நடிகை இந்திரஜா- கார்த்திக், ஹல்தி பங்க்ஷன்.. இது கலாச்சார சீரழிவு! இணையத்தில் கொதிக்கும் ரசிகர்கள்
சென்னை: ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா பிகில் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தார். இந்த நிலையில் இந்திரஜாவிற்கும் தொடர்வோம் அறக்கட்டளையின் நிறுவனரும் இயக்குனருமான கார்த்திக்குக்கும் இந்த மாதம் 24 ஆம் தேதி மதுரையில் திருமணம் நடைபெற இருக்கிறது.
கடந்த மாதத்தில் இவர்களுடைய எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்தது. அதைத்தொடர்ந்து பல பிரபலங்களுக்கும் குடும்பமாக இன்விடேஷன் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ஹல்தி பங்க்ஷன் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்று இருக்கிறது.

தொடர்ச்சியாக இந்திரஜா கார்த்திக் ஃபங்ஷனில் கலந்து கொண்ட பிரபலங்கள் அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதை பார்த்த ரசிகர்கள் இவர்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள் தானே எதற்காக வட மாநில பங்க்ஷன்களை கொண்டாடுகிறார்கள்? இப்படி நடிகர்கள் புதியது புதியதாக ஃபங்ஷன் கொண்டாடுவதால் தான் தமிழர்களின் மரபு அழிந்து போய் விடுகிறது என்று பலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
இந்திரஜா மற்றும் கார்த்திக் இருவரின் சொந்த ஊர் மதுரை என்பதால் அவர்களுடைய திருமணத்தை இரு விட்டாரும் மதுரையில் நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள். திருமண நிச்சயதார்த்தத்திற்கு பிறகு இந்திரஜா ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார். இப்படியான நிலையில் இந்திரஜாவின் ஹெல்தி பங்க்ஷனில் அவருடைய குடும்ப நண்பர்களும் திரைத்துறை, சின்னத்திரை சார்ந்த பிரபலங்களும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள். ஆட்டம் பாட்டம் என்று வெகு விமர்சனமாக ஹல்தி பங்க்ஷன் நடைபெற்றது. அதுபோல இந்திரஜாவின் திருமண வரவேற்பு சென்னையில் நடக்க இருக்கிறது. மதுரையில் நடக்கும் திருமண பங்க்ஷனில் கலந்து கொள்ள முடியாத நடிகர்களும் அரசியல் பிரமுகர்களும் சென்னையில் நடக்கும் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்திரஜா சங்கர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்ததும் ரசிகர்கள் ஏன் இவர்கள் இப்படி பங்க்ஷன்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமிழர் முறைப்படி நலங்கு வைக்கும் பங்க்ஷனை நடத்தினால் தானே நமக்கு பெருமை... ஆனால் இவர்கள் வெளி மாநிலத்தவர்களைப் போல மாறிக்கொண்டிருப்பதால் இவர்களை பாலோ பண்ணும் தமிழர்களும் இதே போல பங்க்ஷன்களை எல்லோர் வீட்டிலும் வைக்க தொடங்கி விடுவார்கள்.
சமீபத்தில் கூட நடிகர் விஜயகுமார் வீட்டில் ஒரு வாரமாக இப்படி விடுவிதமான பங்ஷன்கள் நடைபெற்றது. அதை தொடர்ந்து அதே பாலோ பண்ணி ரோபோ சங்கரின் மகள் திருமணத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதே வரிசையில் இனி எல்லோரும் வட மாநில பங்க்ஷன்களை கொண்டாட கூடிய நிலை வந்து விடும் என்று பலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications