பார்ட் டைம் பாய் ஃபிரண்டாக ஜாயின் பண்ணி இருக்கேன்.. முத்துக்குமரனின் லீலை வீடியோவை லீக் பண்ணிய பெண்
சென்னை: இன்று தாராபுரம் மதுராங்கம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் அதை தாண்டி பிக் பாஸ் முத்துக்குமரன் பற்றிய செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்படுகிறது. முத்துக்குமரன் பற்றி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை இன்ஸ்ட்டா பிரபலம் வாஹதா சொல்லி வருகிறார். அதோடு தனிமையில் இருவரும் இருக்கும்போது எடுத்த வீடியோக்களையும் வாஹதா வெளியிடுகிறார்.
சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் முத்துக்குமரனை தெரிந்திருக்கும். சோசியல் மீடியாவில் மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சியில் தமிழை பற்றி பேசி பிரபலமானார். அதை தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்றார். ஆனால் இப்போது தன்னுடைய தற்கொலைக்கு காரணம் முத்துக்குமாரன்தான் என்று வீடியோ வெளியிட்ட வாஹதா பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
வாஹதாவும் ஏற்கனவே சோசியல் மீடியாவில் பிரபலமானவர் தான். சில மாதங்களுக்கு முன்பு இவர் வீடியோ வெளியிடுவது குறித்து வந்த விமர்சனங்களுக்காக தனது சொந்த ஊரில் இருப்பவர்களை விளாசி எடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அப்போது இவருடைய துணிச்சலை பலரும் பாராட்டி இருந்தார்கள். ஆனால் இப்போது அவர் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவில் மது அருந்தியபடி, புகைப்பிடித்தபடி முத்துக்குமரனை பற்றி பேசியிருந்தார்.

முத்துக்குமரன் பற்றிய சர்ச்சை
இதற்கு முன்பு சில பிரேக் அப் சந்தித்ததாகவும், அதனால் தற்கொலை முயற்சி செய்தேன். அதற்கு பிறகு ஒருவரை திருமணம் செய்து கொண்டு இப்போது 5 வயதில் குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்து விட்டது. அதை தொடர்ந்து ஒருவருடன் பிரேக்கப் நடந்தது அந்த சமயத்தில்தான் முத்துக்குமரன் அறிமுகமானார். அவர் என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தனிமையில் என்னுடன் இருந்து விட்டு இப்போது திருமணத்திற்கு மறுக்கிறார் என்று சொல்லியபடி தற்கொலை முயற்சி செய்திருந்தார். அந்த வீடியோக்களை அவர் சோசியல் மீடியாவில் முதலில் பகிர்ந்து இருந்தார். பிறகு அதை டெலிட் செய்யப்பட்டிருந்தது.
முத்துக்குமரன் விளக்கம்
அதனால் இவருக்கு என்ன ஆனது என்ற குழப்பம் ரசிகர்களுக்கு இருந்தது அந்த சமயத்தில் நான் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று ஒரு இன்ஸ்டா ஸ்டோரி போட்டு இருந்தார். உடனே பலரும் முத்துக்குமரனை விமர்சிக்க தொடங்கி விட்டனர். இந்த சமயத்தில் முத்துக்குமாரன், வாஹதா என்னுடைய தோழிதான் ஆனால் எதற்காக அவர் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. விளக்கம் கேட்டு இருக்கிறேன் என்று ஒரு விளக்கமும் கொடுத்திருந்தார்.
அடுத்தடுத்த பதிவு
இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இன்று காலையில் சில வீடியோக்களை வாஹதா தன் இன்ஸ்டால் பக்கத்தில் போட்டிருந்தார். அதில், தான் முத்துக்குமரனை அவருடைய வீட்டில் சந்தித்தபோது எனக்கு பீரியட்ஸ் அந்த நேரத்தில் கூட முத்துக்குமரன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்லி இருந்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த வீடியோவை டெலிட் செய்திருக்கிறார். இன்ஸ்டா ஸ்டோரியில் மட்டும் அதை வைத்திருக்கிறார். பிறகு இன்னொரு பதிவில் இது ரேப் கிடையாது.. நம்ப வைத்து ஏமாற்றியது.. என்று சொல்லி இருக்கிறார்.
பார்ட் டைம் பாய் ஃபிரண்ட்
அதைத்தொடர்ந்து இப்போது ஒரு வீடியோவை வாஹதா வெளியிட்டு இருக்கிறார். அதில் முத்துக்குமரன் அரைகுறை உடையுடன் இருக்கிறார். அவரிடம் வாஹதா சொல்லுங்க என்று சொன்னதும், முத்துக்குமரன் நான் இப்போ பார்ட் டைம் ஆக இவங்களுக்கு பாய் பிரண்டாக ஜாயின் பண்ணி இருக்கிறேன். இவங்கதான் அக்சப்ட் பண்ணனும் என்று சொல்ல, அதற்கு வாஹதா சிரித்தபடியே வெயிட் பண்ணுங்க பார்ப்போம் என்று சொல்கிறார்.

வாஹதா புது வீடியோ
இந்த வீடியோவை இப்போ அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து lets rot in hell together. goodbye என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இருவரும் நரகத்தில் ஒன்றாக அழுகிப் போவோம்.. விடைபெறுகிறேன் என்பது போல அந்த பதிவில் அவர் சொல்லி இருக்கிறார். இது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து முத்துக்குமரன் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்து என்ன மாதிரியான வீடியோ வெளிவரும் என்று எதிர்பார்ப்பு இன்னும் சிலருக்கு இருக்கிறது.




Click it and Unblock the Notifications
