கலகலன்னு கலாய்க்கறாங்க இமான் அண்ணாச்சியை... சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாச்சுங்க!
சென்னை: அண்ணாச்சின்னா தெரு முனைக் கடையில அஞ்சுக்கும் பத்துக்கும் தேங்கா பத்த போட்டு விக்கற அண்ணாச்சின்னு நினைச்சியா... அண்ணாச்சிடான்னு புதிய அவதாரம் எடுத்து இருக்கார் இமான் அண்ணாச்சி.
இமான் அண்ணாச்சி சன் டிவியில குட்டிச் சுட்டீஸ்னு குழந்தைங்களை வச்சு நிகழ்ச்சி நடத்திக்கிட்டு இருந்தார்.ஒரு அஞ்சு வருஷம் நடத்திக்கிட்டு இருந்த இந்த நிகழ்ச்சி திடீர்னு நின்னு போச்சு.

இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் குடும்பங்களின் இளம் பெண்களை வைத்து சீனியர் சுட்டீஸ்னு நிகழ்ச்சி நடத்த ஆரம்பிச்சு இருக்கார்.இதுல முதலில் கலந்துக்கிட்டது நாயகி குடும்பம், இரண்டாவது அழகு, அடுத்து வாணி ராணின்னு இதுவரைக்கும் மூணு எபிசோடு முடிஞ்சு இருக்கு. இந்த நிகழ்ச்சி ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாகிறது.

ஆரம்பமே படு அமர்க்களம், அதாவது வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்னு இவர் ஆரம்பிக்க, வந்து என்னய்யா பண்ணப் போறேன்ற மாதிரி ஒரு சிறுவன் வருகிறான்.யாருடா நீன்னு அண்ணாச்சி கேட்க, அஞ்சு வருஷத்துக்கு முன்னால இதே சேர்ல உட்கார்ந்தவன்தான்னு சொல்றான்.

ஓ.. நீயா எப்படிடா இருக்கன்னு அண்ணாச்சி கேட்க , நீதான் குண்டக்க மண்டக்க பேசி குடும்பத்துல கும்மி அடிச்சுட்டியே... இப்போ என் அக்காளுங்க வராங்க அவங்களுக்கு பதில் சொல்லுன்னு சொல்றான்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அத்தனை இளம் பெண்களும் அண்ணாச்சியை கலாய்ப்பதும் வறுத்தெடுப்பதும்னு சும்மா கலகலன்னு போகுது நிகழ்ச்சி. நல்லாவே வாய்விட்டு சிரிக்கலாம், கூடவே சீரியலில் நடிக்கறவங்க உண்மையான பேர் என்ன, தமிழ் நல்லா பேசறாங்களா இதை தெரிஞ்சுக்க நல்ல வாய்ப்பு .
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications