இமான் முன்னாள் மனைவி மோனிகா சொல்றது பொய்.. நடந்தது இதுதான்..! நடிகை குட்டி பத்மினி சொன்ன பகீர் தகவல்
சென்னை: இசையமைப்பாளர் இமான் சில தினங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் இனி சிவகார்த்திகேயனோடு சேர்ந்து நான் படம் பண்ண மாட்டேன் அது கனவில் கூட நடக்காது என்று காட்டமாக கூறியிருந்த நிலையில் இருவருக்கும் என்ன பிரச்சனை என்பது பற்றி இணையத்தில் அதிகமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
அதுபோல இமான் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி விவாகரத்துக்கு காரணமும் சிவகார்த்திகேயன் தான் என்கிற விதமாக பேச்சு சமூக வலைதளத்தில் எழுந்து வந்த நிலையில் அதற்கு இமானின் முன்னாள் மனைவி மோனிகா வீடியோ ஒன்று வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை குட்டி பத்மினி இமான் பற்றி இமானுடைய முன்னாள் மனைவி சொன்ன தகவல்கள் பொய் என்றும், அப்போது நடந்தது இதுதான் என்றும் வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார். அது பற்றி பார்ப்போம்.
சில தினங்களுக்கு முன்பு இசை அமைப்பாளர் இமான் பேட்டி ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் சிவகார்த்திகேயன் பற்றி அவர் ஜாடை மாடைகளாக முழு கதையும் சொல்லாமல் சொல்லிய விதம் பலரையும் விவாதிக்க வைத்திருந்தது. இதனாலேயே இணையத்தில் அதிகமான பிரபலங்களும் ரசிகர்களும் இதைப்பற்றிய பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அதைத் தொடர்ந்து லியோ வந்ததும் இந்த பரபரப்பு கொஞ்சம் அடங்கியிருந்தது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பையும் மீறி அந்த நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் பிரச்சனை தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருந்தது. அதே நேரத்தில் இமான் அந்த பேட்டியில் பேசும்போது கூட இந்த அளவிற்கு இந்த வீடியோ டிரண்டாகும் என்று நினைத்திருக்க மாட்டார். அதில் அவர் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்.
அவருடன் சேர்ந்து படம் பண்ணுவேன் என்பது கனவிலும் நடக்காத காரியம் என்று பேசி இருந்தார். அதோடு என்ன காரணத்தால் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது என்பதை வெளிப்படையாக இமான் சொல்லவில்லை. அதே நேரத்தில் அதை சொன்னால் தங்களுடைய குழந்தைகளின் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும் என்று கூறியிருந்த நிலையில், சிவகார்த்திகேயன் மீது தான் தப்பு என்று அதிகமானோர் கருத்து தெரிவித்து வந்தனர்.
அதே நேரத்தில் உண்மையில் சிவகார்த்திகேயன் தப்பு பண்ணி இருந்தால் அதை சொல்லி இருக்கலாமே எதற்காக இமான் மூடி மறைக்க வேண்டும் என்றும் ஒருத்தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படியாக இணையத்தில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இமானின் முன்னாள் மனைவியான மோனிகா பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார்.
அதில் சிவகார்த்திகேயன் எங்களை சேர்த்து வைக்க தான் வந்தார் என்றும், அவர் ஒரு ஜென்டில்மேன் என்றும் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்து வந்தது என்று விளக்கம் கொடுத்து இருந்தார். அதோடு இமான் எனக்கு ஜீவனாம்சம் எதுவும் கொடுக்கவில்லை என்றும் ஏற்கனவே இப்போது இருக்கும் மனைவியோடு இமான் திருமணத்திற்கு முன்பே பழகி வந்ததாகவும், ஒரு பெண்ணை பார்த்து வைத்துவிட்டு தான் தனக்கு விவாகரத்து கொடுத்து இருந்தார் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் அவையெல்லாம் பொய் என்று பிரபல நடிகையான குட்டி பத்மினி வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் இமான் வீட்டிற்கும் எங்களுக்கும் மிகவும் நெருக்கம். இமான் ஒரு அம்மாவை போலத்தான் என்னிடம் பழகி வருகிறார். ஆனால் மோனிகா ஜீவனாம்சம் கொடுக்கவில்லை என்று சொல்வதெல்லாம் பொய். மோனிகாவிற்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்சத்தை இமான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது வரைக்கும் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவையும் இமான் தான் பார்த்துக் கொள்கிறார். அதோடு இமானும் அவருடைய தந்தையும் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது நடந்த சம்பவங்கள், அவர்களுக்குள் இருக்கும் சோகங்கள் எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்து இருந்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் இப்போது இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கும் அமலி என்ற பெண்ணை நாங்கள் தான் இமானுக்கு அறிமுகம் செய்து வைத்தோம்.விவாகரத்துக்கு பிறகு அமலியை கல்யாணம் செய்ய அவரை புரிந்து கொள்வதற்காக தான் ஒரு வருடம் அமலியோடு இமான் பழகி வந்தார். ஆனால் இவர்கள் இருவரும் பழகி வந்தது கூட விவாகரத்திற்கு பிறகு தான் என்று அந்த பேட்டியில் குட்டி பத்மினி கூறி இருக்கிறார்.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications