மயூவால் கதறி அழுத இனியா..ராதிகாவால் மோசமான நிலைமையில் கோபி..சரியான தண்டனை கோபிக்கு கிடைத்து விட்டது
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் பள்ளியில் கோபியின் செயலால் இனியா அவமானப்பட்டு கதறி அழுது கொண்டிருக்கிறார்.
இனியாவின் நிலைமையை பார்த்து அவருக்கு உதவ கூட முடியாமல் ராதிகா செய்த செயலை நினைத்து கோபி மனதிற்குள்ளே புலம்பி கொண்டிருக்கிறார்.
மயூ, எனக்குத்தான் கோபி அப்பா என்ற உரிமை போராட்டத்தால் இனியா கோபியின் மீது மேலும் வெறுப்பாக மாறி இருக்கிறார்.

இனியா முன்பு வெறுப்பேற்றிய மயூ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், கோபி இனியவை பார்த்து ஸ்கூலில் அப்படியே நிற்கிறார் மயூ மற்றும் ராதிகாவோடு நடந்து வந்த கோபி ஏன் திடீரென நின்று விட்டார் என ராதிகா அந்தப் பக்கமாக திரும்பிப் பார்த்து அங்கே பாக்யா மற்றும் இனியா இருப்பதை பார்த்து கோபத்தில் முறைக்கிறார். சிறிது நேரத்தில் மயூ வந்து வாங்க டாடி என அவரை கையை பிடித்து அழைத்துச் செல்கிறார். இதை பார்த்த இனியா அதிர்ச்சி அடைகிறார். அவரோடு இருந்த சக மாணவிகளும் என்னது இனியா அப்பாவை அந்த பொண்ணு அப்பா என்று அழைக்கிறது என தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

முதல் முறை கையெழுத்து
மயூ கோபியின் கையை பிடித்து இழுத்தபடியே சென்று கொண்டிருக்கும்போது கோபி திரும்பி திரும்பி பார்க்கிறார். ராதிகா, கோபியை பார்த்து முறைத்தபடியே நடந்து கொண்டிருக்கிறார். கோபி அந்த இடத்தை விட்டு சென்றதும் அருகில் இருந்த இனியாவின் தோழியின் அம்மா, இனியா அப்பா வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரா? என கேட்கின்றனர். இனியாவிற்கு கையெழுத்து முதல் முறையாக பாக்கியா போடுகிறார் .அது போல மயூவோட அப்பா என கோபிக்கு கையெழுத்து போடுகிறார். முதல் முறையாக மயூவுக்கு அப்பா வந்திருக்கிறார் என்று அவருடைய டீச்சர் கேட்கின்றனர். அதே நேரத்தில் இனியாவுடைய அப்பா வரலையா என்று டீச்சர் கேட்கும்போது இனியாவின் முகம் மாறுகிறது.

மீண்டும் வெறுப்பேற்றிய மயூ
கையெழுத்து போட்டுவிட்டு கிளம்பிய கோபி நான் இனியாவை பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று ராதிகாவிடம் கூறுகிறார். இனி எதற்கு நீங்க அங்கே போக வேண்டும். அதான் இனியாவுக்கு அவங்க அம்மா இருக்காங்க, நீங்க மயூவுக்கு தான் வந்தீங்க என்று ராதிகா பேசுகிறார். இதுவரைக்கும் இனியாவுக்காக நான் தான் வந்திருக்கிறேன். போய் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று கெஞ்சியப்படி கிளம்புகிறார். நானும் கூடவே வருவேன் என மையூர் கோபியின் கையைப் பிடித்துக் கொண்டு போகிறார் .அங்கே பாக்கியாவும் இனியாவும் அறையில் இருந்து வருகின்றனர் .அப்போது இனியாவிடம் டாடி வரவாடா என கேட்கிறார். அதற்கு வேண்டாம் அம்மா பேசிட்டாங்க என இனியா கூறுகிறார். இனியாவிடம் கோபி பேசுவதை பார்த்துக் கொண்டிருந்த மயூ, வாங்க டாடி போகலாம் என கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார். இதனால் இனியா கோபத்தில் அதிர்ச்சியோடு இருக்கிறார்.

தன்னையே நொந்து கொண்ட கோபி
மயூ காரின் அருகில் வந்ததும் நீங்க எனக்கு யாரு என கேட்க, டாடி என கோபி சொல்கிறார் .அது எப்படி நீங்க இனியா அக்காவுக்கும் டாடி எனக்கும் டேடியா என மயூ கேட்கிறார். அதற்கு கோபி ஆமாம் இனியாவுக்கு முதலில் டாடி இப்போ உனக்கு டாடி என சொல்லி காரில் ஏற சொல்லி அனுப்புகிறார். பிறகு ராதிகா, கோபத்தில் இருக்கிறார் எதற்கு கோபமாக இருக்கிறாய் என்று கேட்க, உங்க மேல தான் பயங்கரமாக கோபத்தில் இருக்கிறேன் என்று கூறுகிறார். ஸ்கூலுக்கு வந்த வேலையை பார்க்க வேண்டியது தானே? நீங்க பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல, என கோபத்தில் பேசுகிறார். தன்னுடைய நிலைமையை நினைத்து நொந்தவாரு கோபி காரில் கிளம்புகிறார். அடுத்து பாக்கியா இனியாவுடன் ஹோட்டலுக்கு வந்து அவளுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து கொடுத்து கொண்டிருக்கிறார். அதை பெருமையாக இனியா பார்த்துக் கொண்டிருக்கிறார். வருத்தப்படாமல் படிப்பிற்கு கவனம் செலுத்த வேண்டும் என்று பாக்கியா அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications