கேரளா துணிக்கடையில் நடந்த சம்பவம்.. பெண்ணை தூக்கி சுற்றிய ஆண்கள்.. அது யாரு தெரியுமா? செம பதிலடி
சென்னை: கேரளாவில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் நடந்த அழகான சம்பவம் சோசியல் மீடியாவில் மோசமாக வைரலாகி வருகிறது. அதாவது அந்த துணிக்கடையில் ஒரு பெண்ணின் உழைப்பை பாராட்டி ஸ்கூட்டர் பரிசாக கொடுத்திருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தை அங்கு இருந்தவர்கள் எல்லோரும் கொண்டாடி இருக்கிறார்கள். இதை பார்த்ததும் சிலர் ஒரு பெண்ணை இப்படியா தூக்குவது? என்று திட்டி தீர்த்து வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணும் அவருடைய மகனும் விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.
அதாவது அந்த சம்பந்தப்பட்ட துணிக்கடையில் சிறப்பாக வேலை பார்த்து வரும் ஊழியர்களுக்கு அந்த கடை நிர்வாகத்தினர் பரிசு வழங்குவது வாடிக்கையாம். அதேபோலத்தான் இந்த முறையும் சிறப்பாக விற்பனை செய்ததற்காக அந்த ஊழியர் அமினாவுக்கு கடை நிர்வாகம் ஸ்கூட்டரை பரிசாக கொடுத்திருக்கிறது. இந்த கடையில் அந்த பெண் 9 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் தான் அவருடைய மகனும் இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வருகிறாராம்.

மகனின் சந்தோசம்
தன்னுடைய அம்மாவிற்கு தான் பெரிய அங்கீகாரம் கிடைத்ததும் சந்தோஷத்தில் அந்த அம்மாவை தூக்கி அவருடைய மகன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். பெத்த அம்மாவின் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரத்தை மகன் மகிழ்ச்சியோடு கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. ஆனால் இவர்கள் இருவருக்கும் என்ன உறவு முறை என்பது யாருக்கும் தெரியாததால் ஒரு கடையில் வேலை பார்க்கும் பெண்ணை சக ஊழியர் ஒருவர் தூக்கி கொண்டாடி இருக்கிறார் என்று அர்த்தத்தில் பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.
மோசமான கமெண்ட்ஸ்
அதிலும் சிலர் மோசமாகவே விமர்சிக்கின்றனர். ஒரு பெண்ணை இப்படியா கண்ட இடத்தில் எல்லாம் தொட்டு தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவ என்று அந்த ஆணை சரமாரியாக திட்ட தொடங்கி விட்டார்கள். இந்த வீடியோ கேரளாவிலா மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலும் வைரலாக தொடங்கி விட்டது. என்ன நடந்தது என்று தெரியவிட்டாலும் வீடியோவை பார்த்ததும் பலருக்குமே இது தவறாக தெரிந்தது. அந்த வீடியோவில் ஆரம்ப காட்சிகள் இல்லை அந்த ஆண் தூக்கிக் கொண்டாடுவது மட்டும் இருப்பதால் அது தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. கடைசியில் இந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட அந்த அம்மாவும் மகனுமே இது குறித்து விளக்கம் கொடுத்து ஒரு வீடியோ வெளியிட்டு விட்டனர்.
அப்போது நடந்த விஷயத்தை பற்றி விளக்கமாக சொல்லி இருக்கிறார்கள். அதற்கு பிறகும் சிலர் விமர்சிக்க தான் செய்கிறார்கள். பொதுவாக சோசியல் மீடியா என்பது கத்தி மேல் பயணிப்பதற்கு சமம் தான். இங்கே நல்ல விஷயங்கள் கூட தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்க படுக்கிறது. முகம் தெரியாதவர்கள் ஃபேக் ஐடி வைத்துக்கொண்டு மோசமாக பேசி வருகிறார்கள். இது பலரையும் மனதளவில் காயப்படுத்தி இருக்கிறது. ஆனாலும் நாளுக்கு நாள் இந்த பிரச்சனை பெரிதாகிக் கொண்டுதான் இருக்கிறது.
மகன் கொடுத்த விளக்கம்
அதோடு அந்த ஆண் என்னுடைய பெத்த அம்மாவை தூக்கி கொஞ்சுவதற்கு நான் யாருடைய அனுமதியும் எதிர்பார்க்க வேண்டியதில்லை, நாங்க சந்தோஷமாக இருக்கிறோம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த விளக்கம் வந்த பிறகு இவர்களைப் பற்றி தவறாக பேசுவதை விட்டுவிடுங்கள் என்று சொல்லி வந்தாலும் பலர் இன்னும் விமர்சித்து வருவது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
