இனியா சீரியல் சொதப்பல்.. அந்த சத்தம் மட்டும் கேட்காதா..? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் 200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் ரிஷி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ஆனாலும் இந்த சீரியலில் சுவாரசியத்திற்காக செய்த செயல் இப்போது ரசிகர்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் புதியதாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் தனி வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் ஒரு சீரியல் தான் இனியா சீரியல். இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா இதுவரைக்கும் விஜய் டிவியில் நடித்து வந்த நிலையில் இப்போது சன் டிவியில் முதல்முறையாக நடிக்கிறார்.
டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் ஆலியா மனசா சீரியல் பெண்கள் வளர்ச்சிக்காகவும் மற்றும் பெண் அடிமைத்தனத்துக்கு எதிராகவும் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஆலியா மானசா இனியா கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு கதாநாயகனாக ரிஷி ஆரம்பத்தில் பெண்கள் ஆண்களுக்கு அடிமையானவர் என்கிற கேரக்டரில் இருந்தார். பின்பு இனியா மீது காதல் தொடங்கியதும் மனம் மாறிவிட்டார்.

இந்த நிலையில் இனியாவின் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. அந்த ரகசியம் இனியா மற்றும் விக்ரமிற்கு மட்டும்தான் தெரிந்திருக்கிறது. அப்பாவின் ஆபரேஷன் செலவுக்காக இனியா வீட்டிற்கு தெரியாமல் பார்க்கில் இட்லி கடை போட்டு இருந்தார். அதுதான் இப்போது கலாய்க்கப்படுகிறது.
காலை நான்கு மணிக்கே வீட்டில் இருப்பவர்கள் யாரும் எழுவதற்கு முன்பு இனியா இட்லி கடைக்கு தேவையான வேலைகளை எல்லாம் செய்து முடித்து அரக்க பறக்க காலை நேரத்தில் பலர் நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் தன்னுடைய இட்லி கடையை தொடங்கி விடுவார். இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதாவது சீரியலில் சுவாரசியம் வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத மாதிரியாக கதையை யோசிப்பாங்கலா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
காரணம் இனியா சமையல் வேலைகளை தொடங்கும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு சத்தம் கேட்டு விடக்கூடாது என்பதற்காக இட்லி பொடியை அம்மியில் அரைத்து எடுத்துக் கொள்வார். ஆனால் அதே நேரத்தில் பாத்திரங்களில் அருகம்புல் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ் என்று விதவிதமாக ஜூஸுகளை மட்டும் அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார். இது மட்டும் எப்படி சாத்தியமானது என்று தான் இப்போது கேள்வி கேட்கத் தோணுகிறது.

இட்லி பொடி கூட மிக்ஸியில் அரைக்க முடியாமல் தவிக்கும் இனியா ஜூஸ் மட்டும் எப்படி ரெடி பண்ணினார் என்பது புரியாத புதிர். அதே நேரத்தில் இந்த சீரியலில் சந்தானம் அதாவது இனியாவின் அப்பாவிற்கு உடல்நிலை பிரச்சனையைப் பற்றி யாழினி இடம் சொன்னாலே யாழினி திருந்தி விடுவார்.
ஆனால் அதை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இவர்கள் மறைத்து கொண்டு இருப்பதால் இனியாவின் அக்காவான யாழினி வீட்டில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இதையும் இன்னும் எத்தனை நாட்களுக்கு இழுத்துக் கொண்டே போவார்கள் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடிக்கும் பெண்களுக்கு இனியாவின் முயற்சிகள் உத்வேகம் கொடுக்க வகையில் இருக்கும். ஆனால் இதை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்தும் போது எந்த வீட்டிலும் இத்தனை பேருக்கு சமையல் செய்யும்போது கிச்சன் இவ்வளவு நீட்டாக வைத்திருக்க முடியாது என்பது தெரியும்.

அதேபோல இட்லி கடைக்கு தேவையான அரிசி ஊற வைக்கிறதிலிருந்து காய்கறிகள் வாங்கிட்டு வருவது வரை எவ்வளவு சிரமங்கள் இருக்கும் என்பதும் தெரியும். அதையும் கொஞ்சம் விலாவாரியாக வைத்திருந்தால் கதை இன்னும் நன்றாக இருந்திருக்கும். எப்படியோ கடைசியில் ஆலியாவின் இட்லி கடை குடும்பத்திற்கு தெரிந்து விட்டது.
அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விக்ரம் மற்றும் இனியா இருவரும் ரொமான்ஸ் ஆக பாட்டு பாடி டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து இப்போது அதிகமான மீம்ஸ்களும் கமெண்டுகளும் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த ப்ரோமோவை பார்த்தால் ஆலியா மனசாவின் கணவர் சஞ்சீவ் என்ன சொல்லுவார் என்று தான் பலர் கேள்வி கேட்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications