இரண்டு மாசம் ஆகிடுச்சு.. கணவரோடு மகிழ்ச்சியை பகிர்ந்த இந்திரஜா.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் தனக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதம் கடந்துவிட்ட நிலையில் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக புகழடைந்த ரோபோ சங்கர் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் உழைப்பால் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சினிமாவில் இப்போது கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். ஆனால் சமூக வலைத்தளத்திலும் செய்தி சேனல்களிலும் இவர் பற்றிய செய்திகள் அடிக்கடி இடம் பிடித்துக் கொண்டிருப்பது வாடிக்கைதான் இருக்கிறது.

சில வருடங்கள் மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் தன்னுடைய வீட்டில் கிளி வளர்த்து சிக்கலில் சிக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து ரோபோ சங்கர் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனாலும் தன்னுடைய மனைவி மற்றும் மகளின் விடாமுயற்சியால் ரோபோ சங்கர் மீண்டும் பழைய நிலைக்கு வந்திருந்தார்.
அதைத் தொடர்ந்து ரோபோ சங்கரின் மகள் எங்கேஜ்மென்ட் திருமணம் என்று எப்போதுமே பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் குடும்பத்தை பற்றி சிலர் நெகட்டிவ்வாகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் ரோபோ சங்கரின் உழைப்பை குறித்து பாராட்டுபவர்களும் அதிகமானோர் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு அவருடைய மாமா கார்த்திக்குடன் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதில் சின்னத்திரை வெள்ளித்திரை என்று பல பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர். இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
அதைத்தொடர்ந்து ரோபோ சங்கர் தன்னுடைய குடும்பத்தோடு சேர்ந்து பேட்டிகளிலும் பேசிக் கொண்டிருந்தார். அதுபோல ரோபோ சங்கரின் மனைவி மற்றும் ரோபோ சங்கரின் மருமகன் டான்ஸ் ஆடும் போது எதிர்பாராத விதமாக முத்தம் கொடுத்த புகைப்படங்களும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அதற்கும் கூலாக விளக்கம் கொடுத்தனர்.
இந்த நிலையில் ரோபோ சங்கரின் மகள் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அதுக்குள்ள கல்யாணம் ஆகி இரண்டு மாசம் ஆயிடுச்சு" என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு அதிகமான சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் அவருடைய திருமண வாழ்க்கை இதுபோன்று மகிழ்ச்சியாக தொடர வேண்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications