழுது கண் பார்வை இயற்ற தம்பதிகளிடமிருந்து ஒரு பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்திருக்கிறார். அந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கும் நிலையில் இரண்டாவதாக குழந்தை பிறந்ததால் அதை கவனிக்க முடியாமல் அவர்கள் கஷ்டப்பட்டதை தெரிந்துகொண்டு அவர் அந்த தம்பதியின் சம்மதத்தோடு அவர்களின் குழந்தையை தத்தெடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இமான் தந்தையாகி இருக்கும் நிலையில் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications