அப்பாவுக்கு முத்தம் கொடுத்தால் தப்பா? இப்படி பேசுறாங்களே! கொந்தளித்த ரோபோ சங்கர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு சமீபத்தில் எங்கேஜ்மென்ட் முடிவடைந்திருந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இப்படியான நிலையில் இந்திரஜா தன்னுடைய அப்பா ரோபோ சங்கருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலர் அது குறித்து விமர்சித்து வருகிறார்கள் என்ற நிலையில் அதற்கு இந்திரஜா சங்கர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதில் தன்னுடைய அப்பாவிற்கு முத்தம் கொடுத்தது தவறாக பேசும் நபர்களுக்காக இந்திரஜா சில கேள்விகளை கேட்டு இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Indraja kissing her father Robo Shankar many people are criticizing

அந்த வகையில் ரோபோ சங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு அவர் பற்றி அதிகமான சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை குறைந்து போயிருந்த ரோபோ சங்கர் மீண்டும் தன்னுடைய குடும்பத்தார் மற்றும் தன்னுடைய விடா முயற்சியால் பழைய நிலைக்கு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு சமீபத்தில் எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்தது. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் "பாண்டியம்மா" கேரக்டரில் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். அதுபோல அதை தொடர்ந்து சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளி திரையிலும் நடித்துக் கொண்டிருக்கும் இந்திரஜா சங்கர் தன்னுடைய அம்மாவின் தம்பி அதாவது தன்னுடைய தாய் மாமாவை திருமணம் செய்ய இருக்கிறார். இந்திரஜா சங்கருக்கு அடுத்த மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்காக பிரபலங்களுக்கு ரோபோ சங்கர் தன்னுடைய குடும்பத்தோடு சென்று இன்விடேஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியான நிலையில் இந்திரஜா சங்கரின் எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு புகைப்படத்தில் தன்னுடைய தந்தை ரோபோ சங்கருக்கு இந்திராஜா உதட்டில் முத்தம் கொடுத்து இருக்கிறார். இந்த புகைப்படம் தான் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்திரஜா சங்கர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில் என்னுடைய அப்பாவிற்கு நான் உதட்டில் முத்தம் கொடுத்தால் என்ன தப்பு? நான் எங்க அப்பாவுக்கு சின்ன குழந்தையாக இருக்கும்போது இப்படித்தான் முத்தம் கொடுத்து பழகி இருக்கிறேன். அப்பாவின் மேலே விழுந்து உருண்டு அடித்து விளையாடியிருக்கிறேன். இப்போது எனக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்றால் அதற்காக நான் ஒரு ஸ்டெப் பின்னாடி போகணுமா என்ன?

என்னுடைய அப்பா எனக்கு எப்போதுமே நல்ல பிரண்டு தான். நான் அப்பாவிற்கு கொடுத்த முத்தத்தை கொச்சையாக பேசுபவர்கள் அவர்களுடைய கண்களை தான் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். நான் முத்தம் கொடுத்ததில் எந்த தப்பும் இல்லை. அவர்களுடைய பார்வையில் தான் தப்பு இருக்கிறது. அதனால் அவர்கள் கண்களை முதலில் செக் பண்ண சொல்ல வேண்டும். ஒரு சிலர் இந்த முத்தம் கொடுத்தது பார்க்க அழகாக இருந்தது.

அப்பா மகள் பாசம் எப்போதுமே மாறாதது என்று என்னை வாழ்த்தி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர்தான் என்ன இப்படி பொதுவெளியில் பண்ணுறாங்களே? என்று முகம் சுளித்து வருகிறார்கள். நான் அப்படி முகம் சுளிக்கிற அளவுக்கு தவறான செயல் செய்யவில்லை. என்னுடைய அப்பா தான் எனக்கு உயிர். அவருக்கும் முத்தம் கொடுத்ததில் எனக்கு எந்த தப்பும் தெரியவில்லை என்று கோபமாக அந்த பேட்டியில் இந்திரஜா சங்கர் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+