குட்டிச் சுட்டீஸ்... இமான் அண்ணாச்சி ஹோகயா.. கோவை சரளா ஆகயா!
சென்னை: சன் டிவி வாழ்க்கை குடுப்பாங்க... சரியா வராட்டி டம்மி பீஸாக்கி வழியையும் அடைச்சுருவாங்க. வெளியில வந்து ஷைன் ஆக ரொம்பநாளாகும்.
இப்படித்தான் மக்கள் டிவியில் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்துகொண்டு இருந்தார் இமான் அண்ணாச்சி. அங்கும் சொல்லுங்கண்ணே சொல்லுங்கன்னுதான் மக்களை சந்தித்து நிகழ்ச்சி நடத்திக்கொண்டு வந்தார்.
அவரை அழைத்து வந்த சன் டிவி அதே நிகழ்ச்சியை அவரை வைத்து நடத்தி, இமான் அண்ணாச்சியை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது.

மக்களுக்கு பரிச்சயம்
சன் டிவி மூலம் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பரிச்சயமான முகம் ஆனார். அடுத்தடுத்து சன் டிவி ஏதாவது நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க புகழின் உச்சிக்கும் போனார் அண்ணாச்சி. ஜூனியர் சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அண்ணாச்சியை கோட் ஷூட்போட்டு சன் டிவி அழகு பார்த்தது .

சூப்பர் நிகழ்ச்சி
சன் டிவியின் குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றது. இதற்கு அண்ணாச்சியும் ஒரு காரணம். இவருக்கு இயற்கையாகவே நகைச்சுவை குணம் உண்டு. குழந்தைகளிடம் மடக்கி மடக்கி கேள்விகள் கேட்டு நகைச்சுவையாக்கி சிரிக்க வைப்பார். இப்படி வெற்றி பெற்றது இந்த குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சி.

கொஞ்சம் ஓவர்
இவரையே சீனியர் சுட்டீஸ் என்று நிகழ்ச்சியை நடத்த வச்சது சன் டிவி. இதில் சீரியல்களில் நடிக்கும் இளம் பெண்கள் கலந்துகொள்ள அண்ணாச்சியும் கொஞ்சம் அத்து மீறி நகைச்சுவை என்கிற பெயறில் ஈஷிக்கொண்டு கூத்தடிக்க முகம் சுளிக்கும்படி கூட ஆனது. இந்த நிகழ்ச்சிதான் அண்ணாச்சி மேலான மக்களின் அபிப்பிராயத்தையும் மாற்றிப் போட்டு விட்டது.

இப்போது கோவை சரளா
அதற்கு அடுத்து அண்ணாச்சி நடத்தி வந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டன. முற்றிலுமாக இமான் அண்ணாச்சியை சன் டிவியில் கடந்த சில மாதங்களாக பார்க்கக் முடியவில்லை. அவர் ஏற்கனவே நடத்திய குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியயை இப்போது நடிகை கோவை சரளா தொகுத்து வழங்க உள்ளாராம்.
கடந்த இரண்டு நாட்களாக இதன் ப்ரோமோ சன் டிவியில் வெளியாகி வருகிறது... இன்னொரு விஷயம்.. அண்ணாச்சி இப்போது வேறு டிவிக்கு போய் விட்டார்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications