சிவகார்த்திகேயன் மேட்டரை விடுங்க! இமானின் வாழ்க்கையில் அவங்களுக்குத்தான் முதலிடமாமே! அமலி பேட்டி
சென்னை: இசையமைப்பாளர் டி இமானின் மனைவி தனது கணவர் அவரை எப்படி அழைப்பார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு லியோ படம் குறித்த ஹைப்புகள் எகிறி கொண்டிருந்த நேரம் பார்த்து திடீரென இமான் டிரென்ட்டானார். அவர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் யதார்த்தமாக அவர் பேசியுள்ளார்.

திடீரென நெறியாளர் ஏன் இப்போதெல்லாம் சிவகார்த்திகேயனின் படத்திற்கு இசையமைப்பதில்லை என கேட்டார். அதற்கு இமான் சொன்ன பதில்தான் இன்று வரை டிரென்ட்டாகி வருகிறது.
இமான் கூறுகையில் இனி சிவகார்த்திகேயனோடு சேர்ந்து பணியாற்றுவது கனவில் கூட நடக்காத காரியம். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். எல்லா விஷயத்தையும் சொல்லிவிடலாம். ஆனால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும். அதனால் என்னால் எதையும் முழுவதுமாக சொல்லிவிட முடியாது.
இனி அடுத்த ஜென்மத்தில் நான் இமானாகவும் அவர் சிவகார்த்திகேயனாகவும் பிறந்தால் சேர்ந்து பணியாற்ற வாய்ப்புண்டு. இந்த ஜென்மத்தில் அது நடக்காது என சொல்லிவிட்டார். இதன் மூலம் பலருக்கு சிவகார்த்திகேயனால்தான் இமானுக்கும் அவருடைய முதல் மனைவி மோனிகாவுக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டது என கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இமான் என்ன கூறுகிறார் என்பதே பலருக்கு புரியாத நிலையில் தாமாக ஓடி வந்து சிவகார்த்திகேயனுக்கு மோனிகா கான்டாக்ட் சர்ட்பிகேட் கொடுத்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன் ஒரு ஜென்டில்மேன், என்னை விவாகரத்து செய்ய வேண்டாம் என இமானிடம் அவர் அறிவுறுத்தினார். அது முதல் இமானுக்கு சிவகார்த்திகேயனை பிடிக்கவில்லை. அதனால்தான் இமானை இப்படியெல்லாம் பேசி வருகிறார் என்றார்.
இந்த நிலையில் இமானின் குடும்ப நண்பர் குட்டி பத்மினி நடந்தது என்ன என்பது குறித்து அவருடைய யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார். மேலும் மோனிகா இந்த விவகாரத்தில் பொய் கூறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது ஒரு புறமிருக்க தற்போது இமானின் இரண்டாவது மனைவி அமலி ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் எப்போதும் இமானை வீட்டில் அத்தான் என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை ஆசையாக அம்மு என அழைப்பார், அவர் மிகவும் ரொமான்டிக்கான மனிதர். நிறைய சர்பிரைஸ்களை கொடுப்பார். அவர் மிகவும் அமைதியானவர். எப்போதும் சாந்தமாகவே இருப்பார். அதனால் அவர் செய்யக் கூடிய செயல்கள் அனைத்திலுமே அன்பு என்பது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
அவரது வாழ்க்கையில் முதலில் மகள் நேத்ராவுக்குத்தான் முதலிடம் (இவர் அமலியின் மகள்). இரண்டாவது இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். மூன்றாவது நான். அவருக்கு முதன்முதலில் நான் பரிசாக கொடுத்தது நேத்ராவின் பல்லுதான். சிறு வயதில் விழுந்த நேத்ராவின் பற்களை சேமித்து வருகிறேன். அதில் ஒன்றை அவரிடம் கொடுத்து இது விலை மதிப்பில்லாதது என கூறினேன். இவ்வாறு அமலி தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications