கர்ப்பத்தை அறிவித்ததும் அவசரமாக மதுரைக்கு கிளம்பிய இந்திரஜா.. இதுதான் காரணமா? குவியும் அட்வைஸ்
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா கர்ப்பமாக இருப்பதாக நேற்று வெளியான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் ப்ரோமோவில் தெரிவித்திருந்தனர். அதற்குப் பிறகு திடீரென்று அவர் மதுரைக்கு போயிருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளி திறையில் பல திரைப்படங்களில் கதாநாயகனுக்கு நிகரான முக்கியமான கேரக்டரில் ரோபோ சங்கர் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த நிலையில் ரோபோ சங்கர் மட்டும் இல்லாமல் அவருடைய ஒரே மகளான இந்திரஜாவும் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பெரிய அளவில் இந்திரஜா பிரபலம் அடைந்திருந்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் சினிமாவில் வரவில்லை. ஆனாலும் சின்ன திறையில் ஒரு சில சீரியல்களில் தன்னுடைய தந்தையோடு ஸ்பெஷல் கெஸ்ட் ஆக
கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் தான் இந்திரஜாவிற்கு அவருடைய மாமாவான கார்த்திக்குடன் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் திருமண செய்தி இணையத்தில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. அதுபோல இவர்களுடைய பிரம்மாண்ட திருமணம் பலரையும் வியக்க வைத்தது. அதுபோல இந்திரஜாவின் திருமணம் ஒரு வாரத்திற்கு மேலாக பல்வேறு பங்க்ஷன்களோடு கொண்டாடப்பட்டது.
இவர்களுடைய திருமணத்தில் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் இந்திரஜா இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது அம்மா அப்பாவாக போகும் மகிழ்ச்சியான செய்தியை மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் பகிர்ந்து இருக்கின்றனர். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கர்ப்பத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரும் சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் சென்று இருக்கின்றனர்.

அப்போது எடுத்த வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திரஜா பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எவ்வளவு தூரம் டிராவல் செய்ய வேண்டுமா? சில மாதங்களுக்குப் பிறகு நீங்கள் வாகனத்தில் செல்லலாமே என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள். ஆனால் சொந்த ஊருக்கு போன இந்திரஜா அங்கு தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதோடு இந்திரஜா வெளியிட்ட பதிவில், ஆமாம் நாங்க அப்பா அம்மாவாக மாறுகிறோம். இந்த பயணம் முழுவதும் உங்கள் பிரார்த்தனையில் எங்களை வைத்திருங்கள். இப்போது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டு விடாதீர்கள்... என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து, என்னுடன் எப்போதும் இருப்பதற்கு நன்றி என்று தன்னுடைய அம்மா, அப்பா மற்றும் தன்னுடைய கணவரை இந்திரஜா டேக் செய்திருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications