இனியா சீரியல் நடிகர் இத்தனை திரைப்படங்களை இயக்கி இருக்கிறாரா? அதுவும் காலா பட நடிகையின் கணவராம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் எல். ராஜா கதாநாயகனின் அப்பா கேரக்டரில் நடித்து வருகிறார்.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் இயக்குனராகவும் இருந்திருக்கிறார்.
அதோடு நடிகர் அர்ஜுன் வைத்து கிட்டத்தட்ட ஆறு திரைப்படங்களை நடிகர் எல் ராஜா இயக்கி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் எல்.ராஜா காலா படத்தில் நடிகர் ரஜினி காந்த் மனைவியாக நடித்த ஈஸ்வரியின் கணவர் தானாம்.

சீரியல் நடிகர்
சின்னத்திரையாக இருந்தாலும் சரி, வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி அங்கே திரைக்குப் பின்னால் பணிபுரியும் பலரும் ரசிகர்களுக்கு தெரிவதே இல்லை. ஒரு சில நேரங்களில் அவர்களுடைய உண்மை தெரியும் போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த மாதிரி தான் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் நடிகர் எல். ராஜா பற்றி பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எல் ராஜா என்பவர் வேறு யாரும் இல்லை இனியா சீரியலில் கதாநாயகனின் அப்பாவாக நடித்து ஆலியா மானசாவுடன் சண்டையிட்டு மல்லு கட்டி கொண்டு இருப்பவர் தான்.

நடிகை ஈஸ்வரி ராவ்
அது மட்டுமல்லாமல் எல். ராஜா நடிகை ஈஸ்வரி ராவின் கணவர் தானாம். நடிகை ஈஸ்வரி மற்றும் இயக்குனர் ராஜா கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை ஈஸ்வரி ராவ் தமிழில் 1990 ஆம் ஆண்டு வெளியான கவிதை பாடும் அலைகள் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருக்கிறார். அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு என்று பலமொழிகளிலும் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் கன்னட திரைப்படங்களில் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். நாளைய தீர்ப்பு படத்தில் இரண்டாம் ஹீரோயினியாக இவர் நடித்திருந்தார்.

தனுஷ் அக்கா
அது மட்டுமல்லாமல் இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் திரைப்படத்தில் சுள்ளான் அக்காவாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் இவர் அறிமுகமானது கதாநாயகியாக இருந்தாலும் பிறகு தனுஷின் அக்காவாக நடித்து பிறகு நடிகர் ரஜினிகாந்துக்கு மனைவியாக காலா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இயக்கிய திரைப்படங்கள்
எல் ராஜா ஒரு இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாத கதைதான். இவர் நடிகர் அர்ஜுன் நடித்த சங்கர் குரு என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். இவர் 9 திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அதில் ஆறு படங்கள் அர்ஜுன் நடித்தவை தானாம். பிறகு 30 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 2008 ஆம் ஆண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் ராஜா நடித்திருக்கிறார். இவர் நடிப்பிற்காக அறிமுகமானதற்குப் பிறகு நாடோடிகள் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் தான் இதுவரைக்கும் எல். ராஜா 35 திரைப்படங்களில் நடித்திருக்கிறாராம்.

சீரியல்களில் தொடரும் நடிப்பு
அதுமட்டுமில்லாமல் எல். ராஜா ரகுவம்சம் என்ற சீரியலின் மூலமாக அறிமுகமாகி பிறகு வாழ்க்கை, பிரிவோம் சந்திப்போம், உதிரி பூக்கள், நெஞ்சம் மறப்பதில்லை, பூவே பூச்சூடவா, கண்மணி, இரட்டை ரோஜா போன்ற பல சீரியகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது கூட இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலிலும் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பை பார்த்து பலரும் திட்டிக் கொண்டிருக்கின்றனர் இந்த சீரியலில் இவர் ஆண் என்ற கர்வத்தில் பெண்களை அடக்கி ஆண்டு கொண்டு இருக்கும் நபராக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications