நயன்தாரா காட்டிய வெறும் வயிறு! இந்திரஜா இறக்கிய "மூளை வீடியோ".. இன்ஸ்டா பிரபலங்கள் முதலிரவு: பிரபலம்
சென்னை: எல்லா குழந்தைகளுக்குமே, அதன் பெற்றோர்களின் ஜீன்கள்தான் இருக்கும்.. இதுபோக, அந்த குழந்தை வாழக்கூடிய சமூகமும், குழந்தையின் அறிவை வழிநடத்துகிறது. இதுபோக நாம் கற்கும் கல்வியும், நமக்கான அறிவை தருகிறது. ஆனால், ஒரு நிறுவனம், குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தாது. டாக்டர் அம்பேத்கருக்கு எந்த நிறுவனம் மூளையறிவை தந்தது? அப்துல் கலாமை அறிவாளியாக்கியது எந்த நிறுவனம்? என்று சேகுவேரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா, தனது ஆறு மாத குழந்தையை He Guru என்ற நிறுவனத்துக்கு தூக்கி சென்றுள்ளார். குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சியை தூண்டும் பயிற்சியை, அந்த கம்பெனி வழங்குவதாக தெரிகிறது..

இந்த நிறுவனத்துக்குத்தான் தனது குழந்தையை தூக்கி சென்று சில பயிற்சிகள் கொடுக்கப்படும் வீடீயோவை ஷேர் செய்திருந்தார் இந்திரஜா.. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் 6 மாத குழந்தைக்கு இப்போதே இந்த பயிற்சியா? இதெல்லாம் ஓவர்.. அந்த நிறுவனத்தை இப்படியும் ப்ரோமோட் செய்து வீடியோ போடுவதா? எப்போது பார்த்தாலும், தன்னுடைய குழந்தையை வைத்தே ப்ரோமோஷன் செய்து, குழந்தையை வைத்து சம்பாதிக்கிறாரே? என்று கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "இன்ஸ்டா பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள்.. இதற்கு காரணம், இன்ஸ்டா பிரபலங்களை லட்சக்கணக்கானோர் ஃபாலோ செய்கிறார்கள்.. இதனை எப்படி மார்க்கெட்டிங் செய்வது? என்று சில கார்ப்பரேட் டீம்கள் இறங்குகின்றன.
இன்ஸ்டா பிரபலங்கள்
தங்களுடைய புராடக்ட்டை எப்படி நடுத்தர மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது? என்று திட்டமிடுகின்றன.. உதாரணத்துக்கு யூடியூபர் இர்பானை எடுத்து கொண்டால், அனைத்தையுமே விளம்பரம் செய்யக்கூடியவர்.. அவருக்கு 5 லட்சம் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்மூலம் தங்களது பொருளை விற்பனை செய்யவே, சில போலியான கார்ப்பரேட் டீம்கள் யோசிக்கும்.
இத்தனைக்கும் அந்த விற்பனை செய்யும் பொருள் என்னவென்றுகூட இந்த இன்ஸ்டா பிரபலங்களுக்கு தெரியாது.. அப்படித்தான் இந்திரஜாவும் இதற்குள் வருகிறார்.
ரோபோ சங்கர் சிறந்த மனிதர்
ரோபோ சங்கர் மிகச்சிறந்த திறமைசாலி, வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தால் யோகிபாபுக்கு இணையாக உயர்ந்திருக்க முடியும்.. சந்தானம் ரூட்டிலும் வந்திருக்க முடியும்.. ஆனால், பிகில் படத்தில் தன்னுடைய மகள் இந்திரஜா நடித்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு ஆளானார். இப்போது இந்திரஜா திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார், வேறு படங்களில் நடிக்கவில்லை என தெரிகிறது.
இதுபோன்ற செலிபிரிட்டிகளைதான் விளம்பர நிறுவனங்கள் பயன்படுத்தி கொண்டு வருகின்றன.. Complan சாப்பிட்டு, உயரமாக வளர்ந்தவர்கள் இதுவரை எத்தனை பேர் என்று தெரியவில்லை. Fair & lovely பூசி, எத்தனை பேர் சிகப்பாக மாறினார்கள் என்று தெரியவில்லை.
சீதோஷ்ண நிலை + பெற்றோர்களை வைத்துதான் நிறம் அமையும்.. ஆனாலும், செலிபிரிட்டிகளை தங்களது விளம்பரத்துக்காக பயன்படுத்துவது தொடர்ந்தபடியே உள்ளது. பொய்யான விஷயத்தைதான் இந்த உலகம் நம்பி, அதன் பின்னாடியே ஓடிக் கொண்டிருக்கிறது.
குழந்தைகளின் ஜீன்கள்
எல்லா குழந்தைகளுக்குமே, அதன் பெற்றோர்களின் ஜீன்கள்தான் இருக்கும்.. இதுபோக, அந்த குழந்தை வாழக்கூடிய சமூகமும், குழந்தையின் அறிவை வழிநடத்துகிறது. இதுபோக நாம் கற்கும் கல்வியும், நமக்கான அறிவை தருகிறது. ஆனால், ஒரு நிறுவனம், குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தாது. டாக்டர் அம்பேத்கருக்கு எந்த நிறுவனம் மூளையறிவை தந்தது? அப்துல் கலாமை அறிவாளியாக்கியது எந்த நிறுவனம்?
அவ்வளவு ஏன்? ரோபோ சங்கருக்கு மிமிக்ரி அறிவை தந்தது எந்த நிறுவனம்? திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் வேண்டுமானால் அவருக்கு தரப்பட்டிருக்கலாம்.. ஆனால் ரோபோ சங்கரின் திறமைக்கு காரணம் ரோபோ சங்கர் மட்டும்தான். எனவே, ரோபோ சங்கர் மகளுக்கு இதுபோன்ற விளம்பரம் தேவையற்ற அவப்பெயரை தந்துவிட்டது.
நயன்தாரா வயிறு
முதலில் தன்னுடைய திருமணத்தை விற்பனை செய்தார்கள்.. அடுத்து நலுங்கு வைப்பது முதல் அனைத்து சடங்கையும் வீடியோ போட்டார்கள்..
அடுத்ததாக தனிப்பட்ட விஷயமான கர்ப்பத்தையும் வெளிப்படுத்தினார்.. நயன்தாரா ஒருமுறை ஆடையின்றி வெறும் வயிற்றை மட்டுமே காட்டியிருந்தார்.. தங்களது கர்ப்பத்தை காட்டி வெளிப்படுத்தும் முதலிரவு காட்சிகளையும் வெளிப்படுத்துவார்களா? கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். காரணம், அது அந்தரங்கம்.. அதுபோலத்தான் மற்ற குடும்ப விஷயங்களும் அந்தரங்கமானது.. அனைத்துக்குமே வரம்பு உள்ளது.. அடுத்து பிரசவம், முதல் அனைத்தையும் காட்டுகிறார்கள்.
விளையாட்டு பொம்மைகள்
நிறுவனத்துக்காக விளம்பரம் செய்து, கெட்ட பெயரை வாங்கி கொண்டுள்ளார்.. ரோபோ சங்கர் மீது எந்த கெட்ட பெயரும் இதுவரை வந்ததில்லை.. அந்த பெயருக்கும் அவப்பெயர் வந்துவிடக்கூடாது.. ஒரு நிறுவனத்துக்காக விளம்பரம் செய்ய போனால், அது என்ன விளம்பரம்? மக்கள் சேர்ந்தால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? என்பதையும் பிரபலங்கள் யோசிக்க வேண்டும்.
எந்த அறிவுமே குழந்தைக்கு இயற்கையாக வரவேண்டும்.. இப்படி செயற்கையாக எந்த குழந்தையின் மூளையும் வளராது.. ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு விளையாட்டு பொம்மைகளே போதும், வேற எந்த செயற்கையான விஷயமும் தேவையில்லை.. இதுபோன்ற பொய்யான விளம்பரங்களை அப்பாவி மக்கள் நம்பி ஏமாறக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications