இந்தியன் 2 படமா.. பிக்பாஸ் 8 சீசனா.. "கதறவிட்ட" தாத்தா!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு இன்று வெளியாகி இருக்கிறது. ஆனால் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் போல இது இல்லை, பிக் பாஸ் தமிழ் 8வது சீசன் வந்தால் எப்படி இருக்குமோ அதுபோல தான் இந்தியன் 2வில் முதல் பாதி இருப்பதாக ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கிறது.
பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்த ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், ஜெகன், பாபி சிம்ஹா, மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, மாரிமுத்து என்று பலர் நடித்த இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

இந்தியன் திரைப்படம் தியேட்டரில் சக்கைபோடு போட்டதோடு, ராஜ் டிவியில் முதலில் ஒளிபரப்பியபோது விளம்பர ஆர்டர்கள் வந்து குவிந்ததால், ராஜ் டிவி இந்த படத்தை 6 மணி நேரம் ஒளிபரப்பியது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு தொலைக்காட்சி சேனலில் இவ்வளவு நீண்ட நேரம் ஒரு திரைப்படம் ஓடியது இந்தியன் மட்டுமே.
சுதந்திர போராட்ட காலம், இந்திய அரசு அலுவலகங்கள், ஆஸ்திரேலியாவில் பாடல் காட்சிகள், மாயா மச்சிந்திரா கிராபிக்ஸ் அசத்தல் என அப்போதே அந்த படம் பிரமாண்டத்தை தொட்டுக் காட்டியது. அந்த எதிர்பார்ப்பில் இந்தியன் 2 படத்தை பார்க்க போனவர்களுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அனுபவம் கிடைத்துவிட்டதாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் பிரபலமடைந்து இருந்தாலும் தமிழில் கமல்ஹாசன் மூலமே பெரிய அளவில் பிரபலமடைந்தது என்று சொல்லலாம். உலகநாயகன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் கமல்ஹாசன் முதல் முறையாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்ற போது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு இவருடைய பஞ்சாயத்து பல விமர்சனங்களை பெற்று வந்தது.
இந்த படத்தில் பார்க்கிங் டாக்ஸ் என்னும் youtube சேனலை நடிகர் சித்தார்த் தன்னுடைய நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜெகன் உள்ளிட்டவர்களோடு நடத்தி வருகிறார். அந்த சேனலில், சமூகத்தில் நடக்கும் ஊழல், அநியாயங்களை வீடியோக்களாக வெளியிட்டு தட்டி கேட்கின்றனர். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை என்பதால் இந்திய தாத்தா வந்தால் நல்லா இருக்கும் என்று #comebackindian என்ற ஹேஸ்டேக்கை உருவாக்குகிறார்கள்.
பிக்பாஸ் தொடங்கிய முதல் நாள் அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எல்லோரும் நீண்ட ஒரு அறிமுகத்தை கொடுப்பார்கள். நாங்கள் குழந்தையாக இருக்கும்போது இருந்தே உங்களுடைய ரசிகர், எங்க அம்மா அப்பா உங்களுடைய ரசிகர், எங்க வீட்டில் உங்களுக்கு அவ்வளவு ஃபேன் இருக்காங்க, நீங்கள் தான் எங்களுடைய ரோல் மாடல், உங்களை பக்கத்தில் பார்த்ததில் என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை என்று பல கதைகளை சொல்வார்கள்.
அதுபோல தான் சித்தார்த் மற்றும் அவருடைய நண்பர்கள் பிரியா பவானி சங்கர், ஜெகன் உள்ளிட்டோர் ஓவர் எக்ஸ்பிரஷன் காட்டுகிறார்கள். அதுபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரம் எந்த போட்டியாளருக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருக்கிறதோ அவரிடம் கமல்ஹாசன் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் உள்ளே என்ன நடந்தது? சொல்லுங்க என்று கேட்க, அந்த போட்டியாளரும் நியாயவாதியாக உள்ளே நடந்த நிகழ்வுகளை எல்லாம் கமல் முன்பு சொல்லிக் கொண்டிருப்பார். அது போல தான் சித்தார்த் மற்றும் அவர் நண்பர்கள் வீட்டுக்குள் நடக்கும் ஊழலை லிஸ்ட் ரெடி பண்ணுகிறார்கள்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கும் போது கமல்ஹாசன் டிவி வழியாக அவர்களிடம் பேசுவது போல இந்த படத்திலும் அதிகமாக சித்தார்த் குழுவினரிடம் வீடியோ மூலம்தான் கமல் பேசிக் கொண்டிருக்கிறார். சித்தார்த் மற்றும் நண்பர்கள் கமலிடம் பேசும் காட்சியும், அவர் பதிலுக்கு இவர்களிடம் பேசோ பேசு என பேசிக்கொண்டிருப்பதும் ரசிகர்களுக்கு இது படம் பார்க்கும் தியேட்டரா அல்லது பிக்பாஸ் பார்க்கும் வீட்டு வரவேற்பறையா என்ற சந்தேகத்தை கொடுக்காமல் இல்லை.
முதல் பாதி படத்தை பிக்பாஸ் 8 ஒத்திகைக்காக கமலிடமே விட்டுவிட்டாரா ஷங்கர்?
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications