அப்பாவி நிலா.. அகங்காரி நீலாம்பரி.. அறியாமலே சூழ்ச்சி வலை!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலா நீலாம்பரியின் மகன் சஞ்சயை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லிடறா.இதை கேள்விப்பட்ட நிலாவின் காதலன் கார்த்திக் வேதனையில் தண்ணியடிச்சுட்டு கார் ஓட்டறான்.
கார் ஆக்சிடென்ட் ஆகி, கார்த்திக்குக்கு பலத்த அடி பட்டுடுது. நீலாம்பரியின் தம்பிதான் கார்த்திக்குக்கு ரத்தம் தர்றான். அவன் நிலாவிடம் சொல்ல, நிலா ரொம்ப அழுகிறாள், கார்த்திக்கை பார்க்க நிலாவின் அம்மா அனுமதி தரலை.

எப்படியோ, தோழியை வரவழைச்சு பர்தா போட்டுக்கிட்டு, தோழி மாதிரி வெளியில போயி கார்த்திக்கை பார்த்து பேச, அவன் பேச மறுக்கிறான்.
அப்போதான், நீலாம்பரி ஆன்ட்டி ரொம்ப நல்லவங்க. எனக்கு முன்னமேயே அவங்களை தெரியும். என்னைத்தான் பொண்ணு பார்க்க வரதா நீலாம்பரி ஆன்ட்டிக்குத் தெரியாதாம். இப்போ, நீ சம்மதம் சொல்லிடு, நான் நேரம் பார்த்து உன்னையும், கார்த்திக்கையும் சேர்த்து வச்சுடறேன்ன்னு சொல்றாங்க.
இல்லேன்னா இவங்க உனக்கு வேற மாப்பிள்ளை பார்த்து எப்படியும் கல்யாணம் செய்து வச்சுருவாங்கன்னு சொன்னதா நிலா சொல்றா. கார்த்திக்கும் உன்னை தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்றான்.

நிலா உடனே நீலாம்பரிக்கு போன் செய்து, ஆன்ட்டி கார்த்திக்குக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சு ஆன்டின்னு சொல்லிட்டு அழறா. நானும் கேள்விபட்டேன்மா..நீ போன் பண்ணி விசாரிச்சியான்னு கேட்கறாங்க. இல்ல ஆன்ட்டி நான் ஆஸ்பத்திரிக்கு வந்துட்டேன்னு சொல்றா நிலா.
எனக்கு மருமகளாகப் போறவ நீ..என்கிட்டயே காதலனைப் பார்த்ததா சொல்றியான்னு மனசுக்குள்ள பேசிக்கறா. ஆன்ட்டி எனக்கு ஒரு உதவிசெய்ங்க ஆன்ட்டின்னு கேட்கறா.. என்னம்மான்னு கேட்க.. கார்த்திக்கை தனியா விட்டுட்டு என்னால் போக முடியாது ஆன்ட்டி.. அதனால வேற யாரையாவது உங்களால கார்த்திக்கை பார்த்துக்க அனுப்பி வைக்க முடியுமான்னு அப்பாவியா கேட்கறா நிலா.

வரும்கால மாமியார்கிட்டயே காதலனைப் பார்த்துக்க ஆள் கேட்கறியான்னு நீலாம்பரி கேட்க, நிலா ஆன்ட்டின்னு அதிர்ச்சியாக.. இல்லைம்மா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.சரிம்மா நான் ஆள் அனுப்பறேன்னு சொல்லிட்டு போனை வச்சுடறாங்க.
இப்போ நிலாவின் அம்மாவுக்கு போன் பண்ணி, இப்படித்தான் நிலாவை ஊர் சுத்த விடுவீங்களா, உங்க சம்பந்தமே வேணாம்னு முடிவு எடுக்க போறேன்னு சொல்ல, அதிர்ச்சியாகறாங்க நிலாவின் அம்மா.
சம்பந்தி.. என்ன சொல்றீங்கன்னு கேட்க. காதலனை பார்க்க நிலா போயிருக்கா, முதல்ல நிலா வீட்டுல இருக்காளான்னு பாருங்கன்னு சொல்றாங்க நீலாம்பரி. நிலாவின் தாய் மாமன் மாடி ஏறி நிலா இருக்காளான்னு பார்க்க போக, அங்க நிலாவுக்கு பதில் அவள் தோழி இருக்கறதை மாமா பார்த்துருவாரா?

நீலாம்பரி தன்னை டார்கெட் வைத்திருப்பதை அறியாமலே நீலாம்பரியின் சூழ்ச்சி வலையில நிலா விழுந்து கிடக்கா.. காப்பாற்றுவார் யார்?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications